ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

மைலேஜை வாரி வழங்கும் மாருதியின் புதிய காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). மிட் சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த க்ராண்ட் விட்டாரா காரை மாருதி சுஸுகி நிறுவனம் நேற்றுதான் (செப்டம்பர் 26) விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை 10.45 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.65 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சூழலில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு குவிந்துள்ள முன்பதிவுகள் தொடர்பான விபரங்கள் தற்போது நமக்கு தெரியவந்துள்ளது.

ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

இதன்படி க்ராண்ட் விட்டாரா காருக்கு மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வரை 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு அதிகாரப்பூர்வமான முறையில் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கியது. அப்போதில் இருந்து இந்த காருக்கு தொடர்ச்சியாக முன்பதிவுகள் குவிந்து கொண்டே வருகின்றன.

ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

இந்த சூழலில்தான் தற்போது 57 ஆயிரம் முன்பதிவுகள் என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் கடந்துள்ளது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை நீங்கள் வாங்குவதாக இருந்தால், 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம். மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கும்.

ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் இன்ஜின் என இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

மறுபக்கம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினுடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் கூடிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு சுமார் 28 கிலோ மீட்டர்கள் மைலேஜை வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மிகவும் அதிகமான விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது. எனவே ஒரு லிட்டருக்கு சுமார் 28 கிலோ மீட்டர்கள் மைலேஜ் என்பது மிகவும் சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது. இந்த சிறப்பம்சத்துடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் ஏராளமான அதிநவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

இதில், பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதே நேரத்தில் பாதுகாப்பிற்காக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

மேலும் சுறா துடுப்பு ஆன்டெனா, 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்கள், 2 பீஸ் எல்இடி டெயில்லைட்கள் போன்ற அம்சங்களையும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் பெற்றுள்ளது. இவ்வளவு சிறப்பம்சங்கள் நிரம்பியிருப்பதால்தான், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு முன்பதிவுகள் தொடர்ச்சியாக குவிந்து வருகின்றன.

ஒரு லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ்... மாருதியின் புதிய காரை வீட்டுக்கு ஓட்டி வர கடும் போட்டி... புக்கிங் கொட்டுது!

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் போட்டியிடும். அத்துடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனையில் சவால் அளிக்கும். இதில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரும் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles

English summary
Maruti suzuki grand vitara gets over 57000 bookings in just 2 months
Story first published: Tuesday, September 27, 2022, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X