ஈக்கோ காருக்கு இப்படி ஒரு அப்டேட்டா? 11 வருச காத்திருப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு...

மாருதி சுஸூகி நிறுவனம் 11 வருடமாக அப்டேட் செய்யாமல் வைத்திருந்த ஈக்கோ காரை இந்தாண்டு அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

ஈக்கோ காருக்கு இப்படி ஒரு அப்டேட்டா ? 11 வருச காத்திருப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு . . .

மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம் இந்தியாவின் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நிறுவனம். இந்நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் பயங்கரமான மவுசு உள்ளது. இந்நிறுவனம் வெளியிடும் கார்களை இந்தியர்கள் ஆர்வமாக வாங்கி வருகின்றனர். இந்நிறுவனம் குறைந்த விலை விலை அதிகவிலை கார்கள் வகை அனைத்து விதமாக கார்களையும் விற்பனை செய்கிறது.

ஈக்கோ காருக்கு இப்படி ஒரு அப்டேட்டா ? 11 வருச காத்திருப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு . . .

இந்நிலையில் இந்நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் செய்து பெறும் வெற்றியடைந்த ஆம்னி காருக்கு மாற்றாக ஈக்கோ என்ற வேன்னை கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பயங்கரமான வரவேற்பைப் பெற்றது. இந்த கார் அறிமுகமான 2 ஆண்டுகளிலேயே சுமார் 1 லட்சம் கார்கள் விற்பனையாகின. கடந்த 2018ம் ஆண்டு மொத்தம் 5 லட்சம் கார்கள் விற்பனையாக பெரும் சாதனை படைத்தது.

ஈக்கோ காருக்கு இப்படி ஒரு அப்டேட்டா ? 11 வருச காத்திருப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு . . .

கடந்த நிதியாண்டிலும் இந்த கார் விற்பனையில் டாப் 10 பட்டியலில் உள்ளது. கடந்த நிதியாண்டில் விற்பனையை ஒப்பிடும்போது சராசரியாக மாதம் 9500 கார்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த கார் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அப்டேட் செய்யப்பட்டது. அதன்பின்பு எந்த அப்டேட்களும் செய்யப்படாமல் அப்படியே விற்பனையாகி வந்தாலும் விற்பனையில் எந்த மந்தமும் இல்லை. தொடர்ந்து நல்ல விற்பனையைப் பெற்று வகிக்கிறது.

ஈக்கோ காருக்கு இப்படி ஒரு அப்டேட்டா ? 11 வருச காத்திருப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு . . .

ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த ஈக்கோ காரின் ஏற்றுமதியில் ஒரு ஆண்டில் 1000த்திற்கும் குறைவான காரையே இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அப்டேட் இல்லாதது தான். இந்தியாவில் இது பெரிய குடும்பத்துடன் வாழும் சராசரி வருமானம் கொண்ட மக்களை டார்கெட் செய்து விற்பனை செய்யப்படுகிறது. அதனால் அப்டேட் செய்து விலையைக் கூட்டினால் விற்பனை பாதிக்கும் என்பதால் அப்டேட் செய்யாமலேயே விற்பனை செய்து வந்தது.

ஈக்கோ காருக்கு இப்படி ஒரு அப்டேட்டா ? 11 வருச காத்திருப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு . . .

இந்நிலையில் தற்போது அந்நிறுவனம் ஏற்றுமதியை அதிகப்படுத்த அந்த காரில் புதிய அப்டேட்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் மிகப்பெரிய அளவில் அப்பேட் இல்லாமல் விலையும் பெரிய அளவில் உயராத அளவிற்கு அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்டேட் செய்யப்பட்ட மாடல் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈக்கோ காருக்கு இப்படி ஒரு அப்டேட்டா ? 11 வருச காத்திருப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு . . .

புதிதாக அப்டேட் செய்யப்படும் இந்த ஈக்கோ காரில் அதே 7 சீட்டர் ஸ்லைடிங் டோர் ஆப்ஷன்கள் அப்படியே இருக்கும் புதிய அம்சமாக பவர் ஸ்டியரிங் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காரின் டிசைனிலும் சிறிதாக மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் காரணமாக இந்த காரின் ஏற்றுமதி இருமடங்காக உயரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஈக்கோ காருக்கு இப்படி ஒரு அப்டேட்டா ? 11 வருச காத்திருப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு . . .

ஈக்கோ கார் 7 சீட்டரில் குறைந்த விலையில் விற்பனையாகும் ஒரே கார். இந்த விலைக்குப் போட்டியாக வேறு எந்த நிறுவனங்களும் கார்களை அறிமுகப்படுத்தவில்லை. அதிகவிலையில் மஹிந்திரா தார் கார் விற்பனையாகிறது. இது தவிர 7 சீட்டர் என்ற முறையில் இன்னோவா, கியா கார்னிவல் எல்லாம் அதிகவிலை கொண்ட கார்கள் தான் இருக்கிறது. ஏற்கனவே இந்திய மார்கெட்டில் ஆம்னி கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது ஈக்கோ காருக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஈக்கோ காருக்கு இப்படி ஒரு அப்டேட்டா ? 11 வருச காத்திருப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு . . .

ஆனால் குறிப்பிட்ட இந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பெரிய கார்களை எதிர்பார்ப்பதால் மற்ற நிறுவனங்களில் இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கார்களை உருவாக்க முடியவில்லை. அதனால் மார்கெட்டில் தனிக்காட்டு ராஜாவாக மாருதி ஈக்கோ கார் விற்பனையாகி வருகிறது.

ஈக்கோ காருக்கு இப்படி ஒரு அப்டேட்டா ? 11 வருச காத்திருப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு . . .

இதே போல 7 சீட்டர் கொண்ட புதிய கார் ஒன்றை டொயோட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால் அந்த காரும் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாகவே களம் இருக்கிறது. இந்த காருக்கு இதுவரை போட்டிப்போட யாருமே இல்லை. அதனாலேயே 11 ஆண்டுகளுக்கு பிறகும் அப்டேட்டகளே இல்லாவிட்டாலும் இந்த கார் நல்ல விற்பனை பெற்று வருகிறது.

Most Read Articles
English summary
Maruti suzuki eeco car likly to get update after 11 years
Story first published: Saturday, May 28, 2022, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X