மாருதி எர்டிகா காரில் புதிய சிஎன்ஜி வேரியன்ட்... பெட்ரோல் விலை உயர்வால் இனி இந்த கார்களுக்கு தான் மவுசு...

மாருதி நிறுவனம் எர்டிகா காரில் புதிதாக சிஎன்ஜி வேரியன்ட்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

மாருதி எர்டிகா காரில் புதிய சிஎன்ஜி வேரியன்ட் . . . பெட்ரோல் விலை உயர்வால் இனி இந்த கார்களுக்கு தான் மவுசு . . .

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100ஐ தாண்டி விற்பனையாகும் நிலையில் ஃபாக்டரி பிட்டட் சிஎன்சி கார்களுக்கு மார்கெட்டில் நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. முன்னால் சிறிய கார்களில் சிஎன்ஜி வேரியன்ட்களை தான் மக்கள் அதிகம் விரும்பினர். பெரிய கார்களில் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு டிமாண்டே இருக்காது ஆனால் இப்பொழுது காலம் மாறி பெரிய கார்களுக்கும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளது. இதை மனதில் வைத்து மாருதி நிறுவனம் எர்டிகா காரில் சிஎன்ஜி வேரியன்ட்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

மாருதி எர்டிகா காரில் புதிய சிஎன்ஜி வேரியன்ட் . . . பெட்ரோல் விலை உயர்வால் இனி இந்த கார்களுக்கு தான் மவுசு . . .

தற்போது மாருதி நிறுவனம் எர்டிகா காரில் VXI மற்றும் ZXI ஆகிய கார்களில் மேலும் அந்நிறுவனம் கமர்ஷியல் வாகனங்களுக்காக வழங்கும் Tour M வேரியன்ட்களிலும் ஒரே ஒரு அப்ஷனில் மட்டுமே சிஎன்ஜி வேரிண்ட் இருக்கிறது. இந்நிலையில் மாருதி நிறுவனம் சமீபத்தில் புதிய சிஎன்ஜி வேரியன்ட் கார்களை அறிமுகப்படுத்த ஒப்புதல் வாங்கியுள்ளது.

மாருதி எர்டிகா காரில் புதிய சிஎன்ஜி வேரியன்ட் . . . பெட்ரோல் விலை உயர்வால் இனி இந்த கார்களுக்கு தான் மவுசு . . .

அதன்படி புதிதாக (O) என்ற ஆப்ஷன் சிஎன்ஜி வேரியன்ட்களில் எர்டிகா காரை அந்நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த கார்களில் வாடிக்கையாளர்கள் சிஎன்ஜி தேர்வில் காருக்கான அம்சங்களையும் தேர்வு செய்யும் வசதியை அந்நிறுவனம் வழங்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மாருதி எர்டிகா காரில் புதிய சிஎன்ஜி வேரியன்ட் . . . பெட்ரோல் விலை உயர்வால் இனி இந்த கார்களுக்கு தான் மவுசு . . .

இந்த காரில் மெட்டாலிக் டீக் உட் ஃபினிஷ் செய்யப்பட்ட லெதர் வேர்ப்டு ஸ்டியரிங் வீல், கீயால் ஆப்ரேட் செய்யப்படும் ஓஆர்விஎம், க்ரூஸ் கண்ட்ரோல், ஃபாலோ மீ ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எர்டிகா காரில் புதிய சிஎன்ஜி வேரியன்ட் . . . பெட்ரோல் விலை உயர்வால் இனி இந்த கார்களுக்கு தான் மவுசு . . .

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை முன்பக்க சீட் ஏர்பேக்குகள், பின்பக்க பார்க்கிங் கேமரா, ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போது இந்த ஆப்ஷன்கள் ZXI+ வேரியன்டில் மட்டுமே உள்ளது. சிஎன்ஜி வேரியன்டில் இல்லை. இந்த கார் அறிமுகமான பின்பு இந்த வேரியண்ட்டும் என்டிகா சிஎன்ஜி VXI+, என்டிகா சிஎன்ஜி ZXI+ மற்றும் சிஎன்ஜி என்டிகா சிஎன்ஜி VXI+ Tour M+ என்று அழைக்கப்படும் எனத் தெரிகிறது.

மாருதி எர்டிகா காரில் புதிய சிஎன்ஜி வேரியன்ட் . . . பெட்ரோல் விலை உயர்வால் இனி இந்த கார்களுக்கு தான் மவுசு . . .

இந்த சிஎன்ஜி வேரியன்ட் காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர், k15c பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 87 பிஸ் பவரையும், 121.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது கேஸில் இயங்கும் போது இது 100 பிஎஸ் பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எல்லா சிஎன்ஜி வேரியன் கார்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்களை கொண்டுள்ளது. எர்டிகா பெட்ரோல் காரில் ஒரு வேரியன்ட் ஹைபிரிட் வேரியன்டாக உள்ளது. இது பவர் டெரைனையும் எக்ஸ்ட்ரா பயன்படுத்தி 102 பிஎஸ் பவரையும், 136.8 என் எம் டார்க் திறனையும் வெளியப்படுத்தும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.

மாருதி எர்டிகா காரில் புதிய சிஎன்ஜி வேரியன்ட் . . . பெட்ரோல் விலை உயர்வால் இனி இந்த கார்களுக்கு தான் மவுசு . . .

இந்தியாவில் மாருதி நிறுவனம் தான் முதன்முறையாக சிஎன்ஜி மாடல் கார்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி இன்று பல நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் சிஎன்ஜி ஆப்ஷன்களை வைக்கத் துவங்கிவிட்டனர். தற்போது ஹூண்டாய் நிறுவனம் சிஎன்ஜியில் இயங்கும் கார்களை தயாரித்து வருகிறது. மக்கள் அதிகம் விரும்பும் ஹூண்டாய் க்ரெட்டா காரும் சிஎன்ஜி வேரியன்ட் காரை வரும் 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எர்டிகா காரில் புதிய சிஎன்ஜி வேரியன்ட் . . . பெட்ரோல் விலை உயர்வால் இனி இந்த கார்களுக்கு தான் மவுசு . . .

தற்போது மிட் சைஸ் எஸ்யூவி கார்களுக்கு மவுசு அதிகமாகியுள்ளதால் விரைவில் இந்த கேட்டகிரியில் உள்ள பல கார்கள் சிஎன்ஜி ஆப்ஷனை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஹூண்டாய் வென்யூ, கியா சோனட், மாருதி பிரெஸ்ஸா, நெக்ஸான் ஆகிய வாகனங்கள் இதில் அடங்கும். கியா செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் கார்களிலும் சிஎன்ஜி வேரியன்ட்கள் விரைவில் வெளியாகலாம்.

மாருதி எர்டிகா காரில் புதிய சிஎன்ஜி வேரியன்ட் . . . பெட்ரோல் விலை உயர்வால் இனி இந்த கார்களுக்கு தான் மவுசு . . .

மாருதி நிறுவனமும் எர்டிகாவிற்கு பிறகு பலேனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 கார்களில் சிஎன்ஜி வேரியன்ட்டை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக செலிரியோ மற்றும் டிசையர் கார்களில் சிஎன்ஜி வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti ertiga got new cng varient car plans to launch soon
Story first published: Wednesday, May 25, 2022, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X