அறிமுகமாவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்! அப்பவே ஆயிரத்த தாண்டிடுச்சா!

இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்னரே ஆயிரக் கணக்கில் சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங் குவிந்ததாக தகவல்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

புதிய வாகனங்களின் விற்பனை இந்தியாவில் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன. பட்ஜெட் விலையில் கார்களை விற்பனைச் செய்து வரும் முன்னணி நிறுவனங்கள்கூட பெரும் விற்பனை வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் நிலையே தற்போதைக்கு இங்கு நிலவுகின்றது. அதேவேலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

அந்தவகையில், இந்தியர்கள் மத்தியில் சொகுசு கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதிலும், சொகுசு வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நம் நாட்டவர்கள் மத்தியில் மிக அமோகமான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தரமான சம்பவமே தற்போது நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. இந்தியர்கள் இன்னும் விற்பனைக்கே வராத ஓர் கார் மாடலுக்கு பெரும் ஆதரவை வழங்கியிருக்கின்றனர். பென்ஸ் நிறுவனம் வெகு விரைவில் அதன் ஐந்தாம் தலைமுறை சி-கிளாஸ் (Fifth-Generation C-Class) சொகுசு காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

மிக சமீபத்திலேயே (மே 10 அன்று) இக்காரை இந்தியாவில் பென்ஸ் நிறுவனம் வெளியீடு செய்தது. ஆனால், இதற்கு முன்னதாகவே காருக்கான புக்கிங் பணிகளை பென்ஸ் அது தொடங்கிவிட்டது. இப்பணிகள் தொடங்கிய விரைவிலேயே இந்தியர்கள் போட்டி போட்டுக் காரை புக் செய்திருக்கின்றனர். எனவே, மே10 அறிமுகத்திற்கு முன்னரே சி-கிளாஸுக்கு ஆயிரக் கணக்கில் புக்கிங் குவிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

இதனை பென்ஸ் நிறுவனமும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகுமே தற்போது பெருத்த ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றது. பென்ஸ் நிறுவனம் இக்காரை மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. சி 200 (C 200), சி 220டி (C 220d) மற்றும் சி 300டி (C 300d) ஆகிய தேர்வுகளிலேயே அக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

ஆரம்ப நிலை வேரியண்டான சி200 ரூ. 55 லட்சம் என்ற குறைவான விலையிலும், சி 220டி 56 லட்ச ரூபாய்க்கும், சி 300டி 61 லட்ச ரூபாய் என்கிற அதிகபட்ச விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். விலையை போலவே எஞ்ஜின் மற்றும் சில விஷயங்களில் அனைத்து வேரியண்டுகளும் வேறுபட்டுக் காட்சியளிக்கின்றன.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

அந்தவகையில், சி200 வேரியண்டில் 201 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ-பெட்ரோல் எஞ்ஜினும், சி 220டி வேரியண்டில் 197 பிஎச்பி மற்றும் 440 என்எம் டார்க்கையும் வழங்கக் கூடிய 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ-டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

இவையிரண்டைக் காட்டிலும் அதிக பவர்புல்லான மோட்டாரைக் கொண்டதாக சி 300டி காட்சியளிக்கின்றது. இந்த வேரியண்டில் 1,993 சிசி திறனை வழங்கக் கூடிய 4 சிலிண்டர், டர்போசார்ஜட் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 261 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

இந்த திறன் பென்ஸ் சி கிளாஸ் சி 300டி வேரியண்டை ஸ்போர்ட்ஸ் காரை போல் தென்பட செய்துள்ளது. இதற்கேற்ப அதிக ஸ்போர்ட்டி அம்சங்களும் இத்தேர்வில் வழங்கப்பட்டிருக்கும். அதேநேரத்தில் மைலேஜையும் இது மிக சிறப்பாக வழங்கும். லிட்டருக்கு 20.37 கிமீ வரை அது மைலேஜ் தரும் என பென்ஸ் தெரிவித்துள்ளது.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

இதேபோல் சி 200 வேரியண்டானது 16.9 கிமீ மைலேஜையும், சி 220டி 23 கிமீ மைலேஜையும் வழங்கும். இந்த அதிகபட்ச ரேஞ்ஜை இக்கார் வழங்குவதற்கு 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் உறுதுணையாக இருக்கின்றது. இந்த சிஸ்டம் 20 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க்கை வழங்கும் திறன் கொண்டது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும்.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

மேலும், இக்காரில் சொகுசு வசதிகள் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் மிக தாராளமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், கார் முழுக்க எல்இடி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இத்துடன், 12.3 அங்குல டிரைவருக்கான திரை மற்றும் 11.9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் - ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேன் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

மேலும், முன் பக்கத்தில் மெமரி மற்றும் பவர் வசதிக் கொண்ட இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜர், 15 ஸ்பீக்கர்கள், 710 வாட் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 64 வகையான வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட்டுகள், 2 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், சூரிய ஒளியால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்கக் கூடிய கண்ணாடிகள், கார்-டூ-எக்ஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம் மற்றும் மெர்சிடிஸ் மீ கன்னெக்ட் இணைப்பு வசதி உள்ளிட்ட அதி-நவீன அம்சங்களும் சி-கிளாஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகம் ஆவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்... இப்பவே ஆயிரத்த தாண்டியிருச்சா!..

இதுமாதிரியான எக்கசக்க அம்சங்களுடன் சற்று குறைவான விலையில் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் விளைவாகவே 1,000-க்கும் அதிகமான யூனிட்டுகளுக்கான புக்கிங்கை சி-கிளாஸ் குவித்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Mercedes benz c class received over 1000 booking before launch
Story first published: Thursday, May 19, 2022, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X