மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 14,889 எர்டிகா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 8,644 எர்டிகா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனையில் 72 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில் 2வது இடத்தையும் பிடித்து மாருதி சுஸுகி எர்டிகா அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு காரணம் புதிய மாடல்தான்.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் எர்டிகா காரின் புதிய மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. சரியாக சொல்வதென்றால், கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதிதான் மாருதி சுஸுகி எர்டிகா காரின் 2022 மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

விற்பனை எண்ணிக்கை அதனை நமக்கு மிக தெளிவாக எடுத்து காட்டுகிறது. 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.35 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை LXi வேரியண்ட்டின் விலையாகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12.79 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டாப் வேரியண்ட்டான ZXi+ மாடலின் விலையாகும்.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

மாருதி சுஸுகி எர்டிகா காரின் 2வது தலைமுறை மாடல் கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 2வது தலைமுறை மாடல்தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதை தலைமுறை மாடலின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் வகையில்தான், மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை செய்தது.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

இந்த புதிய மாடலின் வெளிப்புறத்தில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உட்புறத்தில் கூடுதலாக சில வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பவர்ட்ரெயினிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரில், ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 1.5 லிட்டர் K15C நான்கு-சிலிண்டர் ட்யூயல்-ஜெட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 103 பிஎஸ் பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 136 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் பேடில் ஷிஃப்டர்கள் வசதியும் இடம்பெற்றுள்ளது.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

மாருதி சுஸுகி எர்டிகா கார் சிஎன்ஜி தேர்விலும் கிடைக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எர்டிகா காரின் பெட்ரோல் மாடல் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜை கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் பக்க க்ரில் அமைப்பு, புதிய ட்யூயல்-டோன் அலாய் வீல்கள், 4 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், இஎஸ்பி, 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வாய்ஸ் அஸிஸ்டன்ட் மற்றும் சுஸுகி கனெக்ட் ஆகிய வசதிகளை, 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரின் முக்கியமான ஹைலைட்களாக குறிப்பிடலாம்.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் காரின் வருகை, மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு விற்பனையில் புதிய நெருக்கடியை உண்டாக்கியது. ஆனால் எர்டிகா காரின் புதிய மாடலின் மூலம் அந்த நெருக்கடியை மாருதி சுஸுகி நிறுவனம் மிக சுலபமாக எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எர்டிகாவின் முதல் மாத விற்பனை எண்ணிக்கையும் அதற்கேற்ற வகையில் உள்ளதால், மாருதி சுஸுகி நிறுவனம் உற்சாகமடைந்துள்ளது.

மாருதி கூட எல்லாம் மோத முடியுமா? பிரம்மிக்க வைத்த புதிய எர்டிகா கார்... இவ்ளோ மைலேஜ் கெடைக்குதா?

மாருதி சுஸுகி நிறுவனம் எர்டிகாவில் மட்டுமல்லாது, மற்றொரு எம்பிவி காரான எக்ஸ்எல்6 காரின் புதிய மாடலையும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கேரன்ஸ் மூலமாக எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்களுக்கு நெருக்கடி கொடுக்க கியா நிறுவனம் திட்டமிட்ட நிலையில், புதிய மாடல்களின் வருகை காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் அதனை சுலபமாக சமாளிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Most Read Articles
English summary
Maruti suzuki ertiga sales increased by 72 per cent in april 2022 here is the reason why
Story first published: Friday, May 6, 2022, 13:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X