அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள் மற்றும் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2022 செலிரியோவை தவிர்த்து கடந்த 2 வருடங்களாக பெரிய அளவில் எந்தவொரு அறிமுகமும் இல்லை. ஆனால் புதிய 2022ஆம் ஆண்டு அப்படி இருக்காது என்றே நினைக்கிறோம்.

அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

ஏனெனில் இந்த நடப்பு ஆண்டில் பல புதிய அறிமுகங்களை வரிசைக்கட்டி மாருதி சுஸுகி நிற்க வைத்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த 2022ஆம் ஆண்டில் 6 தயாரிப்புகளை (அப்டேட்கள்/ புதிய அறிமுகங்கள்) இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாம். இதில் சில ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல்களும், புதிய பிரிவுகளில் சில புதிய வாகனங்களும் அடங்குகின்றன.

அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

கடந்த பல வருடங்களாகவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மொத்த கார்களில் கிட்டத்தட்ட 50%, அதாவது பாதி கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதாக இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த 2020ஆம் ஆண்டில் புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு மாருதி சுஸுகி மெதுவாக தனது 50% என்கிற ஆதிக்கத்தை இழக்க ஆரம்பித்துள்ளது.

அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

இதனை கடந்த 2021 டிசம்பர் மாத கார்கள் விற்பனையில் தெளிவாக பார்க்க முடியும். 2020 டிசம்பரில் மொத்த கார்கள் விற்பனையில் இந்த நிறுவனத்தின் கார்கள் 50.90 சதவீத பங்கை பெற்றிருந்த நிலையில், கடந்த டிசம்பரில் இது 48.34% ஆக குறைந்துள்ளது. ஆகையால், இந்த 2022இல் புதிய அறிமுகங்களின் மூலமாக மாருதி சுஸுகி மீண்டும் தனது பழைய நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

டீசல் மோட்டார்களின் பயன்பாடு நிறுத்தம், உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை மற்றும் கொரோனா வைரஸின் இரு அலைகள் பரவல் உள்ளிட்டவை மாருதி சுஸுகி நிறுவனத்தையும் பதம் பார்த்துள்ளன. அதிலிலும் குறிப்பாக, குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை கடந்த ஆண்டின் கடைசி சில மாதங்களில் மாருதி சுஸுகி கார்களின் தயாரிப்பு பணிகளை நேரடியாக பாதித்தது.

அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

இதன் காரணமாக செப்டம்பரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் வரையில் இந்த நிறுவனம் தனது தொழிற்சாலை பணிகளை கணிசமாக குறைத்து, அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டில் விற்பனையில் புதிய மைல்கல்களை அடைந்த அறிவிப்புகளைதான் வெளியிட வேண்டும் என்கிற தீர்மானத்தில் மாருதி குழுவினர் உள்ளனர்.

அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

இதனால் இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்ச கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக உள்ளது. மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து இந்த ஆண்டில் மிக முக்கியமான புதிய மாடலாக ஜிம்னி கொண்டுவரப்பட உள்ளது. ஏனெனில் மஹிந்திரா தார் வாகனத்திற்கு போட்டியாக மாருதி ஜிம்னி 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம்.

அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

அதுமட்டுமின்றி சமீபத்தில் தான் ஜிம்னியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஜப்பான் உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் 3-கதவு வெர்சனில் ஜிம்னி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் இங்குள்ள தேவைக்கு ஏற்ப 5-கதவு வெர்சனாக ஜிம்னி வாகனம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

இதற்கடுத்த மாருதி சுஸுகியின் முக்கிய வெளியீடாக ஹுண்டாய் க்ரெட்டாவின் போட்டி எஸ்யூவி மாடல் கொண்டுவரப்பட உள்ளது. மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட உள்ள இந்த எஸ்யூவி காருக்கு தற்போதைக்கு ஒய்.எஃப்.ஜி என குறியீட்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த 18 மாதங்களில் 8 புதிய கார்கள்... பக்கா ப்ளானில் மாருதி சுஸுகி!! புதிய அறிமுகங்கள் என்னென்ன தெரியுமா?

உலகளாவிய சுஸுகி-டொயோட்டா கூட்டணி சமீபத்தில் இந்திய சந்தைக்கும் கொண்டுவரப்பட்ட பிறகு தயாரிக்கப்பட உள்ள முதல் வாகனமாக இந்த எஸ்யூவி கார் விளங்கவுள்ளது. பலேனோவையும் அப்டேட் செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. ஆனால் பலேனோ முழுவதுமாக அப்டேட் செய்யப்படுமா அல்லது முன் மற்றும் பின்பக்கத்தில் சில காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் கொண்டுவரப்பரப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

Most Read Articles
English summary
Maruti suzuki india is getting ready for an exciting year ahead
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X