ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம்!

மாருதி சுஸுகி நிறுவனம் சிறிய கார்களை கை கழுவ திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

மத்திய அரசு வரும் 2022 அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கு 6 ஏர்பேக்கள் இருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது. கார்களில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை மனதில் வைத்து இந்த நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இதற்கு வாகன தயாரிப்பாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் 2 ஏர்பேக் இருப்பது கட்டாயமாக உள்ளது. ஒரு ஏர் பேக் டிரைவருக்கும் மற்றொரு ஏர்பேக் அருகில் உள்ள பயணிகள் சீட்டில் இருப்பவருக்கும் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

இந்நிலையில் இந்த 2 ஏர்பேக் கட்டாயம் என்ற எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தியுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் ஏற்கனவே இருக்கும் 2 ஏர்பேக் போக அடுத்ததாக 4 ஏர்பேக்களை பொருத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

இந்த சட்டம் கார்களின் விலையை உயர்த்தும் குறிப்பாக என்ட்ரி லெவல் கார்களான குறைந்த விலை கார்களின் தயாரிப்பு செலவை உயர்த்தும். இதனால் கார்களின் விலை அதிகமானால் விற்பனை பெரும் அளவில் பாதிக்கப்படும் என வாகன தயாரிப்பாளர்கள் சொல்லி வருகின்றனர்.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

இந்த சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது மாருதி சுஸூகி நிறுவனம் தான் தான். தற்போது விற்பனையாகும் ஹேட்ச் பேக் கார்களில் 70 சதவீதம் இந்நிறுவனத்தின் கார்கள் தான் விற்பனையாகி வருகிறது.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

அந்நிறுவனம் வெளியிடும் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸொ, ஈக்கோ, செலிரியோ மற்றும் இக்னீஸ் கார்களை அந்நிறுவனம் குறைந்த விலை கார்களாக விற்பனை செய்து வருகின்றனர். இதன் விலை ரூ3.25 லட்சத்திலிருந்து துவங்குகிறது. இந்த கார்களில் எல்லாம் மேலும் 4 ஏர் பேக்களை வைத்தால் காரின் விலை அதிகமாகும்.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

ஒவ்வொரு காருக்கும் கூடுதலாக ரூ60 ஆயிரம் வரை செலவாகும் என்பதால் இந்த கார்களின் விலை ரூ4 லட்சம் வரை சென்று விடும். பொதுவாக இந்த கார்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் முதன் முறையாக கார் வாங்க முடிவு செய்யும் போது இந்த காரைதான் தேர்வு செய்வார்கள்.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

இதை விலை அதிகமானால் இந்த கார்களின் விற்பனை பெரும் அளவிற்குப் பாதிக்கப்படும். அதிகமா விலையால் தற்போது இருசக்கர வாகனம் ஓட்டிக்கொண்டிருப்பவர்கள் கார்களை வாங்கத் தயக்கம் காட்டுவார்கள். இதனால் இந்தியா முழுவதும் சிறிய ரக கார்களின் விற்பனை பெரும் அளவு பாதிக்கப்படும்.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

மாருதி மட்டுமல்லாமல் ஹூண்டாய், டாடா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் கூட சிறிய ரக கார்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கும் இதே விதமான பாதிப்பு இருக்கிறது. இந்தியாவில் பிஎஸ்6 கட்டாயமாக்கிய போதே கார்களின் இன்ஜின்களை மாற்றியது கார்களின் விலையைக் கணிசமாக உயர்த்தியது.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

இந்நிலையில் மாருதிசுஸூகி நிறுவனம் சேர்மன் பார்கவா இது குறித்துக் கூறும் போது, அரசின் இந்த 6 ஏர் பேக் உத்தரவு அமலுக்கு வந்தால் சிறிய ரக கார்கள் பெரிய அளவில் விலை உயர்வு ஏற்படும் என்பதால் இந்த கார்களை நிறுத்த நாங்கள் தயங்கமாட்டோம். அரசுடன் இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்துப் பேசி வருகிறோம் எனக் கூறினார்.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

இந்தியாவில் உள்ள கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவிற்கு என்ற ஒரு தரத்தையும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கார்களுக்கு என்று ஒரு தரத்தையும் கையாளுகின்றனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான கார்களுக்கு 6 ஏர்பேக்கள் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களில் அரசு கட்டாயத்தால் காரணமாக வெறும் 2 ஏர் பேக் மட்டும் வைக்கப்படுகிறது. 2020ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களைக் கணக்கிடும் போது அத்தனை கார்களிலும் 6 ஏர்பேக் இருந்திருந்தால் 13ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

இது குறித்து ஆட்டோமொபைல் உதிரிப் பாக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இந்தியா ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இந்த 6 ஏர்பேக் கட்டாயம் என்ற ரெகுலேஷனை கொண்டு வர 12-18 மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம் !

மத்திய அரசின் இந்த 6 ஏர்பேக் சட்டம் கொண்டு வரப்படுவதால் மாருதி நிறுவனத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் நிலைப்பாடு படி இந்த சட்டம் வந்தால் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, ஈக்கோ, செலிரியோ, இக்னீஷ் போன்ற கார்கள் விரைவில் நிறுத்தப்படலாம்.

Most Read Articles
English summary
Maruti plans to exit the small car segment because of 6 airbag mandate rules know full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X