ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட்? உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார்?

மாருதி நிறுவனம் வெளியிடும் ஆல்டோ கே10 மற்றும் செலிரியோ ஆகிய இரண்டு கார்களும் என்ட்ரி லெவல் கார்கள் தான். இந்த காரில் எந்த கார் பெஸ்டான கார் எனக் காணலாம் வாருங்கள்.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

மாருதி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆல்டோ கே10 காரை அப்டேட் செய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதில் அதன் தோற்றம், கூடுதலான அம்சங்கள் எனப் பல அப்டேட்கள் இடம் பெற்றன. இந்த கார் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் செக்மெண்ட் காராக வெளியிட்டது. இந்த காருக்கு மார்கெட்டில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. மாருதி சுஸூகி நிறுவனம் தனது ஆல்டோ கே 10 காரை மார்கெட்டில்உள்ள ரெனால்ட் க்விட் காருக்கு போட்டியாகக் களம் இறக்கியது.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

இது மட்டுமல்ல இந்த காருக்கு போட்டியாக மார்கெட்டில் மட்டுமல்ல மாருதி நிறுவனத்திலேயே மாருதி சுஸூகி செலிரியோ, மற்றும் மாருதி சுஸூகி வேகன்ஆர் ஆகிய கார்கள் இருக்கின்றன. இவை எல்லாம் கிட்டதட்ட ஒரே விலையிலும் ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களையும் டார்கெட் செய்தே இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்த செய்தியில் நாம் புதிய மாருதி ஆல்டோ கே10 மற்றும் மாருதி சுஸூகி செலிரியோ ஆகிய கார்களின் ஒப்பீட்டைத் தான் பார்க்கப்போகிறோம். இதில் எந்த காரை வாங்கலாம் என நீங்கள் இதைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

மாருதி சுஸூகி ஆல்டோ கே10 கார் மார்கெட்டில் ரூ3.99 லட்சம் முதல் ரூ5.83 லட்சம் என்ற விலையிலும் மாருதி சுஸூகி செலிரியோ கார் 5.25 லட்சம் முதல் ரூ7 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனையாகிறது வேரியன்ட்டை பொருத்தவரை மாருதி ஆல்டோ கே10 காரின் டாப் வேரியன்ட்கள் மாருதி சுஸூகி செலிரியோ காரின் லோ மற்றும் மிட் வேரியட்ன்ட்களுடன் போட்டியிடுகிறது. இந்த இரண்டு கார்களில் தொழிற்நுட்ப ஒப்பீட்டை இங்கே காணலாம் வாருங்கள்

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

பரிமாணம்

மாருதி சுஸூகி ஆல்டோ கே10 கார் 5 சீட்டர் கார் இந்த கார் மொத்தம் 3530 மிமீ நீளம், 1490 மிமீ அகலம் மற்றும் 2380 மிமீ வீல்பேஸ் கொண்டது. மாருதி சுஸூகி செலிரியோ கார் 3695 மிமீ நீளம், 1655 மிமீ அகலம் மற்றும் 2435 மிமீ வீல்பேஸ் கொண்டது. நீளம், அகலம் மற்றும் வீல்பேஸில் ஆல்டோவை விட செலிரியோ சற்று பெரிய காராக இருக்கிறது. ஆனால் இந்த அளவு மிகப்பெரிய மாற்றம் எல்லாம் இல்லை சிறிய அளவிலான மாற்றம் மட்டுமே உள்ளது.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

செயல்திறன்

மாருதிசுஸூகி ஆல்டோ கேட் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது மேனுவல் கியர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது. இந்த காரின் இன்ஜின் 3 சிலிண்டர் இன்ஜின் ஆகும். இது 24.9 கி.மீ மைலேஜை வழங்ககூடியது. இந்த இன்ஜின் 5500 ஆர்பிஎம்மில் 65.71 பிஎச்பி பவர் மற்றும் 3500 ஆர்பிஎம்மில் 89 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

மாருதி சுஸூகி செலிரியோ காரை பொருத்தவரை ஆல்டோ கே10 காரில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த காரிலும் இருக்கிறது. இந்த காரில் கூடுதலாக இதே இன்ஜின் உடன் சிஎன்ஜி ஆப்ஷனும் கிடைக்கிறது. இந்த இன்ஜின் செலிரியோ காரில் 24.97 கி.மீ மைலேஜை பெட்ரோலிலும், 35.6 கி.மீ மைலேஜை சிஎன்ஜியிலும் வழங்குகிறது. இன்ஜின் திறனைப் பொருத்தவரை இரண்டு காரின் இன்ஜினும் ஒரே இன்ஜின் தான் என்பதால் ஒரே மாதிரியான பவர் மற்றும் டார்க்கை தான் வழங்குகிறது.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

பூட் ஸ்பேஸ்

இந்த இரண்டு கார்களின் பரிமாணங்களில் சிலமாற்றங்கள் இருப்பதால் இந்த கார்களின் பூட்ஸ்பேஸ் பகுதியிலும் மாற்றம் இருக்கிறது. ஆல்டோ கே10 கார் 214 லிட்டர் கொள்ளளவைக் கொண்டது. மாருதி சுஸூகி செலிரியோ கார் 313 லிட்டர் கொள்ளளவைக் கொண்டுள்ளது. இதே போல பெட்ரோல் டேங்க்கிலும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. ஆல்டோ கே10 கார் 27 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்டது. செலிரியோ கார் 32 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்டது.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த கார்களின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை இரண்டு கார்களிலும் 2 ஏர்பேக்கள் மட்டுமே உள்ளன. பிரேக்கிங் சிஸ்டத்தில் இரண்டு கார்களிலும் ஏபிஎஸ் வசதி இருக்கிறது. இதில் ஆட்டோ கே 10 காரில் மட்டும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம் பெற்றதுள்ளது. ஆனால் செலிரியோ காரில் ஸ்பீடு சென்சின் டோர் லாக் வசதி இருக்கிறது. இந்த வசதி ஆல்டோ கே 10 காரில் இல்லை.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

கம்ஃபோர்ட்

காரின் ஏசி வசதியைப் பொருத்தவரை ஆல்டோ கே 10 காரின் அடிப்படை வேரியன்டில் ஏசி வசதி இல்லை. ஆனால் செலரியோ காரின் அடிப்படை வேரியன்டிலேயே ஏசி வசதியும் ஹீட்டர் வசதியும் இருக்கிறது. இந்த காரில் சைன் வைசரில் கண்ணாடி வசதி ஆல்டோ கே10 காரில் மட்டும் இருக்கிறது. செலிரியோ காரில் இல்லை. செலரியோ காரில் டோர் பாக்கெட்கள் முன் மற்றும் பின்புற டோர்களில் இடம்பெற்றுள்ளது. இந்த வசதி ஆல்டோ கே 10 காரில் இல்லை.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

உட்புற கட்டமைப்பு

இந்த காரின் உட்புறத்தை ஒப்பிடும் போது ஆல்டோ கே 10 காரில் டூயல் டோன் உட்புற கலர் இருக்கிறது கருப்பு மற்றும் பேட்ஜ் நிற உட்புற கட்டமைப்பு கிடைக்கிறது. செலிரியோ காரை பொருத்தவரை ஒரே நிறம் தான் கருப்பு நிற உட்புறம் மட்டுமே இருக்கிறது. செலிரியோ காரில் உட்புறத்தின் பின்புற சீட்டை மடித்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஆல்டோ கே 10 காரில் இந்த வசதி கிடையாது.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

இந்த காரின் வெளிப்புற தோன்றத்தில் ஒரு அம்சம் மட்டுமே வேறுபாடு இருக்கிறது. ஆல்டோ கே 10 காரின் அடிப்படை வேரியன்டில் கார் கலரில் பம்பர் இருப்பதில்லை. ஆனால் செலரியோ காரின் அடிப்படை வேரியன்டிலேயே இந்த அம்சம் இருக்கிறது.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

தொழிற்நுட்ப அம்சங்கள்

இந்த இரண்டு கார்களில் உள்ள தொழிற்நுட்ப அம்சங்களை ஒப்பிடும் போது ஆல்டோ கே 10 காரில் ஹெட்லைட் அட்ஜெஸ்டர் அம்சம் இல்லை. ஆனால் இது செலிரியோ காரில் இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்டேஷனை பொருத்தவரை ஆல்டோ காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் இருக்கிறது. செலிரியோ காரில் அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இருக்கிறது. செலிரியோ காரில் தான் மைலேஜை கணக்கிட்டுக் காட்டும் ஆப்ஷன் இருக்கிறது. இந்த வசதி ஆல்டோ கே10 காரில் இல்லை.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

இது போக செலிரியோ காரில் குறைவான எரிபொருள் இருப்பதற்கான எச்சரிக்கை, டோர் அடைக்கவில்லை என்பதற்கான எச்சரிக்கை, கியர் ஸிஃப்ட் இண்டிகேட்டர், ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இது எதுவும் ஆல்டோ கே 10 காரில் இல்லை. இந்த இரண்டு காரிலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆப்ஷன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .
Alto K10 Variant Alto K10 Price Celerio Variant Celerio Price
STD ₹3.99 Lakh LXI ₹5.25 Lakh
LXI ₹4.82 Lakh VXI ₹5.74 Lakh
VXI ₹4.99 Lakh ZXI ₹5.94 Lakh
VXI Plus ₹5.33 Lakh VXI AMT ₹6.24 Lakh
VXI AMT ₹5.49 Lakh ZXI AMT ₹6.44 Lakh
VXI Plus AMT ₹5.83 Lakh ZXI Plus ₹6.50 Lakh
ZXI Plus AMT ₹7.00 Lakh
VXI CNG ₹6.69 Lakh
ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

சிறப்பான விஷயங்கள்

ஆட்லோ கே10 காரில் உள்ள இன்ஜின் சிறப்பாக வேலை செய்கிறது. சிட்டிக்குள் பயணிக்கச் சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. குறைவான கண்ட்ரோல் சிறிய கார் என்பதால் கையாள்வதும் எளிமை தான். இதில் உள்ள 212 லிட்டர் பூட் வசதி முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது. இந்த காருக்கான ஸ்பேர், சர்வீஸ், எளிமையாகக் கிடைக்கிறது. இந்த காருக்கு சிறப்பாக ரீசேல் வேல்யூவும் கிடைக்கிறது.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

செலிரியோ காரின் சிறப்பான விஷயங்களாக இதன் கேபின் வசதியைச் சொல்லலாம். முந்தைய செலிரியோவுடன் ஒப்பிடும் போது இது மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் கடுமையான டிராஃபிக் மற்றும் நெரிசல் மிகுந்த ஹைவேகளில் துணிந்து ஓவர்டேக் எடுக்க சிறப்பான கார் என்றே சொல்லலாம். இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 26 கி.மீ வரை கிடைக்கிறது. முக்கியமாக இதில் சிஎன்ஜி வேரியன்ட்டும் இருக்கிறது.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

உஷாராக இருக்க வேண்டியது

ஆல்டோ கே10 காரை பொருத்தவரை இதன் டாப் வேரியன்ட் காரின் விலை மிக அதிகம் அந்த விலையில் இதை விட அதிக அம்சங்கள் கொண்ட வேறு பெரிய கார்களே மார்கெட்டில் கிடைக்கிறது. இந்த கார் வேகமாக செல்லும் போது அதிகமான சத்தம் மற்றும் இரைச்சல் கேட்கிறது. இதன் NVH லெவல் குறைவாக இரக்கிறது. இந்த கார் பார்க்கச் சாதாரண தோன்றத்தை தருகிறது.

ஆல்டோ கே10 Vs செலிரியோ எந்த கார் பெஸ்ட் . . . உங்கள் பணம் வீணாகாமல் இருக்க எது சிறந்த கார் . . .

செலிரியோ காரில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இதன் ஸ்டியரிங் ரெஸ்பான்ஸ் மெதுவாக இருக்கிறது. இந்த காரின் அனைத்து வேரியன்ட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்த காரின் ஏஎம்டி கியர் பாக்ஸ் சிறப்பாகச் செயல்படவில்லை என கூறுப்படுகிறது. நீண்ட நேரமாக முதல் மற்றும் இரண்டாவது கியரிலேயே பயணிப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்பொழுது இந்த தகவலை வைத்துக்கொண்டு இந்த இரண்டு காரில் உங்களுக்கு எந்த கார் பெஸ்டாக இருக்கும் என்பதை நீங்கள் தேர்வு செய்து வாங்குங்கள். இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்த காரை கமெண்ட் செய்யுங்கள்

Most Read Articles
English summary
Maruti suzuki alto k10 and celerio car compared know full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X