இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்ப பாத்தா இந்திய வாகன உலகில் பெரும் சாதனையை படைக்கும் போலிருக்கே!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காருக்கு புக்கிங் வேர லெவலில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதியின் இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்பா பாத்தா, இந்திய வாகன உலகில் வேற லெவல் சாதனையை படைக்கும் போலிருக்கே!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் கிராண்ட் விட்டாரா காரை நடப்பு செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இக்காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நெக்ஸா ஷோரூம் வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையிலேயே, தங்களுடைய இந்த புதுமுக காருக்கு பாரிய அளவில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மாருதியின் இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்பா பாத்தா, இந்திய வாகன உலகில் வேற லெவல் சாதனையை படைக்கும் போலிருக்கே!

அது வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ தகவலில் தற்போதே இக்காருக்கு 53 ஆயிரம் புக்கிங்குகள் குவந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான புக்கிங்குகள் கிராண்ட் விட்டாராவின் உயர்நிலை தேர்விற்கே கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதாவது, ஸ்டாராங் ஹைபிரிட் அம்சம் கொண்ட தேர்விற்கு அதிகபட்சமாக 23 ஆயிரம் புக்கிங்குகள் குவிந்துள்ளன.

மாருதியின் இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்பா பாத்தா, இந்திய வாகன உலகில் வேற லெவல் சாதனையை படைக்கும் போலிருக்கே!

ஐந்தில் இரண்டு புக்கிங் கிராண்ட் விட்டாரா ஸ்ட்ராங் ஹைபிரிட் தேர்விற்கே கிடைப்பதை இந்த எண்ணிக்கை நமக்கு உறுதிப்படுத்துகின்றது. இந்த கார் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த வாகனத்தின் வருகையால் எஸ்-கிராஸ் சந்தையை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதியின் இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்பா பாத்தா, இந்திய வாகன உலகில் வேற லெவல் சாதனையை படைக்கும் போலிருக்கே!

இதன் வெளியேற்றத்தின் தாக்கத்தை நிச்சயம் கிராண்ட் விட்டாரா ஈடுசெய்யும் என யூகிக்க முடிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே மிக அதிக புக்கிங் எண்ணிக்கையை தற்போது அக்கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது. மைல்டு மற்றும் ஸ்ட்ராங் என்கிற இரு விதமான ஹைபிரிட் தேர்விலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

மாருதியின் இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்பா பாத்தா, இந்திய வாகன உலகில் வேற லெவல் சாதனையை படைக்கும் போலிருக்கே!

இதன் மைல்டு ஹைபிரிட் தேர்வில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 135 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இதில் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர கூடுதல் தேர்வாக அனைத்து வீல் இயக்கம் வசதியும் ஆப்ஷனலாக வழங்கப்பட இருக்கின்றது.

மாருதியின் இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்பா பாத்தா, இந்திய வாகன உலகில் வேற லெவல் சாதனையை படைக்கும் போலிருக்கே!

இதேபோல், பன்முக சிறப்பு வசதிகளிலேயே ஸ்ட்ராங் ஹைபிரிட் தேர்வு கிடைக்க இருக்கின்றது. இதில், 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டிஎன்ஜிஏ பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 91 பிஎச்பி பவரையும், 122 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுதவிர கூடுதலாக 78 பிஎச்பி பவரையும், 141 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

மாருதியின் இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்பா பாத்தா, இந்திய வாகன உலகில் வேற லெவல் சாதனையை படைக்கும் போலிருக்கே!

இந்த மோட்டார் இயக்கத்திற்கென தனியாக சிறிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. காரின் இயக்கத்திலேயே சார்ஜ் செய்து கொள்ளும். அவ்வாறு அது முழு சார்ஜ் அளவை எட்டுகின்றபோது வேறு எதனுடைய உதவியும் இன்றி 25 கிமீ வரை செல்ல அந்த பேட்டரியில் உள்ள மின்சாரம் உதவும். இதன் வாயிலாக கணிசமான அளவு எரிபொருளை நம்மால் சிக்கனம் செய்ய முடியும்.

மாருதியின் இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்பா பாத்தா, இந்திய வாகன உலகில் வேற லெவல் சாதனையை படைக்கும் போலிருக்கே!

மேலும், சுற்றுச் சூழல் பாதிப்பை கணிசமாக தவிர்க்க முடியும். இத்தகைய அம்சத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் பலர் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவின் ஸ்ட்ராங் ஹைபிரிட்டை தேர்வு செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்த கார் ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை மாருதி சுஸுகி வெளியிடவில்லை.

மாருதியின் இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்பா பாத்தா, இந்திய வாகன உலகில் வேற லெவல் சாதனையை படைக்கும் போலிருக்கே!

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரில் பன்முக பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற இருக்கின்றன. 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் /ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழைதல் மற்றும் தானாகவே மடக்கிக் கொள்ளும் ஓஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன.

மாருதியின் இந்த காருக்கு கிடைச்சிட்டு இருக்க வரவேற்பா பாத்தா, இந்திய வாகன உலகில் வேற லெவல் சாதனையை படைக்கும் போலிருக்கே!

ரூ. 11 ஆயிரம் முன்தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் ஷோரூம் வாயிலாக புக்கிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதிக் கொண்ட கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ஒரு லிட்டருக்கு 27.9 கிமீ வரை மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Maruti suzuki grand vitara receives 53000 bookings 2 out of every 5 buyers opting strong hybrid vari
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X