Just In
- 8 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 11 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
- 11 hrs ago
5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!
- 11 hrs ago
வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!
Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உல்லாச கப்பல் மாதிரியான காரை வாங்கிய நிவின் பாலி... இந்த காரை சொந்தமாக்க அவர் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
உல்லாச கப்பல் மாதிரியான சொகுசு காரை நடிகர் நிவின் பாலி புதிதாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வரும் மிக விலையுயர்ந்த கார் மாடலாக வெல்ஃபையர் இருக்கின்றது. இந்த காருக்கு மலையாள திரையுலகினர் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது என்றே கூறலாம். ஏனெனில், மாலையாள நடிகர்கள் பலர் இக்காரை தங்களுக்கு சொந்தமாக்கியிருக்கின்றனர்.

மோகன்லால், சுரேஷ் கோபி, ஃபஹத் ஃபாசில், விஜய் பாபு உள்ளிட்ட பலர் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வரிசையிலேயே தற்போது மற்றுமொரு மலையாள நடிகர் இணைந்திருக்கின்றார். நிவின் பாலியே அந்த நடிகர் ஆவார். பிரேமம் படத்தின் வாயிலாக அனைத்து இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக மாறியவர் நிவின் பாலி.

இந்த படமே அவருக்கு மிக பெரிய சந்தையை ஏற்படுத்துக் கொடுத்தது என்றுகூட கூறலாம். அந்தளவிற்கு மிக பெரிய சந்தையை பிரேமம் படம் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் தற்போது மலையாள திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் இவரும் ஒருவராக மாறியிருக்கின்றார்.

இத்தகைய ஓர் நடிகரே தற்போது கருப்பு நிறத்திலான டொயோட்டா வெல்ஃபையர் சொகுசு எம்பிவி ரக காரை வாங்கியிருக்கின்றார். இதனை எம்பிவி கார் என்று கூறுவதற்கு பதிலாக உல்லாச கேரவன் என கூறலாம். அந்தளவிற்கு மிகப்பெரிய இட வசதியை உட்பக்கத்தில் இக்கார் கொண்டிருக்கும். தி எக்சிகியூட்டிவ் லான்ச் எனும் ஒற்றை தேர்வில் மட்டுமே இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 90.80 லட்சம் ஆகும். ஆன்-ரோடில் கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகள் மிக தாரளமாக இக்காரில் இடம் பெற்றிருப்பதே இத்தகைய உச்சபட்ச விலையில் வெல்ஃபையர் கிடைக்க காரணமாக இருக்கின்றது.

காருக்குள் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து இருக்கைகளும் மிக மிருதுவமானவை ஆகும். அதனை தேவைக்கேற்ப மிக தாழ்வாக சாய்த்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாக படுத்துக் கொண்டு பயணிப்பதைப் போன்ற அனுபவத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர பெரிய திரைகள் மற்றும் ஒய்-ஃபை ஹாட்ஸ்பாட் வசதியும் வழங்கப்பட்டுள்ளன.

இவை நீண்ட தூர பயணத்தை சுவாரஷ்யமானதாக மாற்றிக் கொள்ள உதவும். இதுதவிர, இன்னும் சில திரைகளும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜர், கேப்டைன் ரக இருக்கை மற்றும் பன்முக கன்ட்ரோல்கள் அடங்கிய ஸ்டியரிங் வீல் ஆகியவையும் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுமாதிரியான மிக சூப்பரான அம்சங்கள் கொண்ட டொயோட்டா வெல்ஃபையர் காரையே நடிகர் நிவின் பாலி தற்போது வாங்கியிருக்கின்றார். டொயோட்டா வெல்ஃபையர் காரை கவர்ச்சியான ஒன்றாக காட்டும் விதமாக ஹெட்லேம்ப், முக்கோண வடிவத்தில் பனி மின் விளக்கு, பகல்நேரத்தில் ஒளிரக் கூடிய மின் விளக்குகள், குரோம் பூச்சுக் கொண்ட ரேடியேட்டர் கிரில் மற்றும் புதுமையான தோற்றத்திலான பம்பர் உள்ளிட்டவை வெல்ஃபையரில் வழங்கப்பட்டுள்ளன.

இக்காரில் ஹைபிரிட் வசதிக் கொண்ட 2.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இ,ந்த 2494 சிசி திறன் கொண்ட மோட்டராகும். இது, 115.32 பிஎச்பி மற்றும் 198 என்எம் டார்க்கை வெளியேற்றும். டிரான்ஸ்மிஷன் வசதிக்கா இக்காரில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சக்கரங்களுக்கும் இயங்கு விசையை வழங்க இதுவே உதவுகின்றது.

டொயோட்டா வெல்ஃபையர் காரில் இடம் பெற்றிருக்கும் ஹைபிரிட் அம்சமானது, காரின் இயக்கத்தின் வாயிலாகவே சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்ஜின் பயன்பாட்டைக் குறைக்க இந்த செயல்பாடு மிக உதவியாக இருக்கும். இதற்காக 105kW மற்றும் 50kW என இரு மின் மோட்டார்கள் முன் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தானாக சார்ஜ் செய்து கொள்ளும் பேட்டரியிடம் இருந்து மின்சாரத்தை பெற்று இயங்கும்.

இதுமட்டுமின்றி அதிக பாதுகாப்பை வழங்கும் வகையிலும் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 7 எஸ்ஆர்எஸ் ஏர் பேக்குகள், பனோரமிக் வியூவ் மானிட்டர், ஏபிஎஸ்,இபிடி, பிஏ, இபிஎஸ், டிஆர்சி மற்றும் விஎஸ்சி ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளும் வெல்ஃபையரில் வழங்கப்பட்டுள்ளன.
-
இந்தியாவில் ரீ-என்ட்ரீ கொடுக்க தயாரானது முன்னணி பைக் நிறுவனம்... மொத்தமா 4 டூ-வீலர்களை களமிறக்க போறாங்களாம்!
-
சூப்பரான புதுமுக எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை ரூ. 1.60 லட்சம் மட்டுமே!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?