எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னேற்றம் காணும் மாருதி சுஸுகி!! ஆனாலும் உள்நாட்டு விற்பனை குறைவு!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த பயணிகள் கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னேற்றம் காணும் மாருதி சுஸுகி!! ஆனாலும் உள்நாட்டு விற்பனை குறைவு!

மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 1,21,995 பயணிகள் கார்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2021 ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து 1,35,879 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

Maruti Sales Apr-22 Sales Vs Difference Growth (%)
Apr-22 1,21,995 Apr-21 (YoY) -13,884 -10.22
Apr-21 1,35,879 Mar-22 (MoM) -11,866 -8.86
Mar-22 1,33,861
எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னேற்றம் காணும் மாருதி சுஸுகி!! ஆனாலும் உள்நாட்டு விற்பனை குறைவு!

இந்த வகையில் பார்க்கும்போது மாருதி கார்களின் விற்பனை கிட்டத்தட்ட 10.22% குறைந்துள்ளது. அதேபோல் 2022 மார்ச் உடன் ஒப்பிடுகையிலும் மாருதி சுஸுகியின் கடந்த 2022 ஏப்ரல் மாத விற்பனை 8.86% குறைவாகும். ஏனெனில் கடந்த மார்ச் மாதத்திலும் 1,33,861 மாருதி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னேற்றம் காணும் மாருதி சுஸுகி!! ஆனாலும் உள்நாட்டு விற்பனை குறைவு!

அளவில் சிறிய மாருதி மினி & காம்பெக்ட் கார்களை பொறுத்தவரையில், இவை கடந்த ஏப்ரல் மாதத்தில் 76,321 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரலில் இதனை காட்டிலும் 23 ஆயிரம் மாருதி மினி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மாருதியின் மினி கார்கள் பிரிவில் ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ மாடல்கள் அடங்குகின்றன.

எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னேற்றம் காணும் மாருதி சுஸுகி!! ஆனாலும் உள்நாட்டு விற்பனை குறைவு!

இவற்றில் ஆல்டோ 17,137 யூனிட்களும், எஸ்-பிரெஸ்ஸோ 25,041 யூனிட்களும் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காம்பெக்ட் கார்கள் பிரிவில் பலேனோ, செலிரியோ, டிசைர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை அனைத்தும் மொத்தமாக கடந்த ஏப்ரலில் 59,184 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் 2021 ஏப்ரலில் இவற்றின் மொத்த விற்பனை எண்ணிக்கை 72,318 ஆக பதிவாகி இருந்தது.

எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னேற்றம் காணும் மாருதி சுஸுகி!! ஆனாலும் உள்நாட்டு விற்பனை குறைவு!

நடுத்தர-அளவு செடான் கார்கள் பிரிவில் தற்போதைக்கு சியாஸ் என்கிற ஒற்றை மாடலை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது. சியாஸின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 579 யூனிட்களாகும். ஆனால் 2021 ஏப்ரலில் 1,567 சியாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவ்வாறு மற்ற பிரிவுகளில் கார்கள் விற்பனையில் சற்று சரிவுகளை சந்தித்திருப்பினும் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் யூவி (எஸ்யூவி & எம்பிவி) கார்கள் விற்பனையில் கடந்த மாதத்தில் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னேற்றம் காணும் மாருதி சுஸுகி!! ஆனாலும் உள்நாட்டு விற்பனை குறைவு!

மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 33,941 யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 25,484 மாருதி யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த 2021 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் ஏறக்குறைய 8500 யூனிட்கள் அதிகமாகும். மாருதி ஈக்கோ வேன்கள் கடந்த மாதத்தில் 11,154 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இது 2021 ஏப்ரலில் விற்கப்பட்ட ஈக்கோ வேன்களின் எண்ணிக்கையை காட்டிலும் சில நூறு யூனிட்கள் மட்டுமே குறைவு ஆகும்.

எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னேற்றம் காணும் மாருதி சுஸுகி!! ஆனாலும் உள்நாட்டு விற்பனை குறைவு!

உண்மையில் மாருதி ஈக்கோ வேன்களின் விற்பனை இந்திய சந்தையில் நல்லப்படியாகவே உள்ளது. பெரியதாக எந்த பிராண்டில் இருந்தும் போட்டி இல்லாததால், நீண்ட வருடங்களாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஈக்கோ வேன்கள் ஒவ்வொரு மாதத்திலும் விற்பனையாகி கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்த மாருதி சுஸுகியின் பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் சற்று குறைந்துள்ளதாக ஏற்கனவே கூறிவிட்டோம்.

எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னேற்றம் காணும் மாருதி சுஸுகி!! ஆனாலும் உள்நாட்டு விற்பனை குறைவு!

ஆனால் குறை-எடை கமர்ஷியல் வாகனமாக மாருதி சுஸுகி விற்பனை செய்யும் சூப்பர் கேரியின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் 4,266 யூனிட்களாக முன்னேற்றம் கண்டுள்ளது. ஏனென்றால், 2021 ஏப்ரலில் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் ஏறக்குறைய 3 ஆயிரம் யூனிட்கள் குறைவாக 1,272 சூப்பர் கேரி வாகனங்களே விற்கப்பட்டு இருந்தன.

எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னேற்றம் காணும் மாருதி சுஸுகி!! ஆனாலும் உள்நாட்டு விற்பனை குறைவு!

மொத்தமாக மாருதி சுஸுகியின் கடந்த மாத உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை (பயணிகள் கார்கள் + குறை-எடை கமர்ஷியல் வாகனம்) 1,26,261 யூனிட்களாக பதிவாகி உள்ளது. அதுவே 2021 ஏப்ரலில் இந்த எண்ணிக்கை 1,37,151 யூனிட்களாகும். இவை தவிர்த்து கூட்டணி கொள்கையின்படி, ஏறக்குறைய 6 ஆயிரம் அர்பன் க்ரூஸர் & க்ளான்ஸா கார்களை தனது தொழிற்சாலையில் தயாரித்து டொயோட்டாவிற்கு கடந்த மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

Most Read Articles
English summary
Maruti car sales april 2022 decline
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X