இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்படும் அதன் முதல் எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கும் மின் வாகனங்களுக்கான தேவையை உணர்ந்து முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்குவதில் அதி தீவிரமாக களமிறங்கியிருக்கின்றனர். இந்த விஷயத்தில் இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் காட்டி வரும் தீவிரத் தன்மை சற்று கூடுதலாகவே தென்படுகின்றது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

ஏற்கனவே இந்நிறுவனம் டிகோர் இவி, நெக்ஸான் இவி (பிரைம் மற்றும் மேக்ஸ் என இரு மாடல்களில் கிடைக்கும்) ஆகிய கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் அடுத்தடுத்ததாக டியாகோ இவி, ஹாரியர் இவி மற்றும் பஞ்ச் இவி உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

இதுதவிர, இன்னும் சில புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதுமாதிரியான நடவடிக்கைகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு வரும் காரணத்தினாலேயே இந்நிறுவனம் இப்போதே இந்திய மின் வாகன சந்தையை ஆள தொடங்கியிருக்கின்றது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

இந்த நிலையிலேயே இந்தியாவின் மின் வாகன சந்தையை ஆள வேண்டும் என்ற நோக்கில் பிற வாகன உற்பத்தியாளர்களும் களமிறங்கியிருக்கின்றனர். அந்தவகையில், இந்தியாவின் சொகுசு எலெக்ட்ரிக் கார் பிரிவை கைப்பற்றும் விதமாக பென்ஸ் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கியிருக்கின்றது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

இந்த யுக்தியை அடுத்து தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான புக்கிங்கையே தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியிருக்கின்றது. ஏஎம்ஜி இக்யூஎஸ் 580 4மேட்டிக் (Mercedes-AMG EQS 53 4matic+) இந்த எலெக்ட்ரிக் காரின் உற்பத்தியே உள்ளூர் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகளே தற்போது தொடங்கியிருக்கின்றது. இது ஓர் செடான் ரக எலெக்ட்ரக் காராகும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

இக்கார் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த காரின் உற்பத்தி பணிகளை பென்ஸ் நிறுவனம் உள்ளூர் மயமாக்கியிருப்பதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் சொகுசு கார் என்ற புகழுக்குரிய வாகனமாக இக்யூஎஸ் 580 4மேட்டிக் மாறியிருக்கின்றது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

இந்த மகுடம் இக்காரின் பக்கம் இன்னும் சில வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புனேவில் உள்ள சக்கன் ஆலையிலேயே இக்காரின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சொகுசு காரின் விலை ரூ. 2.50 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

இந்த அதிகபட்ச விலைக்கு காரில் வழங்கப்பட்டிருக்கும் ஏராளமான சொகுசு வசதிகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.இக்காரை மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதும் அதன் அதிக விலைக்கு காரணமாக இருக்கின்றது. லக்சூரி அம்சங்கள் மட்டுமில்லைங்க, அதிக நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்தும் மிக தாரளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், கவர்ச்சியான தோற்றத்திற்கும் குறைச்சலின்றி இக்கார் காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

இந்த சொகுசு கார் அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதும் கூட. இதற்காக 107.8 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 586 கிமீட்டர் ரேஞ்ஜ் தரும். இந்த பேட்டரி பேக்குடன் சேர்த்து 765 பிஎஸ் மற்றும் 1020 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரையே இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் காரில் மெர்சிடிஸ் பென்ஸ் பயன்படுத்தியிருக்கின்றது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் லக்சூரி மின்சார காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடக்கம்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை வழங்கக் கூடியது. மேலும், வெறும் 3.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இம்மோட்டார் வழங்கும். இதுமாதிரியான அல்ட்ரா சூப்பர் அம்சங்களைக் கொண்டிருக்கும் சொகுசு எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகளே தற்போது நாட்டில் தொடங்கியிருக்கின்றது. இக்காரில்,லெவல் 2 அடாஸ் அம்சம், முகத்தைக் கண்டறிந்து செயல்படும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் பல இடம் பெற இருக்கின்றது.

Most Read Articles
English summary
Mercedes officially starts booking for amg eqs 53 4matic plus
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X