எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

பெட்ரோல், டீசல் வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால், மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அவற்றை வாங்கி பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

எனவே சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில், விலை குறைவான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில், தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை (Basavaraj Bommai), தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

'EV Campaign 2022' மற்றும் 152 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். இதில், 'EV Campaign 2022' என்பது பொதுமக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதுதான், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''சாமானிய மக்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும்.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

எனவே எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என்றார். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில் 'பேட்டரி ஸ்வாப்பிங்' (Battery Swapping) முக்கிய அம்சமாக இருக்கும் என்றும், வரும் நாட்களில் அதற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

சார்ஜ் தீர்ந்து போன பேட்டரியை, பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களில் (Battery Swapping Stations) கொடுத்து விட்டு, சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை எலெக்ட்ரிக் வாகனங்களின் உரிமையாளர்கள் பெற்று கொள்வதுதான் பேட்டரி ஸ்வாப்பிங். இதன் மூலம் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் உரிமையாளர்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

உடனடியாக பேட்டரியை மாற்றி கொண்டு பயணத்தை தொடரலாம். எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டுமென்றால், பேட்டரி ஸ்வாப்பிங்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் முக்கிய பங்காற்றும். தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் மிக அதிக எண்ணிக்கையில் சாலைகளுக்கு வந்து கொண்டுள்ளன. வெகு விரைவில், எலெக்ட்ரிக் கார்கள், எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் எலெக்ட்ரிக் மல்டி-ஆக்ஸில் லாரிகள் போன்றவையும் அதிகளவில் சந்தைக்கு வரும்.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களுக்கு மாற்றாக விரைவில் கொண்டு வருவதற்கு, மாற்று எரிபொருட்களில் அதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதும் அவசியம்'' என்றார். பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் சார்பில் (Bangalore Metropolitan Transport Corporation - BMTC), அதிக எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

எனவே வரும் காலங்களில் பெங்களூர் நகரில், நிறைய எலெக்ட்ரிக் பஸ்களை நாம் காணலாம். இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு நகரங்களில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் டீசல் பஸ்களுக்கு படிப்படையாக விடை கொடுத்து விட்டு, எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்

எலெக்ட்ரிக் பஸ்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி எரிபொருள் மூலமாக இயங்கும் பேருந்துகளுக்கும் தற்போது அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிஎன்ஜி கார்களுக்கும் தற்போது இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே வரும் காலங்களில் நிறைய சிஎன்ஜி கார்களின் அறிமுகத்தையும் நாம் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Manufacturers should focus on making affordable electric vehicles says karnataka cm
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X