2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

2022 மாருதி சுஸுகி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் துவங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

முதன்முதலாக கடந்த 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாருதி சுஸுகி பலேனோ, பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் அதனை தலைமையாக முன்னுறுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், பலேனோவிற்கு மாருதி நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குவதாகும்.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

இதன் மூலமாக தயாரிப்பில் 1 மில்லியன் யூனிட்களை இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் அடைந்துள்ளதாக கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்திதளத்தில் கூட பார்த்திருந்தோம். ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்ஸா, டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்டவற்றுடன் விற்பனையில் போட்டியிட்டுவரும் மாருதி சுஸுகி பலேனோ மாடல் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் 25%-ஐ கொண்டுள்ளது.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட 2022 பலேனோ காரை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கு முன்னதாக குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலையில் இந்த அப்டேட்டட் ஹேட்ச்பேக் காரின் தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான படம் மிலிண்ட் படேல் என்பவரது மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

Image Courtesy: Milind Patel

இந்த படத்தில் முழுவதும் தயாரிக்கப்பட்ட முதல் 2022 பலேனோ கார்களை காணலாம். 2022 பலேனோ காரின் முன்பக்கம் முன்பை காட்டிலும் தட்டையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட க்ரில், எல்இடி டிஆர்எல்-களுடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் பின்பக்கத்தில் அகலமான டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

இவற்றின் மூலமாக முன்பை காட்டிலும் மாருதி பலேனோ கார் கூடுதல் பிரீமியம் தரத்திலானதாக மற்றும் ஸ்போர்டியரானதாக மாறியுள்ளது. இத்தகைய வெளிப்புறத்திற்கு ஏற்ப புதிய பலேனோவின் உட்புறமும் சில அப்டேட்களை பெற்றுள்ளது. இதன்படி, புதிய செயல்பாட்டு அமைப்புடன் 9.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை 2022 பலேனோ பெற்றுள்ளது.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் டொயோட்டா உடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் புதிய பலேனோ மாடலின் டாப் வேரியண்ட்கள் சுஸுகி கனெக்ட் டெலெமேட்டிக்ஸையும் நிலையான தேர்வாக பெறவுள்ளன. உட்புறத்தில் மற்ற அப்டேட்களாக புதியதாக பல்வேறு தகவல்களை வழங்கக்கூடிய திரை, தட்டையான ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை திருத்தப்பட்ட டிசைனிலான டேஸ்போர்டில் வழங்கப்பட உள்ளன.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

இவற்றுடன், தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல் யூனிட் உடன் ஏசி துளைகள் மற்றும் வயர் இல்லா போன் சார்ஜர் போன்றவையும் இதன் கேபினில் கொடுக்கப்படவுள்ளன. இந்த முறை பலேனோ மாடலில் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம். இந்த வகையில் தடிமனான/ வலிமையான இரும்பினால் பலேனோவின் உடற்கூடு உருவாக்கப்பட்டிருக்கலாம்.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

இதனால் முதல் மாருதி சுஸுகி காராக புதிய பலேனோ உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் முழு ஐந்து நட்சத்திரங்களையும் பெறும் என எதிர்பார்க்கிறோம். இதற்காக, 2022 பலேனோ கார் அதன் டாப் வேரியண்ட்களில் ஓட்டுனர் & முன் இருக்கை பயணிக்கு சேர்த்து மொத்தம் 6 காற்றுப்பைகளை பெற்றுவரவுள்ளதாக தற்போதைக்கு நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

அத்துடன் பின் இருக்கை பயணிகளுக்கும் பாதுகாப்பிற்கு காற்றுப்பைகள் வழங்கப்பட உள்ளதாம். பயணிகள் பாதுகாப்பு தொகுப்பில் அப்டேட் அம்சமாக எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளது. மற்றப்படி என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. 2022 பலேனோ காரும் வழக்கமான 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் & 1.2 லிட்டர் ட்யுவல்ஜெட் விவிடி என்ஜின் தேர்வுகளையே தொடரவுள்ளது.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

இதில் 1.2 லி என்ஜின் அதிகப்பட்சமாக 82 எச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனையும், 1.2 லி ட்யுவல்ஜெட் என்ஜின் 89 எச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக தற்சமயம் உள்ளன. இவற்றுடன் தற்போதைக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆதலால் புதிய பலேனோவில் ஆட்டோமேட்டிக் கியர் மாற்றி (AGS) டிரான்ஸ்மிஷன் தேர்வும் அறிமுகப்படுத்தப்படலாம்.

2022 மாருதி பலேனோ கார்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கியாச்சு!! அறிமுகம் மிக விரைவில்!

இத்தகைய அப்டேட்களுக்கு ஏற்ப பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சற்று அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. 2022 பலேனோவும் மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப்களிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles
English summary
2022 Maruti Baleno Production Starts – First Unit Rolls Out Of Plant.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X