மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி பயணிகள் கார்கள் விற்பனையில் பலர் விரும்பி தேர்வு செய்யக்கூடிய பிராண்டாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதத்திலும் விற்பனையில் முதல் மூன்று இடங்களில் மாருதி சுஸுகியின் கார்கள் தான் பெரும்பாலும் இருக்கும்.

மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

அந்த அளவிற்கு நாடு முழுவதும் டீலர்ஷிப் மையங்கள், பராமரிப்பு சேவை மையங்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல், ஒமிக்ரான் வைரஸ் பரவல் மற்றும் குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறை உள்ளிட்டவற்றினால் மற்ற நிறுவனங்களை போல் மாருதி சுஸுகியும் பாதிக்கப்பட்டது உண்மைதான்.

மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

இருப்பினும் மாருதி சுஸுகியின் வேகன்ஆர் உயரமான-ஹேட்ச்பேக் கடந்த 2021ஆம் ஆண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கடுத்து ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் ஆல்டோ உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் தொடர்ந்துள்ளன. ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ளது இவற்றை பற்றி அல்ல.

மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

ஏனெனில் இவை எல்லாம் நடுத்தர-மக்கள் அதிகம் தேர்வு செய்யக்கூடிய 'பட்ஜெட்' ரக கார்களாகும். ஆதலால் இவை இந்த அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது பெரியதாக ஆச்சிரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் அளவில் சற்று பெரிய, எம்பிவி காரான மாருதி எர்டிகாவின் விற்பனை கடந்த ஆண்டில் வழக்கத்தை காட்டிலும் சுமார் 48% அதிகரித்திருப்பது, நம்மை வெகுவாக கவர்கிறது.

மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

இந்திய சந்தையில் எர்டிகா எம்பிவி மாடலின் பிரீமியம் வெர்சன் மாடலாக எக்ஸ்.எல்6 விளங்குகிறது. இவை இரண்டையும் சேர்ந்து கடந்த ஆண்டில் சுமார் 1,54,310 யூனிட்கள் மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 48% அதிகமாகும். ஏனெனில் அந்த வருடத்தில் 1,04,185 எர்டிகா & எக்ஸ்.எல்.6 கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

2020ஆம் ஆண்டில் கொரோனாவின் முதல் அலையால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகள் இந்த விற்பனை குறைவிற்கு காரணம் என்று சொன்னாலும், கடந்த 2021ஆம் ஆண்டிலும் ஆட்டோமொபைல் துறைக்கு எத்தகைய தடைகள் உருவாகின என்பதை மேலே கூறிவிட்டோம். உலகளாவிய சிப்-களின் பற்றாக்குறையால் கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரையில் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலை பணிகளை குறைத்து கொண்டு வருவதாக மாருதி சுஸுகி தெரிவித்து வருகிறது.

மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

இதன் விளைவாக கடந்த சில மாதங்களாக மாருதி சுஸுகி கார்களின் விற்பனை வெகுவாக குறைந்தன. இருப்பினும், 2021ஆம் ஆண்டில் எர்டிகா & எக்ஸ்.எல்6 கார்களின் விற்பனையில் ஒருவழியாக மாருதி சுஸுகி 1.5 லட்சம் என்கிற மைல்கல்லை வெற்றிக்கரமாக கடந்துள்ளது. 2021இல் விற்பனையான மொத்த பயணிகள் கார்களில் இவை இரண்டின் பங்கு மட்டுமே 5% என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

எர்டிகா, எக்ஸ்.எல்6 எம்பிவி கார்களுக்கு நடப்பு 2022ஆம் வருடத்தில் மத்திய-ஆயுட்கால அப்டேட்டை மாருதி சுஸுகி வழங்க உள்ளது. மேலும், இந்த இந்திய-ஜப்பானிய நிறுவனம் அதன் கார்களில் புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வையும் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போதைய 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட்டிற்கு மாற்றாக, புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

இத்தகைய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை பெறும் இரண்டாவது மாருதி காராக எர்டிகா இருக்கும் என எதிர்பார்க்கிறோம். வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு கொண்டுவரப்படலாம். இதனை தொடர்ந்து எக்ஸ்.எல்6 பிரீமியம்-எம்பிவி காரும் இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறும்.

மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

இந்த புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை முதல் மாருதி காராக விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி வருகிற 2022 ஏப்ரலில் பெறவுள்ளதாம். அதனை தொடர்ந்து நடப்பாண்டின் மத்தியில் அப்கிரேட் செய்யப்பட உள்ள எர்டிகாவில் அப்டேட்கள் வெளிப்புறம் மட்டுமின்றி, உட்புறத்திலும் வழங்கப்படலாம். 7-இருக்கை எம்பிவி காரான மாருதி எர்டிகாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.12 லட்சங்களில் இருந்து ரூ.10.85 லட்சங்கள் வரையில் உள்ளன.

மாருதி எர்டிகாவை வாங்கவே தனி கூட்டம் இருக்கு போல!! 2021இல் எர்டிகா கார்களின் விற்பனை 48% அதிகரிப்பு!

இதன் பிரீமியம் வெர்சனான எக்ஸ்.எல்6 மாருதியின் நெக்ஸா பிரீமியம் தரத்திலான விற்பனை மையங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. உட்புறத்தில் இரண்டாவது இருக்கை வரிசையில் கேப்டன் இருக்கையை பெறும் எக்ஸ்.எல்6 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.14 லட்சங்களில் இருந்து ரூ.12.02 லட்சங்கள் வரையில் தற்போதைக்கு உள்ளன.

Most Read Articles
English summary
Maruti suzuki ertiga xl6 stood at 154310 units in 2021 with 48 percent yoy growth
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X