மாருதி சுஸுகி ரயில்களை பயன்படுத்தி எத்தனை கார்களை அனுப்பியிருக்கு தெரியுமா? இதுலயும் மாருதிதான் முதல் இடமா?..

கடந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேத் துறையை பயன்படுத்தி மாருதி சுஸுகி நிறுவனம் பிரமாண்ட அளவில் புதிய வாகனங்களை விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இதுலயும் மாருதிதான் முதல் இடமா?.. கடந்த நிதியாண்டில் எத்தனை கார்களை இந்திய ரயில்வே வாயிலாக மாருதி அனுப்பியிருக்கு தெரியுமா?

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதியின் தயாரிப்புகள் எப்போதும் முதல் இடத்தைப் பிடித்துவிடுகின்றன.

இதுலயும் மாருதிதான் முதல் இடமா?.. கடந்த நிதியாண்டில் எத்தனை கார்களை இந்திய ரயில்வே வாயிலாக மாருதி அனுப்பியிருக்கு தெரியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியன் ரயில்வே துறையைப் பயன்படுத்தி புதிய வாகனங்களை டீலர்களுக்கு அனுப்பி வைப்பதிலும் இந்த நிறுவனமே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் நிறுவனம் 2.33 லட்சம் யூனிட் வாகனங்களை இந்தியன் ரயில்வேவைப் பயன்படுத்தி அனுப்பி வைத்திருக்கின்றது.

இதுலயும் மாருதிதான் முதல் இடமா?.. கடந்த நிதியாண்டில் எத்தனை கார்களை இந்திய ரயில்வே வாயிலாக மாருதி அனுப்பியிருக்கு தெரியுமா?

இது கடந்த எட்டு ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக அதிகளவிலான வெளியேற்றுதல் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனமே இந்தியன் ரயில்வேவைப் பயன்படுத்தி கார்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதியைப் பெற்ற முதல் நிறுவனம் ஆகும். இது கடந்த 2013 ஆம் ஆண்டில் வாகனங்களை ரயில்களை பயன்படுத்தி வெளியேற்றி வருகின்றது.

இதுலயும் மாருதிதான் முதல் இடமா?.. கடந்த நிதியாண்டில் எத்தனை கார்களை இந்திய ரயில்வே வாயிலாக மாருதி அனுப்பியிருக்கு தெரியுமா?

நிறுவனத்திடம் அதிக வேகத்தில் செல்லக் கூடிய மற்றும் உயர் திறன் கொண்ட ஆட்டோ வேகன் ரேக்குகள் பயன்பாட்டில் உள்ளன. சுமார் 41 ரயில்வே ரேக்குகள் அதனிடத்தில் உள்ளன. ஒவ்வொரு ரேக்குகளிலும் சுமார் 300 வாகனங்களை ஏற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுலயும் மாருதிதான் முதல் இடமா?.. கடந்த நிதியாண்டில் எத்தனை கார்களை இந்திய ரயில்வே வாயிலாக மாருதி அனுப்பியிருக்கு தெரியுமா?

இந்த மாதிரியான சூழலிலேயே சென்ற நிதியாண்டில் அதிகளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்து மாருதி சுஸுகி சாதனைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 23 சதவீதம் அதிகளவில் இம்முறை வாகனங்களை அனுப்பி வைத்திருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுலயும் மாருதிதான் முதல் இடமா?.. கடந்த நிதியாண்டில் எத்தனை கார்களை இந்திய ரயில்வே வாயிலாக மாருதி அனுப்பியிருக்கு தெரியுமா?

ரயில் பயன்பாட்டினால் முற்றிலுமாக 174 மில்லியன் எரிபொருள் பயன்பாட்டை ஒழிக்க முடிந்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தனை பிரமாண்ட எண்ணிக்கையிலான வாகனங்களை டிரக் வாயிலாக ஏற்றுமதி செய்திருந்தால் 1.56 லட்சம் ட்ரக்குகள் தேவைப்பட்டிருக்கும்.

இதுலயும் மாருதிதான் முதல் இடமா?.. கடந்த நிதியாண்டில் எத்தனை கார்களை இந்திய ரயில்வே வாயிலாக மாருதி அனுப்பியிருக்கு தெரியுமா?

மேலும், இவற்றை இயக்க பெரும் பொருட் செலவும் ஏற்பட்டிருக்கும். இவையனைத்தையும் மாருதி சுஸுகி தற்போது தவிர்த்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக பெருமளவிலான கார்பன் வாயு வெளிப்பாடும் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது இங்கு கவனித்தகுந்தது.

இதுலயும் மாருதிதான் முதல் இடமா?.. கடந்த நிதியாண்டில் எத்தனை கார்களை இந்திய ரயில்வே வாயிலாக மாருதி அனுப்பியிருக்கு தெரியுமா?

உலகிற்கே பெருத்த அச்சுறுத்தலாக காற்று மாசுபாடு மாறியிருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மின் வாகன பயன்பாட்டை பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு மாற்றாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

இதுலயும் மாருதிதான் முதல் இடமா?.. கடந்த நிதியாண்டில் எத்தனை கார்களை இந்திய ரயில்வே வாயிலாக மாருதி அனுப்பியிருக்கு தெரியுமா?

இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியன் ரயில்வே துறையை பயன்படுத்தி மாருதி சுஸுகி சூப்பரான காரியத்தைச் செய்திருக்கின்றது. இந்தியாவில் இன்னும் சில நிறுவனங்களும் இந்தியன் ரயில்வே துறையை பயன்படுத்தி வாகனங்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுலயும் மாருதிதான் முதல் இடமா?.. கடந்த நிதியாண்டில் எத்தனை கார்களை இந்திய ரயில்வே வாயிலாக மாருதி அனுப்பியிருக்கு தெரியுமா?

ரயில்வேதுறை அமைச்சகம் இதுமாதிரியான செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் விதமாக வாகன உற்பத்தியாளர்களுக்கு கணிசமான சலுகைகளை வழங்கி வருகின்றது. அது, நிறுவனங்களுக்கு கூடுதல் லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், பல நிறுவனங்கள் இந்திய ரயில்வேவை தங்களின் பொருட்களை ஓர் இடத்தில் மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைப்பதைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

Most Read Articles
English summary
Maruti dispatches 2 33 lakh units vehicles via indian railways in last fiscal
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X