மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!

இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ப்ளஸ் மற்றும் மைனஸ்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!

புதிய ஸ்விஃப்ட் எஸ்-சிஎன்ஜி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ததன் மூலம், இந்தியாவில் தனது எஸ்-சிஎன்ஜி லைன்-அப்பை மாருதி சுஸுகி நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது. VXi மற்றும் ZXi என மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் ஒட்டுமொத்தமாக 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த காரை பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!

இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஏற்கனவே மிகவும் பிரபலமான காராக இருந்து வருகிறது. இந்த காரை பற்றி தெரியாதவர்கள் யாருமே இல்லை எனலாம். அப்படி இருக்கும்போது சிஎன்ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது, ஸ்விஃப்ட் காரின் மதிப்பை கூட்டும். ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 30.90 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!

அரிப்பு மற்றும் கசிவு ஆகியவற்றை தடுப்பதற்காக ஒட்டுமொத்த சிஎன்ஜி கட்டமைப்பும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்களால் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான மைலேஜ் மற்றும் பாதுகாப்பு ஆகிய 2 அம்சங்களும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ் பாயிண்ட்கள் ஆகும். ஆனால் இந்த காரில், மைனஸ் பாயிண்ட்களும் உள்ளன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!

2 வேரியண்ட்களில் மட்டுமே கிடைப்பது இதன் முக்கியமான மைனஸ் பாயிண்ட் ஆகும். இன்னும் அதிக வேரியண்ட்களில் கிடைத்தால், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் கவர முடியும். அதேபோல் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே பெற்றிருப்பது இதன் மற்றொரு குறை. மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற எஸ்-சிஎன்ஜி கார்களும் கூட, 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே பெற்றுள்ளன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!

அதேபோல் ஸ்டாண்டர்டு ஸ்விஃப்ட் காருடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. இதுவும் இந்த காரின் முக்கியமான குறைகளில் ஒன்று. சரி, இனி மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் எந்த வேரியண்ட்டை வாங்கலாம்? என்பதை பார்க்கலாம்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை நீங்கள் வாங்குவதாக இருந்தால், ZXi வேரியண்ட்டை வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலனை செய்யலாம். ஏனெனில் இந்த வேரியண்ட்டில், அலாய் வீல்கள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், எலெக்ட்ரிக் ஓஆர்விஎம்கள், ரியர் டீஃபாகர் (Rear Defogger), ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முன் பகுதியில் பனி விளக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!

மேலும் ஆட்டோ ஏசி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 7 இன்ச் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ, இன்ஜின் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இனி புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் இன்ஜின் பற்றிய விபரங்களை பார்க்கலாம். இந்த காரில், 1.2 லிட்டர், கே-சீரிஸ், ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!

இந்த இன்ஜின் பெட்ரோல் மோடில் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 89 பிஹெச்பி பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் சிஎன்ஜி மோடில் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 76 பிஹெச்பி பவரையும், 4,300 ஆர்பிஎம்மில் 98.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!

உங்களுக்கு தெரியுமா?

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை, நீங்கள் மாத சந்தா திட்டத்திலும் வாங்க முடியும். இந்த காருக்கான மாத சந்தா திட்டம் 16,499 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த 16,499 ரூபாயில் அனைத்தும் அடங்கி விடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த கார் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் இன்னும் பல்வேறு கார்களும் மாத சந்தா திட்டத்தில் கிடைக்கின்றன.

Most Read Articles

English summary
Maruti suzuki swift s cng pros and cons
Story first published: Monday, August 15, 2022, 7:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X