உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). இது மிட் சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். க்ராண்ட் விட்டாரா காரின் விலைகளை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

ஆனால் விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்பாகவே இந்த காரை 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து விட்டனர். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இந்த முன்பதிவு எண்ணிக்கையே சாட்சியாகும்.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

இந்த சூழலில் மாருதி சுஸுகி நிறுவனம் க்ராண்ட் விட்டாரா காரை வரும் செப்டம்பர் 26ம் தேதி (நாளை மறு தினம்) விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த காரின் விலை எவ்வளவு? என்பது நமக்கு நாளை மறு தினம் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), எம்ஜி அஸ்டர் (MG Astor), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (VW Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா போட்டியிடும்.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் நாளை மறு நாள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த காரின் டெலிவரி பணிகள் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில நாட்களிலேயே டெலிவரி பணிகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர், K15C மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 ஹெச்பி பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

இதுதவிர 1.5 லிட்டர், 3-சிலிண்டர், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனையும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 91 பிஹெச்பி பவரையும், 122 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதனுடன் எலெக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 79 ஹெச்பி மற்றும் 141 என்எம் ஆகும்.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 115 ஹெச்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு சுமார் 28 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

வசதிகளை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில், ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் கனெக்டிவிட்டி உடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

இதுதவிர அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 6 ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் என மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம். இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்களால்தான் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... 28 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் நாளை மறு நாள் அறிமுகம்... இவ்ளோ வசதிகள் வேற இருக்கா

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை வெறும் 9.5 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும் என தெரிகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.5 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலையில் வந்தால், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

Most Read Articles
English summary
Maruti suzuki grand vitara launch date september 26
Story first published: Saturday, September 24, 2022, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X