இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

பாதுகாப்பு விஷயத்தில் டாடா என்ற மலையுடன் மோதுவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களின் விற்பனை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதில் எம்பிவி சந்தையை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய எம்பிவி ரக கார்கள் முதன்மையான இடத்தை வகித்து வருகின்றன.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் இந்த 2 எம்பிவி கார்களும் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளன. இந்திய சந்தையில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 14,889 எர்டிகா கார்களையும், 4,366 எக்ஸ்எல்6 கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த 2 எம்பிவிக்களின் விற்பனை எண்ணிக்கையையும் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால், 19,255 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்த 2 எம்பிவிக்களும் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. கடந்த 2021ம் ஆண்டு மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 8,644 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 14,889 ஆக உயர்ந்துள்ளது. இது 72.25 சதவீத வளர்ச்சியாகும்.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

மறுபக்கம் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 3,373 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 4,366 ஆக உயர்ந்துள்ளது. இது 29.44 சதவீத வளர்ச்சியாகும். எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய 2 எம்பிவி கார்களின் விற்பனையும் உயர்ந்திருப்பது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகிய 2 கார்களின் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடல்களும் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. மாருதி சுஸுகி நிறுவனம் 2022 எர்டிகா காரில், புதிய K15C இன்ஜினை வழங்கியுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎஸ் பவரையும், 136.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது புத்தம் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இன்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரும் இதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகளைதான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

கூடுதலாக மாருதி சுஸுகி எர்டிகா காரில், சிஎன்ஜி தேர்வும் (88 பிஎஸ் பவர் / 121.5 என்எம் டார்க்) வழங்கப்படுகிறது. மாருதி சுஸுகி எர்டிகா காரானது, ஃபேக்டரி-ஃபிட்டட் சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார்களின் புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், கியா கேரன்ஸ் காருக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகிய 2 எம்பிவிக்களின் புதிய மாடல்களிலும் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக அவை மாறியுள்ளன. அடுத்ததாக மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரை மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்து வருகிறது.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு கொண்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 என மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு இந்த செக்மெண்ட்டில் மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக சமீப காலமாக டாடா நெக்ஸான் இந்த செக்மெண்ட்டில் மற்ற அனைத்து கார்களுக்கும் மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்துள்ளது.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருப்பது உள்பட இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இப்படி கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அதை சமாளிக்கும் வகையில், விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை மாருதி சுஸுகி நிறுவனம் பல்வேறு விதங்களில் அப்டேட் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது... பாதுகாப்பு விஷயத்தில் டாடாவுடன் மோத போகும் மாருதி... இதைதான் எதிர்பாத்தோம்

குறிப்பாக பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீப காலமாக மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டாடா நெக்ஸான் மட்டுமல்லாது, மற்ற அனைத்து கார்களின் போட்டியையும் சமாளிக்க முடியும்.

Most Read Articles

English summary
Maruti suzuki ertiga xl6 mpv s record 19255 unit sales in april 2022 check details here
Story first published: Thursday, May 12, 2022, 12:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X