முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் ஆரம்ப நிலை எல்எக்ஸ்ஐ வேரியண்ட் தொடர்பான படங்கள் இணையத்தில் முதல்முறையாக வெளியாகியுள்ளன. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

மாருதி சுஸுகி நிறுவனம் வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய பல புதிய எஸ்யூவி கார்களை தயார் நிலையில் வைத்துள்ளது. இதில் முதல் மாடலாக புதிய தலைமுறைக்கு அப்டேட் செய்யப்பட்ட பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார் மிக விரைவில் (ஜூன் 30) சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

விட்டாரா பிரெஸ்ஸா பெயருக்கு மாற்றாக பிரெஸ்ஸா என மட்டுமே அழைக்கப்பட உள்ள இந்த புதிய மாடல் தோற்றத்தில் அப்டேட்டாகி இருப்பது மட்டுமின்றி, புதியதாக பல தொழிற்நுட்ப வசதிகளை பெற்று வருகிறது. இதற்கிடையில்தான் தற்போது 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் விலை குறைவான ஆரம்ப நிலை எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட் தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளன.

முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

எல்.எக்ஸ்.ஐ, எல்.எக்ஸ்.ஐ (ஆப்ஷ்னல்), விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ (ஆப்ஷ்னல்), இசட்.எக்ஸ்.ஐ, இசட்.எக்ஸ்.ஐ (ஆப்ஷ்னல்), இசட்.எக்ஸ்.ஐ+ என்ற 7 மேனுவல் வேரியண்ட்களிலும், விஎக்ஸ்ஐ, இசட்.எக்ஸ்.ஐ, இசட்.எக்ஸ்.ஐ+ என்ற 3 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களிலும் என மொத்தம் 10 விதமான வேரியண்ட்களில் புதிய பிரெஸ்ஸா கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

புதிய பிரெஸ்ஸா கார் தொடர்பாக இதற்கு முன் வெளியாகி இருந்த ஸ்பை படங்கள் மற்றும் டீசர்கள் பெரும்பாலும் மாடலின் டாப் வேரியண்ட்களை வெளிகாட்டுவதாகவே இருந்தன. ஏனெனில் பொதுவாக தயாரிப்பு நிறுவனங்கள் காரின் டாப் வேரியண்ட்களை விளம்பரப்படுத்தவே விரும்புகின்றன. ஆனால் தற்போது முதல்முறையாக 2022 பிரெஸ்ஸாவின் ஆரம்ப-நிலை வேரியண்ட்டை விவரிக்கும் படங்கள் வெளிவந்துள்ளன.

முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

விலை குறைவான எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட் என்பதால், இந்த படங்களில் இரும்பு சக்கரங்களை பிரெஸ்ஸா கார் கொண்டுள்ளது. அதேபோல், எல்இடி டிஆர்எல்கள் எதுவும் காரில் இல்லை. ஹலோஜன் ஹெட்லேம்ப் அமைப்பில் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன. முன்பக்க டர்ன் இண்டிகேட்டர்களிலும் சரி, பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளில் அமைந்துள்ள பக்கவாட்டு டர்ன் இண்டிகேட்டர்களிலும் சரி க்ரோம் தொடுதல்களை காண முடிகிறது.

முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

உட்புறம் முற்றிலுமாக முந்தைய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய பிரெஸ்ஸா எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டின் கேபின் ஆனது சற்று விலை குறைவான பிளாஸ்டிக்கால் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேரிங் சக்கரத்தை பொறுத்தவரையில், மற்ற மாருதி கார்களில் உள்ளதை போன்று, ஓட்டுனர் உள்ளே நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் வசதியாக கீழ்-தட்டையானதாக உள்ளது.

முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

புதிய பிரெஸ்ஸாவின் இந்த ஆரம்ப நிலை வேரியண்ட்டின் டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு இல்லை. ஆனால் அனைத்து 4 ஜன்னல் கண்ணாடிகளும் தேவைக்கேற்ப மடக்கக்கூடியவைகளாகவும், பின் இருக்கை வரிசையிலும் ஏசியும் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த வாரத்தில் வெளியாகி இருந்த புதிய பிரெஸ்ஸாவின் உயர்-நிலை வேரியண்ட்டில் காற்றில்-நிற்பது போன்றதான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரையை காண முடிந்திருந்தது.

முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடியதாக உள்ள இதே இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை தான் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரிலும் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது. வெளிப்புற தோற்றத்தில் முந்தைய தலைமுறை உடன் ஒப்பிடுகையில், புதிய பிரெஸ்ஸா சற்று பெட்டகம்/எம்பிவி போன்றதாக மாறியுள்ளது.

முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

இது காரின் அழகை கெடுத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த மாற்றத்தால், பின் இருக்கை வரிசையில் பயணிகளுக்கு கூடுதலாக இடவசதி கிடைத்திருப்பது மட்டுமில்லாமல், பூட் ஸ்பேஸ் அளவும் அதிகரித்துள்ளது. இந்திய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் தற்சமயம் டாடா நெக்ஸானின் ஆதிக்கமாக உள்ளது.

முதல்முறையாக காட்சி தந்துள்ள விலை குறைவான 2022 மாருதி பிரெஸ்ஸா வேரியண்ட்!! என்னென்ன அம்சங்கள் இல்லை?

டாடா நெக்ஸான் மட்டுமின்றி, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் போன்ற மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை போட்டியினையும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சமாளித்தாக வேண்டும். புதிய மாருதி பிரெஸ்ஸாவின் அறிமுகத்தை தொடர்ந்து, இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸரின் புதிய தலைமுறை மாடலின் அறிமுகத்தையும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Maruti suzuki new gen brezza base lxi variant revealed in video ahead of launch
Story first published: Wednesday, June 29, 2022, 17:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X