ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

மாருதி சுஸுகி கார் விற்பனையாளர்கள் சிலர் ஸ்விஃப்ட் சிஎன்ஜி (Maruti Swift CNG) காருக்கான புக்கிங் பணிகளை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

இந்தியர்களின் ஃபேவரிட் கார் என மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரை கூறலாம். கவர்ச்சிகரமான தோற்றம், குறைவான பராமரிப்பு மற்றும் அதிக மைலேஜ் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியர்களின் விருப்பமான காராக அது காட்சியளிக்கின்றது. இந்த கார் தற்போது பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்துடன் கூடுதல் ஓர் புது மோட்டார் தேர்வையே மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

ஆமாங்க, இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படும் சிஎன்ஜி (Swift CNG) ஆப்ஷனே ஸ்பிஃப்ட் காரில் வழங்கப்பட இருக்கின்றது. இதன் அறிமுகம் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக நாட்டில் அரங்கேற இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்கள் சிலர் சிஎன்ஜி ஸ்விஃப்ட் காருக்கான புக்கிங் பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இது மாருதியின் அதிகாரப்பூர்வ புக்கிங் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

விரைவில் விற்பனைக்கு அறிமுகாக இருக்கும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரை போலவே ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் சிஎன்ஜி ஸ்விஃப்ட் காருக்கான புக்கிங்கை மாருதி சுஸுகி கார் விற்பனையாளர்கள் ஏற்க தொடங்கியிருக்கின்றனர். நேற்றையே (ஆகஸ்டு 10) தினமே ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கின. இதன் அதிகாரப்பூர்வ வருகை வரும் 18 ஆம் தேதி அரங்கேற இருக்கின்றது.

ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

இந்த நிலையிலேயே மற்றுமொரு புதுமுக வாகனமாக ஸ்விஃப்ட் சிஎன்ஜி நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. மெக்கானிக்கல் அம்சத்தைப் பொருத்தவரை ஸ்விஃப்ட் டிசையர் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கூறுகளே சிஎன்ஜி ஸ்விஃப்டிலும் பயன்படுத்தப்பட இருக்கின்றது. டிசையர் சிஎன்ஜி தேர்வில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் கே-சீரிஸ் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

இந்த மோட்டாரே மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி-யில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 98 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே மோட்டார் பெட்ரோலில் இயங்கும்போது அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 30 கிமீ முதல் 32 கிமீ வரையில் மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிற சிஎன்ஜி வாகன மாடல்களைப் போலவே ஸ்விஃப்ட் சிஎன்ஜி தேர்விலும் சிஎன்ஜி வாயுவை சேமித்து வைக்க பயன்படும் சிலிண்டரை பின்பக்க பூட்-ஸ்பேஸில் நிலை நிறுத்தி உள்ளது. நிறுவனத்தின் இந்த செயலால் பூட் ஸ்பேஸில் லக்கேஜை வைப்பதற்கான இடம் சற்றே குறைந்து காணப்படுகின்றது. இது கவலையளிக்கும் தகவலாக உள்ளது.

ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரின் வருகையை எந்த வகையிலும் உறுதிப்படுத்தாத காரணத்தினால் ஸ்விஃப்ட் சிஎன்ஜி என்ன மாதிரியான புதிய வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது தெரியவில்லை. அதேவேலையில், தற்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான பெட்ரோல் ஸ்விஃப்டைப் போல் அதிக சிறப்பு வசதிகளுடன் அது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

அதாவது, விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் காரில் இடம் பெற்றிருக்கும் அனைத்து முக்கிய அம்சங்களையும் ஸ்விஃப்ட் சிஎன்ஜியில் எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில் கூடுதலாக சில பிரீமியம் அம்சங்கள் அல்லது தொழில்நுட்ப வசதிகளும் சிஎன்ஜி ஸ்விஃப்ட் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், உருவத்திலும், ஸ்டைலிலும் எந்த மாற்றமும் இருக்காது.

ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சிஎன்ஜி கார்களுக்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே நிறுவனம் அதன் பெரும்பாலான புகழ்மிக்க தயாரிப்புகளை சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களில் ஒன்றான ஸ்விஃப்ட் விரைவில் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.

ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!

தற்போதையே நிலவரப்படி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் ரூ. 5.91 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஸ்மார்ட் ப்ளே ஸ்டுடியோ, எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், டிஆர்எல், க்ரூஸ் கன்ட்ரோல், 2 டோன் அலாய் வீல் ஆகிய அம்சங்களுடன் ஸ்விஃப்ட் கார் தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Source: Motor Octane

Most Read Articles
English summary
Maruti car dealers started unofficial bookings for swift cng
Story first published: Thursday, August 11, 2022, 17:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X