தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்! க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதியுடன் மாருதி ஓர் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்... க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டணியின் அடிப்படையில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. டொயோட்டா, அதற்காக உருவாக்கி வரும் அப்புதுமுக காரை டி22 (Toyota D22) என்கிற குறி பெயரிலும், மாருதி அதற்காக தயாரித்து வரும் காரை ஒய்எஃப்ஜி (Maruti Suzuki YFG) என்கிற குறி பெயரிலும் அழைத்து வருகின்றது.

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்... க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, டொயோட்டாவின் டி22 ஹைரைடர் என்கிற பெயரில் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை டொயோட்டா வெளியடவில்லை. அதேநேரத்தில் கூடிய விரைவில் அதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்... க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

இதேபோல், ஓர் புதிய பெயரிலேயே மாருதி சுஸுகியின் ஒய்ட்எஃப்ஜி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவலும் வெகுவிரைவில் வெளியாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் இரு கார்களும் அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்... க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

குறிப்பாக, செல்ஃப் சார்ஜிங் வசதிக் கொண்ட ஹைபிரிட் தொழில்நுட்பம் இக்கார்களில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிக மைலேஜை விரும்பும் வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்... க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

அண்மைக் காலங்களாக இந்தியாவில் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களின் அறிமுகம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மாருதி-டொயோட்டா கூட்டணியின் அடிப்படையில் உருவாகிக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத புதுமுக கார்கள் சூப்பரான ஹைபிரிட் அம்சங்களுடன் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்... க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

சமீபத்திய தகவல்கள் சோதனைக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இரு கார் மாடல்களும் கர்நாடகாவில் உள்ள டொயோட்டாவின் பிடாடி ஆலையில் வைத்தே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. வரும் பண்டிகை தினம் ஏதேனும் ஒன்றில் அது அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்... க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

அதாவது, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம் கூறப்படுகின்றது. அதேவேலையில், மாருதி தயாரிக்கும் புதிய ஒய்எஃப்ஜி காரானது அதன் புகழ்பெற்ற எஸ்-கிராஸுக்கு மாற்றாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்... க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் புதிய எஸ்யூவி கார் சந்தையை வந்தடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இரு வாகனங்களும் சந்தையில் பெருத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்... க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

தற்போது மிட்-சைஸ் எஸ்யூவி கார் பிரிவில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி அஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவை பிரபலமான வாகன மாடல்களாக காட்சியளிக்கின்றன. இவை அனைத்திற்கும் மிக கடுமையான போட்டியையே மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் புதுமுக கார்கள் ஏற்படுத்த இருக்கின்றன.

தானே சார்ஜ் செய்யும் ஹைபிரிட் வசதியுடன் வரும் மாருதி சுஸுகி கார்... க்ரெட்டாவிற்கு வேற லெவல் ஆப்பு காத்திருக்கு!

இந்த கார்கள் இன்னும் என்ன மாதிரியான அம்சங்களில் மற்றும் எவ்வளவு விலையில் விற்பனைக்கு வரும் என்கிற தகவல் வெளியாகவில்லை. விரைவில் அறிமுகத்தின்போது வாகனங்கள்குறித்த அனைத்து முக்கிய தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: gaadiwaadi

Most Read Articles
English summary
Maruti yfg to get segment first strong hybrid system with self charging feature
Story first published: Friday, May 27, 2022, 21:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X