இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மாடலின் டிசைன் அட்டகாசமாக உள்ளது.

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

அத்துடன் பழைய மாடலை காட்டிலும் புதிய மாடலில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. எனவே பழைய மாடலுடன் ஒப்பிடும்போது புதிய பலேனோ வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக மாறியுள்ளது. இருப்பினும் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி பலேனோ விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 10,938 பலேனோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்த பலேனோ கார்களின் எண்ணிக்கை 16,384 ஆகும். இதன் காரணமாக மாருதி சுஸுகி பலேனோ விற்பனையில் 33.24 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

வருடாந்திர ஒப்பீட்டை போல், மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் மாருதி சுஸுகி பலேனோ விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 14,520 பலேனோ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 10,938 ஆக சுருங்கியுள்ளது. இது 24.67 சதவீத வீழ்ச்சியாகும்.

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

புதிய மாருதி சுஸுகி பலேனோ காரில், 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

மாருதி சுஸுகி பலேனோ காரின் டாப் வேரியண்ட்களில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் சுஸுகி கனெக்ட் (கனெக்டட் கார் தொழில்நுட்பம்) போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. 2022 பலேனோ காரை பாதுகாப்பு விஷயத்திலும் மாருதி சுஸுகி நிறுவனம் நன்றாக மேம்படுத்தியுள்ளது.

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் டாப் வேரியண்ட்களில், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, பிரேக் அஸிஸ்ட், ஹில்-ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ காருக்கு ஏகப்பட்ட போட்டி மாடல்கள் உள்ளன.

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

இதில், ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்சா மற்றும் டாடா அல்ட்ராஸ் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. இதில், டொயோட்டா க்ளான்சா காரானது, மாருதி சுஸுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் பலேனோ காரின் புதிய சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

இந்திய சந்தையை பொறுத்தவரையில், சிஎன்ஜி கார்களின் விற்பனையிலும் மாருதி சுஸுகி நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனை தக்க வைத்து கொள்வதற்காக பல்வேறு புதிய சிஎன்ஜி மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், மாருதி சுஸுகி பலேனோவின் சிஎன்ஜி மாடலும் ஒன்றாகும்.

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி காரை தொடர்ந்து டொயோட்டா க்ளான்சா காரின் புதிய சிஎன்ஜி மாடலும் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் தற்போது சிறிய கார்களின் விற்பனை குறைந்து கொண்டே வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை குறைந்திருப்பது அதனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

இந்திய சந்தையில் சமீப காலமாகவே எஸ்யூவி ரக கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக குறைவான விலையில் கிடைக்கும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு காணப்படுகிறது. இந்த செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles
English summary
Maruti suzuki baleno sales declined in april 2022 details here
Story first published: Monday, May 16, 2022, 20:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X