மாருதி கிராண்ட் விட்டாராவிற்கு குவியும் புக்கிங்! கம்மி விலைல வரபோது அதான் புக்கிங் 33,000 தொட்டிருக்கு!

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காருக்கு இந்தியாவில் தொடர்ச்சியாக புக்கிங் குவிந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதியின் புதுமுக கார் கிராண்ட் விட்டாராவிற்கு புக்கிங் குவிஞ்சுட்டு இருக்கு... கம்மி விலைல வரபோதுல அதான் இப்பவே 33,000 தொட்டிருக்கு!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக கிராண்ட் விட்டாரா (Grand Vitara) இருக்கின்றது. இக்காரை நடப்பாண்டின் இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது மாருதி சுஸுகி. இந்த நிலையில் இப்புதுமுக காருக்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எச்டி ஆட்டோ தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில் கிராண்ட் விட்டாரா காருக்கு இப்போதே 33 ஆயிரம் புக்கிங்குகள் குவிந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மாருதியின் புதுமுக கார் கிராண்ட் விட்டாராவிற்கு புக்கிங் குவிஞ்சுட்டு இருக்கு... கம்மி விலைல வரபோதுல அதான் இப்பவே 33,000 தொட்டிருக்கு!

இதில் கிராண்ட் விட்டாராவின் ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதிக் கொண்ட தேர்விற்கே அதிகளவில் புக்கிங் கிடைத்திருக்கின்றது. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா இரு விதமான ஹைபிரிட் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மைல்டு மற்றும் ஸ்ட்ராங் ஆகிய இரு விதமான ஹைபிரிட் தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த இரண்டில் அதிக மைலேஜ் தரக் கூடியதாகவும், அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்டதாகவும் ஸ்ட்ராங் ஹைிபிரிட் அம்சம் கொண்ட கிராண்ட் விட்டாரா இருக்கின்றது.

மாருதியின் புதுமுக கார் கிராண்ட் விட்டாராவிற்கு புக்கிங் குவிஞ்சுட்டு இருக்கு... கம்மி விலைல வரபோதுல அதான் இப்பவே 33,000 தொட்டிருக்கு!

இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ஒரு லிட்டருக்கு 27.97 கிமீ வரை கிராண்ட் விட்டாரா மைலேஜ் தரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இத்தகைய சிறப்பை அதுக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் ஸ்ட்ராங் ஹைபிரிட் கிராண்ட் விட்டாராவிற்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. தெளிவாகக் கூற வேண்டுமானால் தற்போதைய ஒட்டுமொத்த புக்கிங்கில் 48 சதவீதம் ஸ்ட்ராங் ஹைபிரிட் தேர்விற்கே புக்கிங் கிடைத்திருக்கின்றது.

மாருதியின் புதுமுக கார் கிராண்ட் விட்டாராவிற்கு புக்கிங் குவிஞ்சுட்டு இருக்கு... கம்மி விலைல வரபோதுல அதான் இப்பவே 33,000 தொட்டிருக்கு!

ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதற்கான மிக சிறந்த உதாரணமாக கிராண்ட் விட்டாராவிற்குக் கிடைத்து வரும் வரவேற்பு பற்றிய தகவல் அமைந்துள்ளது. ஹைபிரிட் கார்கள் என்பது வழக்கமான கார்களில் இருந்து பல மடங்கு மாறுபட்டவையாகக் காட்சியளிக்கின்றன.

மாருதியின் புதுமுக கார் கிராண்ட் விட்டாராவிற்கு புக்கிங் குவிஞ்சுட்டு இருக்கு... கம்மி விலைல வரபோதுல அதான் இப்பவே 33,000 தொட்டிருக்கு!

அவை, எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரு மோட்டார்களில் இயங்கும். ஆமாங்க, இந்த மாதிரியான ஓர் சிறப்பு வசதிக் கொண்ட காராகவே கிராண்ட் விட்டாரா உருவாக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் மோட்டார் என்ற உடன் இந்த வாகனம் மின்சார வாகனத்தைப் போல் பல நூறு கிமீ தூரம் பயணிக்கின்ற அளவிற்கு பேட்டரி பேக்கை பெறும் என நினைத்துக் கொள்ள வேண்டும். கணிசமான தூரம் பயணிக்கின்ற அளவிற்கு ரேஞ்ஜை வழங்கக் கூடிய பேட்டரியே இக்காரில் வழங்கப்பட்டிருக்கும்.

மாருதியின் புதுமுக கார் கிராண்ட் விட்டாராவிற்கு புக்கிங் குவிஞ்சுட்டு இருக்கு... கம்மி விலைல வரபோதுல அதான் இப்பவே 33,000 தொட்டிருக்கு!

அதாவது முழு சார்ஜில் 5கிமீ முதல் 20 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடிய வகையிலேயே பேட்டரி பேக் ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷன்களில் பயன்படுத்தப்படுகின்றது. அந்த பேட்டரியை தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. காரின் இயக்கத்தின் வாயிலாகவே சார்ஜ் செய்து கொள்ளும். அதேவேலையில், தனியாக சார்ஜ் செய்யும் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடனும் ஒரு சில கார்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதியின் புதுமுக கார் கிராண்ட் விட்டாராவிற்கு புக்கிங் குவிஞ்சுட்டு இருக்கு... கம்மி விலைல வரபோதுல அதான் இப்பவே 33,000 தொட்டிருக்கு!

மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதிக் கொண்ட கிராண்ட் விட்டாராவை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல பிரீமியம் அம்சங்களுடன் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அந்தவகையில், 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழைதல் மற்றும் தானாகவே மடக்கிக் கொள்ளும் ஓஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்கள் கிராண்ட் விட்டாராவில் வழங்கப்பட்டிருக்கும்.

மாருதியின் புதுமுக கார் கிராண்ட் விட்டாராவிற்கு புக்கிங் குவிஞ்சுட்டு இருக்கு... கம்மி விலைல வரபோதுல அதான் இப்பவே 33,000 தொட்டிருக்கு!

இதில், 9.0 அங்குலத்தில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் திரையானது ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்ப வசதியைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் இக்காரின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேவேலையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இந்த வாகனம் ரூ. 9.5 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தெரிவிக்கின்றன.

மாருதியின் புதுமுக கார் கிராண்ட் விட்டாராவிற்கு புக்கிங் குவிஞ்சுட்டு இருக்கு... கம்மி விலைல வரபோதுல அதான் இப்பவே 33,000 தொட்டிருக்கு!

அதேவேலையில், இதன் ஸ்ட்ராங் ஹைபிரிட் கிராண்ட் விட்டாரா ரூ. 10 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கக் கிடைக்க இருக்கின்றது. தற்போது இக்காருக்கு புக்கிங்குகள் மட்டுமே ஏற்கப்பட்டு வருகின்றது. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இத்தகைய குறைவான முன் தொகை, அதிக மைலேஜ், அதிக தொழில்நுட்ப வசதி மற்றும் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பது இவையே இக்காருக்கு புக்கிங்கை குவியச் செய்துக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Maruti suzuki grand vitara suv booking touches 33000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X