சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு, இந்திய சாலைகளில் ஏராளமான ஸ்விஃப்ட் கார்கள் ஓடி கொண்டுள்ளன. பரபரப்பான சாலையில் சிறிது நேரம் நின்றால் கூட, நிறைய ஸ்விஃப்ட் கார்களை காண முடியும்.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அந்த அளவிற்கு இந்திய வாடிக்கையாளர்களின் மனதை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் கொள்ளையடித்துள்ளது. இந்த சூழலில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய சிஎன்ஜி (CNG) வெர்ஷன் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் தற்போது எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில் எந்தவொரு எலெக்ட்ரிக் காரையும் விற்பனை செய்யவில்லை. எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் தற்போதைக்கு மாருதி சுஸுகி நிறுவனம் கவனம் செலுத்தவில்லை. மாறாக சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பங்களில் மாருதி சுஸுகி நிறுவனம் மிகவும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

தொடர்ந்து பல்வேறு கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை மாருதி சுஸுகி நிறுவனம் களமிறக்கி வரும் நிலையில், தற்போது ஸ்விஃப்ட் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எஸ்-சிஎன்ஜி (Maruti Suzuki Swift S-CNG) என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எஸ்-சிஎன்ஜி வெர்ஷனின் விலை 7.77 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனத்தின் மாத சந்தா திட்டத்தின் கீழும், ஸ்விஃப்ட் எஸ்-சிஎன்ஜி காரை வாங்கி பயன்படுத்த முடியும். மாத சந்தா திட்டம் 16,499 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இது மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள 9வது சிஎன்ஜி மாடல் ஆகும். VXi மற்றும் ZXi என 2 வேரியண்ட்களில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எஸ்-சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு கிடைக்கும். இதில், Vxi வேரியண்ட்டின் விலைதான் 7.77 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ZXi வேரியண்ட்டின் விலை 8.45 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எஸ்-சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர், K-சீரிஸ் ட்யூயல்-ஜெட், ட்யூயல் விவிடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 76 பிஹெச்பி பவரையும், 4,300 ஆர்பிஎம்மில் 98 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஸ்விஃப்ட் எஸ்-சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 30.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவில் நல்ல மைலேஜ் வழங்க கூடிய ஹேட்ச்பேக் கார் வாங்க வேண்டும் என விரும்புபவர்கள், மாருதி சுஸுகி எஸ்-சிஎன்ஜி காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது சிஎன்ஜி தொழில்நுட்பத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. எனவே வரும் காலங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து இன்னும் பல்வேறு புதிய சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதன்படி 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (2022 Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற கார்கள் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த 2 புதிய கார்களுக்கும் தற்போது முன்பதிவுகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சூப்பரான விலை... மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

எனவே 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆகிய இரண்டு கார்களுமே விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. இதில், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற கார்களுடன் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா போட்டியிடும்.

Most Read Articles

English summary
Maruti suzuki swift s cng launched in india price mileage
Story first published: Friday, August 12, 2022, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X