க்ரெட்டா, ஹாரியரை எல்லாம் காலி செய்ய மாருதியுடன் கை கோர்த்த டொயோட்டா... ஆகஸ்டில் வருகிறது புதிய எஸ்யூவி...

மாருதி நிறுவனத்துடன் இணைந்து டொயோட்டா நிறுவனம் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை வடிவமைத்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த கார் தயாரிப்பு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கெட்டில் ஏற்கனவே உள்ள க்ரெட்டா, ஹாரியர் போன்ற கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணலாம் வாருங்கள்.

க்ரெட்டா , ஹாரியரை எல்லாம் காலி செய்ய மாருதியுடன் கை கோர்த்த டொயோட்டா . . . ஆகஸ்டில் வருகிறது புதிய எஸ்யூவி . . .

மாருதி நிறுவனமும் டொயோட்டா நிறுவனமும் இணைந்து கார்களை வடிவமைக்கும் பணிகளை கடந்த சில ஆண்டுகளானே செய்து வருகின்றனர். இந்நிறுவனம் இணைந்து வடிவமைத்த பலேனோ கார் மாருதியில் பலேனோ என்ற பெயரிலும் அதே கார் சிறிய மாற்றங்களுடன் கிளான்ஸா என்ற பெயரில் டொயோட்டா நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.

க்ரெட்டா , ஹாரியரை எல்லாம் காலி செய்ய மாருதியுடன் கை கோர்த்த டொயோட்டா . . . ஆகஸ்டில் வருகிறது புதிய எஸ்யூவி . . .

அதே போல பிரெஸ்ஸா காரை இரு நிறுவனங்களும் சேர்ந்து வடிவமைத்துள்ளது. இந்த கார் மாருதியில் பிரெஸ்ஸா என்ற பெயரில் சக்கை போட்டு போட்டு வருகிறது. இதுவே டொயோட்டா நிறுவனத்தில் அர்பன் க்ரூஸியர் என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

க்ரெட்டா , ஹாரியரை எல்லாம் காலி செய்ய மாருதியுடன் கை கோர்த்த டொயோட்டா . . . ஆகஸ்டில் வருகிறது புதிய எஸ்யூவி . . .

இந்நிலையில் மீண்டும் மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனம் இணைந்து அடத்தாக ஒரு எஸ்யூவி காரை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கார் மிட்-சைஸ் எஸ்யூவியாக தயாரிக்கப்படவிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த கார் தயாராகும் என தெரிகிறது.

க்ரெட்டா , ஹாரியரை எல்லாம் காலி செய்ய மாருதியுடன் கை கோர்த்த டொயோட்டா . . . ஆகஸ்டில் வருகிறது புதிய எஸ்யூவி . . .

இந்த காரை டொயோட்டா நிறுவனம் கர்நாடகா மாநிலம் பிடரியில் உள்ள தனது ஆலையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. டெயோட்டோ நிறுவனம் ஏற்கனவே தனது ஹெரைடர் காரை ஜூலை மாதம் அறிமுகப்படுத்துகிறது. இது போக இந்த கார் தனியாக தயாராகிறது.

க்ரெட்டா , ஹாரியரை எல்லாம் காலி செய்ய மாருதியுடன் கை கோர்த்த டொயோட்டா . . . ஆகஸ்டில் வருகிறது புதிய எஸ்யூவி . . .

புதிதாக தயாராகும் கார், ஏற்கனவே மார்கெட்டில் வறி்பனையாகிவரும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டாஸ், டாடா ஹாரியர் ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக வருகிறது. இந்தாலும் இந்த புதிய காரில் போட்டிக்கு உள்ள கார்களில் இல்லாத அம்சமாக சுஸூகி நிறுவனம் உருவாக்கிய மைல்டு ஹைபிரிடு, மற்றும் டொயோட்டா நிறுவனம் உருவாக்கிய ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பம் கொண்டா காராக இந்த கார் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரெட்டா , ஹாரியரை எல்லாம் காலி செய்ய மாருதியுடன் கை கோர்த்த டொயோட்டா . . . ஆகஸ்டில் வருகிறது புதிய எஸ்யூவி . . .

கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கார் தயாரிப்பு பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறது. இந்நிறுவனங்கள் ஏற்கனவே கிளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸியருக்கான பணிகளை முடித்த நிலையில் தற்போது அந்த கார்கள் தயாரிப்பில் இருக்கிறது. அடுத்தாக மிட்-சைஸ் எஸ்யூவி கார் மீது தனது டார்கெட்டை திருப்பியுள்ளது.

க்ரெட்டா , ஹாரியரை எல்லாம் காலி செய்ய மாருதியுடன் கை கோர்த்த டொயோட்டா . . . ஆகஸ்டில் வருகிறது புதிய எஸ்யூவி . . .

இந்தியாவை பொறுத்தவரை கார் தயாரிப்பாளர்களுக்கு மின் சைஸ் எஸ்யூவியில் தான் பயங்கரமான டிமாண்ட் இருக்கிறது என்பதால் பல நிறுவனங்கள் அந்த செக்மெண்டிலேயே புதுப்புது கார்களை இறக்குகின்றனர். மற்ற செக்மெண்டை விட இந்த செக்மெண்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

க்ரெட்டா , ஹாரியரை எல்லாம் காலி செய்ய மாருதியுடன் கை கோர்த்த டொயோட்டா . . . ஆகஸ்டில் வருகிறது புதிய எஸ்யூவி . . .

இதனால் இந்தியாவில் குறைந்த விலை காருக்கான மார்கெட்டில் பெரிய அடி விழுந்துள்ளது. அதிகமாக குறைந்த விலை கார்கள் வெளியாகவில்லை. குறைந்தவிலை கார்களை வாங்கும் வாடிக்கையாள்களும் தற்போது காம்பேக்ட்ஸ் எஸ்யூவிக்கு தங்கள் கவனத்தை மாற்ற துவங்கிவிட்டனர்.

க்ரெட்டா , ஹாரியரை எல்லாம் காலி செய்ய மாருதியுடன் கை கோர்த்த டொயோட்டா . . . ஆகஸ்டில் வருகிறது புதிய எஸ்யூவி . . .

இதன் காரணமாக இந்தியாவில் டாடா பஞ்ச், மாருதி பிரெஸ்ஸா போன்ற கார்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அதனால் எதிர்காலத்தில் குறைந்த விலை கார்கள் என்றாலே காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்தான் என் நிலை கூட வரலாம். குறைந்தவிலை ஹேட்ச்பேக் கார்களுக்கு மக்களிடம் பெரிய அளவில் மவுசு இல்லை.

Most Read Articles
English summary
Maruti toyota Jointly plans for new suv with hybrid power
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X