வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி... 2023ல செம ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது

2023 maruti swift , Baleno cross மாருதி நிறுவனம் வரும் 2023ம் ஆண்டு 3 புதிய கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதுவரை 3 கார்கள் உறுதியாகியுள்ள நிலையில் அது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி . . . 2023ல இப்படி ஒரு ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது . . .

மாருதி, இந்தியாவில் அதிகமாக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம். இந்நிறுவனத்தின் கார்களுக்கு மார்கெட்டில் செம டிமாண்ட் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2020-2021 ஆண்டு மாருதிக்கு மட்டுமல்ல ஆட்டோமொபைல் துறைக்கே போதாத காலம் எனச் சொல்லிவிடலாம். மாருதி இந்த காலகட்டத்தில் பெரியதாக கார்களை ஒன்றும் களம் இறக்க வில்லை.

வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி . . . 2023ல இப்படி ஒரு ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது . . .

ஆனால் 2022 அப்படியல்ல புதிய பலேனோ, பிரெஸ்ஸா, புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஆல்டோ கே10 மற்றும் புத்தம் புதிய காரான கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் மாருதியின் இந்த அதிரடிகள் இத்தோடு நிற்கப்போவதில்லை. மாருதியில் அடுத்தடுத்த புதிய கார்கள் அறிவிப்புகள் 2023ம் ஆண்டிலும் தொடரப்போகிறது. இந்த பதிவில் நாம் 2023ம் ஆண்டு வெளியாகவுள்ள மாருதி கார்களை பற்றிக் காணப்போகிறோம்

வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி . . . 2023ல இப்படி ஒரு ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது . . .

மாருதி சுஸூகி பலேனோ க்ராஸ்

மாருதி சமீபத்தில் வெளியிட்ட கிராண்ட் விட்டாரா கார் அதன் நெக்ஸா ஷோரூம்களில் மட்டுமே அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்போது மாருதி இதே போலத் தனது பலேனோ ஹேட்ச்பேக் காரை பிரியம் ரக்கட் லுக்கிங் வெர்ஷனாக மாற்றி களம் இறக்கத் தயாராகி வருகிறது.

வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி . . . 2023ல இப்படி ஒரு ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது . . .

மாருதி கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்ட ஃப்யூச்சரோ-இ கான்செப்ட் காரில் இதை உருவாக்கியுள்ளது. இந்த கார் பலேனோ ஹேட்ச்பேக் காரின் அதிகரிக்கப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் வெளிவரவுள்ளது. இது மட்டுமல்ல முன்பக்கம் மற்றும் பக்க டிசைன்களிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி . . . 2023ல இப்படி ஒரு ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது . . .

இந்த கார் புதிய மாருதி சுஸூகி பலேனோ க்ராஸ் கார் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் இன்ஜின் உடன் அல்லது கிராண்ட் விட்டாரா காரில் உள்ள 1.5 லிட்டர் 4 சிலிண்டர் அஸ்பிரேட்டட் கே15சி டூயல் ஜெட் இன்ஜின் உடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி . . . 2023ல இப்படி ஒரு ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது . . .

மாருதி சுஸூகி ஜிம்னி

மாருதி நிறுவனத்தின் மிக முக்கியமான கார் இது.இந்த காரின் அறிமுகத்திற்காகப் பலர் பல ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த ஜிம்னி கார் வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த காருக்கு 3 டோர்கள் இருக்கிறது. ஆனால் இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும் போது 5 டோர் காராக அறிமுகமாகும்.அதே நேரம் இது வெறும் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி . . . 2023ல இப்படி ஒரு ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது . . .

இந்த புதிய 5 டோர் ஜிம்னி கார் தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் 3 டோர் ஜிம்னி காரின் அதே பாக்ஸி டிசைனிலேயே இருக்கும் என கூறப்படுகிறது. இதன் ஹெட்லட்கள் அதே நியோ ரெட்ரோ வட்டமான ஹெட்லைட்கள் உள்ளன. பின்பக்க கதவில் ஸ்பேர் டயர் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கார் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் கிராண்ட் விட்டாரா காரில் உள்ள 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு கே15சி டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி . . . 2023ல இப்படி ஒரு ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது . . .

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

தற்போது 3ம் தலை முறை மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனையில் இருக்கிறது. ஆனால் இந்த தலைமுறை காரின் டிசைன் வந்து அதிக நாட்கள் ஆகிவிட்டால் புதிதாக இந்த காரை அப்டேட் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே இந்த காரின் 4ம் தலைமுறை கார் ஐரோப்ப சாலைகளில் சென்ற ஸ்பை புகைப்படங்கள் வெளியானது.

வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி . . . 2023ல இப்படி ஒரு ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது . . .

தற்போது உள்ள காரை ஒப்பிடும் போது 4ம் தலைமுறை கார் சற்று பெரிய காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த காரின் ஐகானிக் விஷயங்களான வித்தியாசமான சில்லவுட் மற்றும் ஸ்கோட் ஸ்டான்ஸ் அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உட்புற கட்டமைப்பு மாற்றியமைக்கப்படலாம். பல புதிய தலைமுறை கார்களில் வருவது போல ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜர், சைடு மற்றும் கர்டன் பேக்ஸ், ஆகிய வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தா பெரிய சம்பவத்தோடதான் வருவேன்னு காத்திருக்கும் மாருதி . . . 2023ல இப்படி ஒரு ஸ்கெட்ச்க்கு சைலெண்டா பிளான் நடக்குது . . .

இன்ஜினை பொருத்தவரை அதே 1.2 லிட்டர் 4 சிலிண்டர் கே12சி டியூல் ஜெட் 90 பிஎஸ் பெட்ரோல் இன்ஜின் தான் இந்த காரிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரும் 2023ம் ஆண்டே அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki plans to launch 3 cars in 2023
Story first published: Friday, September 30, 2022, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X