மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 ஆயிரம் கொடுத்தாலே போதும்!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புதிய ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகளைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் அதன் ஆல்டோ கே10 காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கடந்த சில தினங்களாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தகவலை மிக சமீபத்திலேயே மாருதி சுஸுகி நிறுவனம் உறுதிப்படுத்தியது. இதை மீண்டும் வலுவாக இந்தியர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாருதி ஓர் டீசர் படத்தை வெளியிட்டிருக்கின்றது.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

இதுமட்டுமின்றி, புதிய டீசர் படம் ஆல்டோ கே10 காருக்கு இந்திய புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆமாங்க, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் காருக்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றது.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

மாருதி சஸுகி நிறுவனம் வரும் 18 ஆகஸ்டு 2022 அன்றே ஆல்டோ கே10 காரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இக்கார் முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் பல மடங்கு சூப்பரான காராக மாற்றப்பட்டிருக்கின்றது. குறிப்பாக சிறப்பு வசதிகள் மற்றும் அம்சங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக புதுப்பித்தலின் அடிப்படையில் ஸ்போர்ட்டி தோற்றம் ஆல்டோ கே10 காருக்கு வழங்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் மட்டுமின்றி உட்புறத்திலும் பன்முக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

புதிய ஹார்டெக்ட் பிளாட்பாரத்தின் வாயிலாகவே மாருதி நிறுவனம் ஆல்டோ கே10 காரை புதுப்பித்துள்ளது. ஆகையால், நவீன அம்சங்கள் பல ஆல்டோ கே10 காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே மாருதி சுஸுகி எஸ் பிரஸ்ஸோ, செலிரியோ, பலினோ மற்றும் எர்டிகா உள்ளிட்ட கார் மாடல்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

ஒட்டுமொத்தமாக ஆல்டோ கே10 12 வேரியண்டுகளில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்டோ 800 காருடன் இணைந்து விற்பனைக்குக் கிடைக்கும் என மாருதி தெரிவித்துள்ளது. சற்று அதிக இடவசதியுடன் ஆல்டோ கே10 உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக துள்ளியமாகக் கூற வேண்டும் என்றால் 3,530 மிமீ நீளத்திலும், 1,490, மிமீ அகலத்திலும், 1,520 மிமீ உயரத்திலும் மற்றும் 2,380 மிமீ வீல் பேஸிலும் ஆல்டோ கே10 உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

முந்தைய ஆல்டோ கே10 இதைவிட 85 மிமீ குறைவான நீளத்தையும், 45 மிமீ குறைவான உயரத்தையும் மற்றும் 20 மிமீ குறைவான வீல் பேஸையும் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இக்காரின் ப்யூவல் டேங்க் 17 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதன் பூட் ஸ்பேஸ் 177 லிட்டர் ஆகும். இதுமட்டுமில்லைங்க முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ஆல்டோ கே10 உருவாக்கப்பட்டுள்ளது.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

செலிரியோ மற்றும் ஆல்டோ 800 ஆகிய இரு கார்களின் கலவையாக புதிய ஆல்டோ கே10 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கலவை தோற்றத்தினாலேயே புதிய ஆல்டோ கே10 அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. அதேநேரத்தில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட விட்டாரா காரின் புரஃபைலையும் லேசாக தழுவி இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

தற்போது இணையத்தில் கசிந்திருக்கும் படத்தின் வாயிலாக ஆறு விதமான நிற தேர்வில் ஆல்டோ கே10 விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக ஹெக்ஸோகனல் க்ரில் முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், குரோம் அக்செண்டுகளும் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முட்டை வடிவ ஹாலோஜன் லைட், எல்இடி டிஆர்எல் பார் மற்றும் ஸ்டீல் ரிம் உள்ளிட்டவை காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

காரின் உட்பகுதி முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது) ட்யூவல் ஏர்பேக், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் மேனுவல் ஏர் கன்டிஷனிங் ஆப்ஷன் என எக்கசக்க அம்சங்கள் ஆல்டோ கே10 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

இந்த அனைத்து அம்சங்களும் அதிக பிரீமியம் உணர்வை வழங்கும் வகையில் உள்ளன. இவற்றுடன் சேர்த்து அனைத்து விண்டோக்களுக்கும் பவர் வசதி, ரிமோட் கீ, எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஏபிஎஸ் அம்சம் உள்ளிட்டவை ஆல்டோ கே10 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 கொடுத்தாலே போதும்!

எஞ்ஜினை பொருத்தவரை ஆல்டோ கே10 1.0 லிட்டர் கே10சி ட்யூவல்ஜெட் பெட்ரோல் மோட்டாருடனேயே விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 67 எச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாரில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இந்த மோட்டாருடன் சேர்த்து சிஎன்ஜி தேர்வும் மாருதி ஆல்டோ கே10 காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Maruti suzuki opens booking for alto k10 here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X