மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

இந்திய சந்தையில் தற்போதைக்கு அதிக எண்ணிக்கைகளில் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம் என்று பார்த்தால், அது மாருதி சுஸுகி தான். இந்த இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனத்தின் சமீபத்திய சிஎன்ஜி கார் செலிரியோ எஸ்-சிஎன்ஜி ஆகும்.

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை செலிரியோ மாடலின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய சிஎன்ஜி வேரியண்ட்டிற்கு நேரெதிர் போட்டி சிஎன்ஜி மாடலாக, மிக சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஐ-சிஎன்ஜி காரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

வெளிப்புறம்

புதிய மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி காரானது மாடுலர் ஹார்ட்டெக்ட் ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் க்ரீம் ஹைலைட்களுடன் புதிய ரேடியண்ட் க்ரில் பகுதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்டூன் படங்களில் வரும் கார்களை போன்று சற்று மேல்நோக்கி வளைக்கப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பினை கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

3,695மிமீ நீளம், 1,555மிமீ உயரம் மற்றும் 1,655மிமீ-இல் அகலத்தை கொண்டுள்ள செலிரியோ எஸ்-சிஎன்ஜி வேரியண்ட்டில் 15-இன்ச் கருப்பு நிற அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. டியாகோ ஐ-சிஎன்ஜி காரை பொறுத்தவரையில், இது 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

இதன் முன்பக்கம் கம்பீரமான டிசைனில் பொனெட் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் உடன் பியானோ கருப்பு நிறத்தில் 3-அம்பு டிசைனிலான க்ரில் உள்ளிட்டவற்றுடன் புத்துணர்ச்சியானதாக வழங்கப்பட்டுள்ளது. டியாகோ ஐ-சிஎன்ஜி காரின் நீளம் 3,765மிமீ, அகலம் 1,677மிமீ மற்றும் உயரம் 1,535மிமீ ஆகும். இந்த டாடா சிஎன்ஜி காரில் கூடுதல் அம்சங்களாக இரட்டை-நிற அலாய் சக்கரங்கள், கருப்பு நிற மேற்கூரை மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களுடன் கருப்பு நிறத்தில் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

என்ஜின்

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி காரில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர், கே10சி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 5,300 ஆர்பிஎம்-இல் 56 பிஎச்பி மற்றும் 3,400 ஆர்பிஎம்-இல் 82.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

மறுப்பக்கம் டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 72 பிஎச்பி மற்றும் 3,500 ஆர்பிஎம்-இல் 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த சிஎன்ஜி வெர்சனிலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

உட்புறம்

பிரீமியம் தர தோற்றத்திற்காக புதிய செலிரியோ எஸ்-சிஎன்ஜி காரின் உட்புற கேபின் முழுவதும் கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்படுகிறது. செலிரியோவின் மத்திய விஎக்ஸ்ஐ வேரியண்ட்டின் அடிப்படையில் வழங்கப்படும் இதன் புதிய எஸ்-சிஎன்ஜி வேரியண்டில் முன்பக்க & பின்பக்க பவர் ஜன்னல்கள், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் கொடுக்கப்படுகின்றன.

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

இவற்றுடன் 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கக்கூடிய பின் இருக்கை வரிசை, பகல்/இரவு IRVM, பின்பக்க பார்சல் ஷெல்ஃப் உள்ளிட்டவற்றையும் செலிரியோ எஸ்-சிஎன்ஜி கார் பெறுகிறது. டியாகோ ஐ-சிஎன்ஜி மாடலை பொறுத்தவரையில், இது டியாகோவின் எக்ஸ்.இசட் மற்றும் என்ஆர்ஜி வேரியண்ட்களை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

வேரியண்ட்டை பொறுத்து டியாகோ ஐ-சிஎன்ஜி காரின் உட்புற கேபின் கருப்பு & பழுப்பு நிற அலங்கரிப்புடன் 8-ஸ்பீக்கர் ஹர்மன்-கார்டன் சவுண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவற்றை பெறுகிறது.

மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி vs டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி!! எந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்?

ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து

டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி கார் ஏகப்பட்ட வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இதில் சிறந்த செயல்திறன் வெளிப்படுகிறது. அதுவே செலிரியோ விஎக்ஸ்ஐ எஸ்-சிஎன்ஜி மாடலானது குறைவான விலையில் சிஎன்ஜி காரை வாங்க நினைப்போர்க்கு ஏற்றதாக உள்ளது. ஏனெனில் இதன் விலை டியாகோ ஐ-சிஎன்ஜி மாடலின் ஆரம்ப விலையை காட்டிலும் குறைவாகும். ஆகையால் அதிக செயல்திறனை எதிர்பார்க்கிறீர்களா? அல்லது குறைவான விலையில் சிஎன்ஜி காரை எதிர்பார்க்கிறீர்களா என்பதை பொறுத்து மாருதி சுஸுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி அல்லது டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி காரை தேர்வு செய்யலாம்.

Most Read Articles
English summary
Maruti suzuki celerio s cng vs tata tiago tigor icng details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X