லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் புதிய மாருதி காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் தனது க்ராண்ட் விட்டாரா காரின் டெலிவரி பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்துள்ள க்ராண்ட் விட்டாரா காரின் விலைகளை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் அறிவித்தது.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

இதன்படி இந்த காரின் ஆரம்ப விலை 10.45 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.65 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த 5 சீட்டர் எஸ்யூவி கார், மிகவும் சவால் நிறைந்த செக்மெண்ட்டில் போட்டியிட்டு கொண்டுள்ளது.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி அஸ்டர் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற கார்களுடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் போட்டியிட்டு வருகிறது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

இதில், ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ கனெக்ட்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டியரிங் வீல் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

இதுதவிர ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

இதில், 103 பிஎஸ் பவரையும், 136.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், கே15சி மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதுதவிர ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் பெற்றுள்ளது.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

இந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது எரிபொருள் விற்பனையாகி கொண்டிருக்கும் விலையை மனதில் வைத்து பார்க்கையில், ஒரு லிட்டருக்கு சுமார் 28 கிலோ மீட்டர்கள் மைலேஜ் என்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான மைலேஜ் ஆக கருதப்படுகிறது.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் இந்திய வாடிக்கையாளர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காருக்கு 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த காருக்கு கிடைத்துள்ள உற்சாகமான வரவேற்பிற்கு இந்த எண்கள் ஒரு சான்று.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டிருப்பதை போல், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் டெலிவரி பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த 2 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்காகவும் காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் தற்போது உற்சாகம் அடைந்துள்ளனர்.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

இந்த செக்மெண்ட்டின் புது வரவுகளான ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய 2 கார்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதேபோல் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களுக்கு இடையேயும் நிறைய ஒற்றுமைகள் நம்மால் காண முடிகிறது.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது... இனி எல்லா எடத்துலயும் இந்த காரை பாக்கலாம்!

தற்போது புதிதாக விற்பனைக்கு வந்துள்ள மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய 2 கார்களையும் நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். இந்த 2 கார்களும் பல்வேறு விதங்களில் எங்களை கவர்ந்துள்ளன. எனவே இந்த 2 கார்களும் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

Most Read Articles

English summary
Maruti suzuki grand vitara deliveries begin
Story first published: Saturday, October 1, 2022, 9:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X