என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான்...நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம்...

மாருதி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான விற்பனை மற்றும் இந்த நிதியாண்டிற்கான விற்பனை நிலவரம் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

அக்டோபர் மாதம் துவங்கிவிட்டது, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் கடந்த செப்டம்பர் மாத விற்பனையை அறிக்கையை வெளியிட்டுக்கொண்டே வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியாவின் மிக முக்கிய நிறுவனமான மாருதி நிறுவனமும் தனது செப்டம்பர் மாத விற்பனையை அறிக்கையும், இந்த நிதியாண்டிற்கான விற்பனை அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் நாம் அதன் விலை விபரங்களைப் பற்றித் தான் முழுமையாகக் காணப்போகிறோம்.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

விற்பனை என்று வந்துவிட்டால் மாருதியை அடித்துக்கொள்ள மார்கெட்டில் ஆள் இல்லை. இந்தியாவிலேயே அதிகமான கார்களை விற்பனை செய்துவரும் நிறுவனம் மாருதி தான். கடந்த செப்டம்பர் மாதம் இந்நிறுவனம் மொத்தம் 1,48,380 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தின் விற்பனையான வெறும் 63,111 கார்களின் விற்பனையுடன் ஒப்பிடும் போது 85,269 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது 135 சதவீத வளர்ச்சியாகும்.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

மாருதியின் மினி கார்களுக்கான செக்மெண்டில் வெளியாகும் ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸொ கார்கள் இணைத்து மொத்தம் 29,574 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்., மாதம் 14,936 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதே செக்மெண்டில் இந்த நிதியாண்டில் 1,21,056 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதே காலகட்டத்தின் கடந்த நிதியாண்டில் 1,02,322 கார்கள் விற்பனையாகியிருந்தது.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

காம்பேக்ட் செக்மெண்டை பொருத்தவரை மாருதி பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட், டூர் எஸ், வேகன் ஆர் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த செக்மெண்டில் கடந்த செப்., மாதம் 72,176 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் 20,891 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்த செக்மெண்டில் இந்த நிதியாண்டில் மொத்தம் 4,33,428 கார்கள் விற்பனையாகியிருந்தது. கடந்த நிதியாண்டில் வெறும் 2,98,246 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

அடுத்ததாக மிட்-சைஸ் செக்மெண்டில் மாருதி நிறுவனம் சியாஸ் காரை மட்டுமே விற்பனை செய்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 1,359 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு செப்., மாதம் 981 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்த நிதியாண்டில் 6,926 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் 7,095 கார்கள் விற்பனையாகியிருந்தது.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

யூட்டிலிட்டி கார்களுக்கான செக்மெண்டில் மாருதி நிறுவனம் பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-கிராஸ், எக்ஸ்எல்6, கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கடந்த செப்., மாதம் 32,574 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்., மாதம் 18,459 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த நிதியாண்டில் மொத்தம் 1,63,630 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,35,079 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

வேன் செக்மெண்டில் மாருதி நிறுவனம் ஈக்கோ என்ற வேனை மட்டுமே விற்பனை செய்துவருகிறது. கடந்த செப்., மாதம் மொத்தம் 12,697 வேன்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு செப்., மாதம் 7,844 வேன்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்த நிதியாண்டில் மொத்தம் 69,510 வேன்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 50,350 வேன்கள் விற்பனையாகியுள்ளது.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

இத்துடன் மாருதி நிறுவனத்தின் பயணிகள் வாகன தயாரிப்பு முடிவடைகிறது. அடுத்தாக இலகுரக கமர்ஷியல் வாகனங்களைப் பொருத்தவரை மாருதி நிறுவனம் சூப்பர் கேரி என்ற வாகனத்தை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த செப்., மாதம் மட்டும் 2,505 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்., மாதம் 3,304 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இந்த நிதியாண்டில் மொத்தம் 19,509 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் 12,716 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

மற்ற ஓயிஎம்களுக்கு விற்பனை செய்த வகையில் கடந்த செப் மாதம் மட்டும் மாருதி நிறுவனம் 4,018 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு செப்., மாதம் 2400 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த நிதியாண்டில் மொத்தம் 38,635 வானகங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் 22,420 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

ஏற்றுமதியைப் பொருத்தவரை மாருதி நிறுவனம் மொத்தம் 21,403 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்தாண்டு செப்., மாதம் மொத்தம் 17,565 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. இந்த நிதியாண்டில் மொத்தம் 1,32,632 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,04,927 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

மாருதி நிறுவனத்தின் பயணிகள் கார் விற்பனையில் கடந்த செப்., மாதம் மொத்தம் 1,48,380 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 1,34,166 கார்கள் விற்பனையாகியுள்ளது. அதாவது மொத்தம் 14.214 கார்கள் விற்பனை அதிகமாகும். இது 10.59 சதவீத வளர்ச்சியாகும். அடுத்தாக மாருதி நிறுவனத்தின் இந்த 2022ம் ஆண்டில் மூன்றாம் காலாண்டிற்கான விற்பனை குறித்துக் காணலாம்.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

மாருதி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 4,25,396 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2021ம் ஆண்டின் 3ம் காலாண்டில் மொத்தமே 3,00,030 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இதுவே இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்தம் 3,69,154 கார்கள் விற்பனையாகியிருந்தது. கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிடும் போது 1,25,366 வாகனங்கள் அதிகம் அதாவது 41.78 சதவீதம் வளர்ச்சி, இதுவே கடந்த 2ம் காலாண்டின் விற்பனையுடன் ஒப்பிடும் போது 56,242 வாகனங்கள் அதிகம் அதாவது 15.24 சதவீதம் வளர்ச்சி

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

ஒட்டு மொத்தமாக மாருதி நிறுவனம் கடந்தாண்டு மிகப்பெரிய வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. முக்கியமாக எஸ்யூவி செக்மெண்டில் அதிகம் விற்பனையாகும் காராக பிரெஸ்ஸா உள்ளது. எம்பிவி செக்மெண்டில் அதிகம் விற்பனையாகும் காராக எர்டிகா உள்ளது, ஏ செக்மெண்ட் ஹேட்ச் பேக் செக்மெண்டில் அதிகம் விற்பனையாகும் காராக வேகன் ஆர் கார் உள்ளது. வேன்களில் அதிகம் விற்பனையாவது ஈக்கோ தான். இதெல்லாமே மாருதி தான். பெரும்பாலான செக்மெண்ட்களில் மாருதி தான் கிங் என நிரூபித்துள்ளது.

என்னதான் கிண்டல் பண்ணாலும் மாருதி இந்த விஷயத்துல கிங் தான் . . . நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம் . . .

இது மட்டுமல்ல சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய கிராண்ட் விட்டாரா காருக்கும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்கள் வந்து குவிந்துள்ளது. இது மட்டுமல்ல மாருதி நிறுவனம் அடுத்தடுத்து புதிய கார்களாக பலேனே க்ராஸ், மற்றும் ஜிம்னி ஆஃப் ரோடர் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுவருகிறது. இந்தியாவில் கார்களின் விற்பனை என்று வந்துவிட்டால் மாருதியை அடிச்சிக்கவே முடியாது என்பதை மாருதி மீண்டுமொருமுறை நமக்கு நிரூபனம் செய்துவிட்டது.

Most Read Articles
English summary
Maruti suzuki 2022 september sales report
Story first published: Sunday, October 2, 2022, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X