புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட கிராண்ட் விட்டாரா காருக்கு கிடைத்துள்ள முன்பதிவுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து முன்பு விற்பனையில் இருந்த விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை கார் பிரெஸ்ஸா என்கிற பெயரில் கடந்த ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, 'விட்டாரா' என்கிற பெயர் கழற்றிவிடப்பட்டது.

புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

இருப்பினும் விட்டாரா பெயர் இந்திய சந்தையில் பிரபலமானதாக விளங்கியதால், இந்த பெயரை கைவிடும் திட்டத்தில் மாருதி சுஸுகி இல்லை. இதனாலேயே சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள சுஸுகி விட்டாராவை இந்தியாவிலும் ஜூலை மாத துவக்கத்தில் முற்றிலும் புதிய தோற்றத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியீடு செய்தது.

புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

அதனை தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதியில் இருந்து விட்டாரா காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன. இந்த நிலையில் புதிய மாருதி விட்டாரா காருக்கான முன்பதிவுகள் தற்போது வரையில் மட்டுமே 20,000 யூனிட்களை கடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதாவது, முன்பதிவு துவங்கப்பட்ட 15 நாட்களில் விட்டாரா காரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புக் செய்துள்ளனர்.

புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

புதிய விட்டாரா காரை முன்பதிவு செய்வதற்கான முன்தொகை ரூ.11 ஆயிரம் ஆகும். புதிய விட்டாரா காருக்கான முன்பதிவுகள் ஆரம்பம் முதலே வலுவாக இருந்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய கிராண்ட் விட்டாராவை முன்பதிவு செய்தவர்களில் பலர் அதன் ஸ்ட்ராங் ஹைப்ரீட் வேரியண்ட்டையே தேர்வு செய்துள்ளனர்.

புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

இதில் இருந்து ஹைப்ரீட் கார்களுக்கு நம் இந்தியர்கள் மெல்ல மெல்ல மாறிவருவதை அறிய முடிகிறது. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு கூட, ஹோண்டா நிறுவனம் அதன் சிட்டி மாடலில் புதிய ஹைப்ரீட் வெர்சனை இ:எச்இவி என்கிற பெயரில் தைரியமாக அறிமுகப்படுத்தி இருந்தது. புதிய மாருதி கிராண்ட் விட்டாரா காரின் அறிமுகம் அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் துவங்கப்படலாம். மாருதி சுஸுகியின் புதிய நடுத்தர அளவு எஸ்யூவி காராக விளங்கும் கிராண்ட் விட்டாராவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த புதிய மாருதி எஸ்யூவி காரில் அதிகப்பட்சமாக சுமார் 27.97kmpl வரையிலான மைலேஜ் கிடைக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

இந்த மைலேஜ் ஆனது புதிய கிராண்ட் விட்டாராவின் இண்டெலிஜண்ட் எலக்ட்ரிக் ஹைப்ரிட் வேரியண்ட்டில் கிடைக்குமாம். இந்த வேரியண்ட்டை தான் அதிக பேர் முன்பதிவு செய்கின்றனர். இந்த வேரியண்ட்டில் 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் தன்னிச்சையாக சார்ஜ் செய்துக்கொள்ளக்கூடிய வலிமையான ஹைப்ரிட் அம்சம் வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வில் இ-சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படும்.

புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

இந்த வேரியண்ட் மட்டுமின்றி ஸ்மார்ட் ஹைப்ரிட் தேர்விலும் விட்டாரா விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால் இதில் 21.11kmpl வரையிலான மைலேஜை தான் பெற முடியுமாம். இந்த வேரியண்ட்டில் 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழிற்நுட்பம் வழங்கப்பட உள்ளது. இதன் என்ஜின் அமைப்பில் பிரேக் எனெர்ஜி ரீஜெனரேஷன், டார்க் அசிஸ்ட் மற்றும் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய வசதிகள் அடங்கும்.

புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

இயக்க ஆற்றலை பொறுத்தவரையில், ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் வேரியண்ட்டில் 114 பிஎச்பி வரையிலும், மைல்ட்-ஹைப்ரிட் வேரியண்ட்டில் 100 பிஎச்பி மற்றும் 135 என்எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றல் கிடைக்கும். இந்தியாவில் தற்சமயம் காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவுதான் நன்கு வளர்ச்சி கண்டு வருகிறது என்றாலும், இன்னும் சில வருடங்களில் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களை வாங்குவோரும் அதிகரிக்க துவங்கிவிடுவர்.

புதிய மாருதி கிராண்ட் விட்டாராவும் செம்ம ஹிட் தான் போலருக்கே!! இப்போவே புக்கிங் நம்பரை பாருங்களேன்!

ஏனெனில் இப்போதே ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸ் என்ற 2 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இவற்றின் போட்டி மட்டுமின்றி, டாடா ஹெரியர் மற்றும் எம்ஜி ஹெக்டரின் போட்டியினையும் மாருதி சுஸுகியின் புதிய கிராண்ட் விட்டாரா எதிர்கொண்டாக வேண்டும். முன்பு இந்த பிரிவில் மாருதி சுஸுகி சார்பில் எஸ்-கிராஸ் விற்பனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti suzuki has received over 20000 booking for new grand vitara
Story first published: Friday, July 29, 2022, 16:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X