35 கிமீ மைலேஜ் தரும்... மாருதி சுசுகி செலிரியோ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

மிக மிக அதிக மைலேஜை தரக் கூடிய திறனுடன் மாருதி சுசுகி செலிரியோ சிஎன்ஜி (Maruti Suzuki Celerio CNG) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

சொன்ன நம்ப மாட்டீங்க இந்த கார் மிக மிக அதிக மைலேஜை தரும்... எவ்ளோ தெரிஞ்சா இப்பவே ஒரு கார வாங்க புறப்படுவீங்க!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் சிஎன்ஜி வசதிக் கொண்ட செலிரியோ காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த கார் மீது எதிர்பார்ப்பு மிக அதிகளவில் நீடித்து வந்த நிலையில் இன்று (ஜனவரி 17) செலிரியோ சிஎன்ஜி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. செலிரியோ எஸ்-சிஎன்ஜி (Celerio CNG) எனும் பெயரில் இக்கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

சொன்ன நம்ப மாட்டீங்க இந்த கார் மிக மிக அதிக மைலேஜை தரும்... எவ்ளோ தெரிஞ்சா இப்பவே ஒரு கார வாங்க புறப்படுவீங்க!

மாருதி சுசுகி நிறுவனம் அதன் புதிய தலைமுறை செலிரியோ காரை மிக சமீபத்திலேயே நம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தது. இந்த காரே இந்தியாவின் தற்போதைய மிக அதிக மைலேஜை தரும் வாகனமும்கூட. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாருதி சுசுகி செலிரியோ அதிகபட்சமாக 26.68 கிமீ மைலேஜ் தரும்.

சொன்ன நம்ப மாட்டீங்க இந்த கார் மிக மிக அதிக மைலேஜை தரும்... எவ்ளோ தெரிஞ்சா இப்பவே ஒரு கார வாங்க புறப்படுவீங்க!

செலிரியோவின் ஏஎம்டி தேர்வே இத்தகைய அதிகபட்ச மைலேஜை தருகின்றது. இந்த அதிகபட்ச மைலேஜை தோற்கடிக்கும் வகையில் தற்போது அறிமுகமாகி இருக்கும் சிஎன்ஜி வசதிக் கொண்ட செலிரியோவின் வருகை அமைந்துள்ளது. சிஎன்ஜி செலிரியோ மிக அதிக மைலேஜை தரும் இந்திய கார் மாடலாக மாறி இருக்கின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க இந்த கார் மிக மிக அதிக மைலேஜை தரும்... எவ்ளோ தெரிஞ்சா இப்பவே ஒரு கார வாங்க புறப்படுவீங்க!

இது ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 35.60 கிமீ வரை பயணிக்கும். இது வழக்கமான செலிரியோவைக் காட்டிலும் மிக அதிகம் மைலேஜ் ஆகும். இந்த சிறப்பான மைலேஜ் மைலேஜ் அதிகம் மைலேஜ் தரும் கார்களை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க இந்த கார் மிக மிக அதிக மைலேஜை தரும்... எவ்ளோ தெரிஞ்சா இப்பவே ஒரு கார வாங்க புறப்படுவீங்க!

செலிரியோ எஸ்-சிஎன்ஜி எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காருக்கு ரூ. 6.58 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஏற்கனவே இந்தியாவில் மாருதி சுசுகி செலிரியோ காருக்கு மிக அதிகளவில் புக்கிங் குவிந்து வருகின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க இந்த கார் மிக மிக அதிக மைலேஜை தரும்... எவ்ளோ தெரிஞ்சா இப்பவே ஒரு கார வாங்க புறப்படுவீங்க!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இக்கார் விற்பனைக்கு வந்த இரண்டே மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்கைகளைப் பெற்றது. இந்த அமோக வரவேற்பை இன்னும் பல மடங்காக அதிகரிக்க சிஎன்ஜி செலிரியோவின் அறிமுகம் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க இந்த கார் மிக மிக அதிக மைலேஜை தரும்... எவ்ளோ தெரிஞ்சா இப்பவே ஒரு கார வாங்க புறப்படுவீங்க!

இந்த காரின் அறிமுகம் மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா டியோக சிஎன்ஜிக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 60 லிட்டர் வரை சிஎன்ஜி-யை சேமித்து வைக்கும் வகையில் சிலிண்டர் இக்கார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க இந்த கார் மிக மிக அதிக மைலேஜை தரும்... எவ்ளோ தெரிஞ்சா இப்பவே ஒரு கார வாங்க புறப்படுவீங்க!

மாருதி சுசுகி செலிரியோ எஸ்-சிஎன்ஜி காரில் விவிடி கே-சீரிஸ் 1.0 லிட்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகபட்சமாக 41.7 கிலோவாட் பவரை 5,300 ஆர்பிஎம்மிலும், 82.1 என்எம் டார்க்கையும் இது வெளியேற்றும். இதே கார் சிஎன்ஜி மட்டுமின்றி பெட்ரோலாலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க இந்த கார் மிக மிக அதிக மைலேஜை தரும்... எவ்ளோ தெரிஞ்சா இப்பவே ஒரு கார வாங்க புறப்படுவீங்க!

பெட்ரோல் இயங்கும்போது 48.0 கிலோவாட் பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. வழக்கமான செலிரியோவில் ட்யூவல் ஜெட் கே10 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 67 எச்பி மற்றும் 89 என்எம் டார்க்கை வெளியேற்றும். புதிய தலைமுறை செலிரியோ இந்தியாவில் ரூ. 4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க இந்த கார் மிக மிக அதிக மைலேஜை தரும்... எவ்ளோ தெரிஞ்சா இப்பவே ஒரு கார வாங்க புறப்படுவீங்க!

புதிய சிஎன்ஜி செலிரியோ காரில் இரட்டை இசியூ கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்டுன், இன்டலெஜன்ட் இன்ஜெக்சன் சிஸ்டமும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவையிரண்டும் சேர்ந்தே மாருதி சுசுகி செலிரியோவை மிக சிறப்பான மைலேஜ் தரும் காராகவும், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் காராகவும் மாற்றி இருக்கின்றது.

Most Read Articles

English summary
Maruti suzuki today announced launch of cng variant of celerio
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X