40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி? லி.,24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் 800 சிசி எஞ்ஜினை இனி எந்த காரிலும் வழங்காது என்கிற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் 800 சிசி மோட்டாரை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் நாற்பது ஆண்டு கால வரலாற்றை இந்த மோட்டார் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. முதன் முதலில் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் மாருதி 800 காரிலேயே இந்த மோட்டாரை அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகம் 1983 ஆம் ஆண்டில் அரங்கேறியது.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

தற்போது ஆல்டோ கார் மாடலில் இந்த மோட்டார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய ஓர் பழமையான மற்றும் புகழ்வாய்ந்த 800 சிசி மோட்டாரையே நிறுவனம் வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய மாசு உமிழ்வு விதியே 800 சிசி மோட்டாரை மாருதி வெளியேற்ற திட்டமிட்டிருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கின்றது.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதி காரணமாக கடந்த காலங்களில் அதன் சிறிய எஞ்ஜின்களில் கிடைத்துக் கொண்டிருந்த டீசல் மோட்டார்களை மாருதி சுஸுகி நிறுவனம் வெளியேற்றியது. ஆகையால், தற்போது இந்நிறுவனம் டீசல் மோட்டார்களுக்கு எதிரான நிறுவனமாக மாறியிருக்கின்றது. இந்த நிலையிலேயே 800 சிசி வெளியேற்றம் திட்டத்தினால் சிறிய எஞ்ஜின்களுக்கு எதிரான நிறுவனமாகவும் மாருதி மாறியிருக்கின்றது.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

வெளியேற்றம் செய்யப்பட இருக்கும் இந்த சிறிய மோட்டார் ஒரு லிட்டருக்கு 24.5 கிமீ வரை மைலேஜ் தரக் கூடியது. இருப்பினும், இந்த சிறிய எஞ்ஜின் கொண்ட கார்களை வாங்குபவர்கள் இந்தியாவில் குறைந்துக் காணப்படுகின்றனர். இதுவும் நிறுவனம் இம்மோட்டாரை வெளியேற்றுவதற்கான மற்றுமொரு காரணமாக உள்ளது. வாங்குபவர்கள் குறைந்துக் காணப்படுவதால் வரவிருக்கும் ஆர்டிஇ (ரியல் டிரைவிங் உமிழ்வு) விதிகளுக்கு ஏற்ப இம்மோட்டாரை அப்கிரேட் செய்வது பலனளிக்காது என நிறுவனம் நம்புகின்றது.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

இதன் அடிப்படையிலேயே அதிரடியாக அம்மோட்டாரை வெளியேற்றும் திட்டத்தை மாருதி சுஸுகி கையில் எடுத்திருக்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பையும் மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்புகளை அது வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த 800சிசி மோட்டாரின் உற்பத்தியை சிறிய டீசல் மோட்டார் வெளியேற்றத்தின்போதே மாருதி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

ஆனால், ஹார்டெக்ட் பிளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்ட ஆல்டோவில் அம்மோட்டாரை அறிமுகப்படுத்தி அதற்கு மறுவாழ்வை மாருதி அளித்தது. நிறுவனத்தின் இந்த நகர்வு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தது. பட்ஜெட் வாகன பிரியர்களைத் தொடர்ச்சியாக தன் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த நகர்வை அது மேற்கொண்டது. தற்போது நடைமுறையில் உள்ள பிஎஸ்6 மாசு உமிழ்வு விதியில் கணிசமாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்துடன், கஃபே 2 (CAFE II) விதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

இவை தற்போது உள்ள மாசு உமிழ்வு விதிகளை பன்மடங்கு கடுமையாக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனையே 2023 ஏப்ரலில் இருந்து நடைமுறைப்படுத்த இருக்கின்றது இந்திய அரசு. இந்த புதிய விதி விரைவில் அறிமுகமாக இருப்பதை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில இக்கட்டான முடிவுகளை எடுக்கத் தொடங்கியிருக்கின்றன.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

அந்தவகையில், சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து டீசல் எஞ்ஜின் கொண்ட கார் மாடல்களையும் விற்பனையில் இருந்து அகற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஹோண்டாகுறித்து வெளியாகிய இந்த தகவல் அனைத்து இந்தியர்களையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

இந்த அதிர்ச்சியின் அதிர்வுகள் ஓய்வதற்கு முன்னரே தற்போது மற்றொரு அதிர்ச்சியாக மாருதியின் 800 சிசி மோட்டார் வெளியேற்றம்குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நிறுவனத்தின் வேகன்ஆர், ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆல்டோவின் விற்பனை பலமடங்கு குறைந்துக் காணப்படுகின்றது.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

மாருதி சுஸுகி நிறுவனம் இந்த 800 சிசி மோட்டாரை முதன் முதலில் 39 எச்பி பவரையும், 59 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனிலேயே உருவாக்கியது. இந்த நிலையிலேயே 2000மாவது ஆண்டில் இந்த மோட்டார் அப்கிரேட் செய்யப்பட்டது. அப்கிரேடைத் தொடர்ந்தே இதே 800 சிசி மோட்டார் அதிகபட்சமாக 48 எச்பி பவரையும், 69 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டதாக மாறியது.

40 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்டுகிறதா மாருதி?.. லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் மோட்டாரை வெளியேற்ற திட்டம்!

இதைத்தொடர்ந்து, ஃப்யூவல் இன்ஜெக்சன் மற்றும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் நான்கு வால்வுகள் என பல்வேறு மாற்றங்கள் இந்த மோட்டாரில் செய்யப்பட்டன. இவ்வாறு பன்மடங்கு மாற்றங்களுடன் சந்தையில் சர்வைவ் செய்துக் கொண்டிருக்கும் 800 சிசி மோட்டாரே விரைவில் நம்மை விட்டு விடைபெற இருக்கின்றது. இதனால், ஆல்டோ போன்ற சிறிய உருவம் கொண்ட கார்களின் விற்பனைப் பெருமளவில் பாதிக்கப்படலாம் என யூகிக்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Maruti suzuki will axe 800 cc motor by the end of this financial year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X