ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

மேக் இன் இந்தியா தயாரிப்பான நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஒட்டுமொத்தமாக 15 நாடுகளில் விற்பனைச் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

'மேக் இன் இந்தியா' அல்லது 'மேக் இன் சென்னை' என எப்படி வேண்டுமானாலும் நிஸான் (Nissan) நிறுவனத்தின் தயாரிப்புகளை குறிப்பிடலாம். இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சென்னை, ஒரகடத்தில் செயல்பட்டு வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் மேக்னைட் (Nissan Magnite) கார்களே தற்போது நாடு முழுவதிற்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

நம் நாட்டிற்கு மட்டுமில்லைங்க உலகின் பல்வேறு சந்தைகளுக்கும் நம் சென்னையில் இருந்தே மேக்னைட் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்தவகையில், ஒட்டுமொத்தமாக 15 நாடுகளுக்கு நம் நாட்டில் இருந்து மேக்னைட் கார்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றது.

ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

"மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்" என நிஸான் நிறுவனம் மேக்னைட் காரை குறிப்பிட்டுள்ளது. நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், இலங்கை, புருனே, உகாண்டா, கென்யா, சீஷெல்ஸ், மொசாம்பிக், ஜாம்பியா, மொரிஷியஸ், தான்சானியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு நம் நாட்டில் இருந்தே மேக்னைட் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

இதுமட்டுமின்றி தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டே நிறுவனம் அவ்வாறு குறிப்பிட்டுள்ளது. நிஸான் நெக்ஸ்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் திட்டத்தின் வாயிலாக அறிமுகம் செய்த முதல் காராகவும் மேக்னைட் இருக்கின்றது.

ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை 42 ஆயிரத்திற்கும் அதிகமான மேக்னைட் கார்களை நிஸான் நிறுவனம் அதன் சென்னை ஆலையில் உற்பத்தி செய்திருக்கின்றது. கோவிட் 19 வைரஸ் பரவல் மற்றும் சிப் பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்கள் நிலவியபோதிலும் இத்தகைய சிறப்பான நடவடிக்கையை நிஸான் மேற்கொண்டிருக்கின்றது.

ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

நிஸான் நிறுவனம் மேக்னைட் காரை 2020ம் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதுவரை 78 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகளை இக்கார் குவித்திருக்கின்றது. மேலும், 6,344 யூனிட்டுகள் வரை உலக நாடுகளுக்கு மேக்னைட் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. இது உண்மையிலேயே மிக சிறப்பான வரவேற்பை வெளிக்காட்டக் கூடிய புக்கிங் மற்றும் ஏற்றுமதி விபரம் ஆகும்.

ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

மேலும், இந்தியர்கள் மத்தியில் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதை இந்த புள்ளி விபரம் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவின் மலிவு விலை வாகனமாக இது நாட்டில் விற்பனைக்கு அறிமுகமாகியது. ரூ. 5 லட்சம் என்ற விலையிலேயே இக்கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ரூ. 5.76 லட்சம் என்ற உச்ச விலையில் இக்கார் விற்பனைச் செய்யப்படுகின்றது.

ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

நிஸான் மேக்னைட், காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற நிறுவன தயாரிப்புகளான கியா சொனெட், ரெனால்ட் கைகர், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஆகியவற்றிற்கு போட்டியாக உள்ளது.

ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றம், அதிக தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்திலும் நிஸான் மேக்னைட் மிக சிறப்பான தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. இதன் விளைவாக உள் மற்றும் வெளிநாடுகளில் இக்காருக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைக்கக் காரணமாக அமைந்திருக்கின்றது.

ஹையோ... நம்ம சென்னைல தயாராகும் நிஸான் மேக்னைட் இத்தன நாட்டுல விற்பனையாகுதா? நம்ம ஊரு தயாரிப்புனா சும்மாவா!!

நிஸான் மேக்னைட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் குறைந்தபட்சம் 2 ஏர்பேக்குகள் வழக்கமான அம்சமாக வழங்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி இஎஸ்பி, டிராக்சன் கன்ட்ரோல், ஏபிஎஸ், 360 டிகிரி கேமிரா சிஸ்டம், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்களும் மேக்னைட்டில் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Make in india nissan magnite suv exported to 15 countries
Story first published: Friday, January 28, 2022, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X