3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த எம்ஜி நிறுவனம்! பாக்குறதுக்கு குட்டியா செம்ம அழகா இருக்கு!

எம்ஜி நிறுவனம் 3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த எம்ஜி நிறுவனம்! பாக்குறதுக்கு குட்டியா செம்ம அழகா இருக்கு!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் எம்ஜி மோட்டார் நிறுவனமும் ஒன்று. இங்கிலாந்து நாட்டை தலைமையமாகக் கொண்டு இயங்கும் சீன நிறுவனம் இதுவாகும். இந்நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் ஹெக்டர், ஹெக்டர் பிளஸ், அஸ்டர், இசட்எஸ் இவி (இது ஓர் எலெக்ட்ரிக் காராகும்) மற்றும் குளோஸ்டர் ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த எம்ஜி நிறுவனம்! பாக்குறதுக்கு குட்டியா செம்ம அழகா இருக்கு!

இந்த கார் மாடல்களுடன் வெகு விரைவில் இன்னும் சில புதுமுக வாகனங்களை இந்நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதேபோல் இந்நிறுவனம் செயல்பட்டு வரும் பிற உலக நாடுகளிலும் புதுமுக வாகனங்களை வெகு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் உலக சந்தைக்கான எலெக்ட்ரிக் காரையே எம்ஜி தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த எம்ஜி நிறுவனம்! பாக்குறதுக்கு குட்டியா செம்ம அழகா இருக்கு!

அதேவேலையில், நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான வாகன மாடல்கள் எஸ்ஏஐசி-உல்லிங்-ஜிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும். இந்த நிலையிலேயே சீன வாகன உற்பத்தியாளர் மினி இவி கேப்ரியோலட் எனும் எலெக்ட்ரிக் காரை உலக சந்தைக்காக தயார் செய்திருக்கின்றார். 2021 ஷாங்காய் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலின் அடிப்படையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த எம்ஜி நிறுவனம்! பாக்குறதுக்கு குட்டியா செம்ம அழகா இருக்கு!

மினி இவி கேப்ரியோலட் கார் மிகவும் ஆடம்பர வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இருவர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இருவர்களுக்காக மட்டுமே அதிக சிறப்பு வசதிகளை வழங்கும் வகையில் மினி இவி கேப்ரியோலட் கார் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. கன்வர்டபிள் வசதியுடன் இந்த காரை நிறுவனம் உருவாக்கியிருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, கூரை இருத்தல் அல்லது கூரை இல்லாதது என இரு நிலைகளில் இக்காரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த எம்ஜி நிறுவனம்! பாக்குறதுக்கு குட்டியா செம்ம அழகா இருக்கு!

மிக சிறிய உருவத்திலேயே இந்த காரை எம்ஜி உருவாக்கியிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானல் இந்த எலெக்ட்ரிக் கார் 3,059 மிமீ நீளம், 1,521 மிமீ அகலம், 1,614 மிமீ உயரம் மற்றும் 2,010 மிமீ வீல்பேஸ் ஆகிய அளவுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எம்ஜி ஏர் இவி மைக்ரோ சைஸ் எலெக்ட்ரிக் காரை தழுவியே இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த எம்ஜி நிறுவனம்! பாக்குறதுக்கு குட்டியா செம்ம அழகா இருக்கு!

இந்த காரைதான் (எம்ஜி ஏர் இவி மைக்ரோ) சீன நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த காலங்களில் ஏர் இவி கார் நாட்டில் சோதனையோட்டம் செய்யப்பட்டது. 26 kWh பேட்டரி பேக், 40 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்சார மோட்டார் ஆகியவற்றுடன் இந்த எலெக்ட்ரிக் கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த எம்ஜி நிறுவனம்! பாக்குறதுக்கு குட்டியா செம்ம அழகா இருக்கு!

இந்த நிலையிலேயே உலக சந்தைக்கான மினி எலெக்ட்ரிக் காராக மினி இவி கேப்ரியோலட் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. லக்சூரி வசதிக் கொண்ட காரில் கவர்ச்சிகரமான அலங்கார பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சி வடிவ எல்இடி டிஆர்எல்கள், எல்இடி லைட்டுகள், ஸ்டைலான அலாய் வீல்கள், எக்ஸ் வடிவ எல்இடி டெயில் லைட்டுகள், வண்ண மயமான இருக்கைகள், டேஷ்போர்டில் பன்முக சிறப்பு கருவிகள் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த எம்ஜி நிறுவனம்! பாக்குறதுக்கு குட்டியா செம்ம அழகா இருக்கு!

இந்த காரை வரும் 21 செப்டம்பரில் விற்பனைக்கு வழங்க முடிவு செய்திருக்கின்றது, தயாரிப்பு நிறுவனமான உல்லிங். இதனை ஹாங்குவாங் மினி இவி கேப்ரியோலட் எனும் பெயரில் அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. முதல் கட்டமாக சீன சந்தையில் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். லிங் கிளப் செயலி வாயிலாக விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

3மீ நீளம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்த எம்ஜி நிறுவனம்! பாக்குறதுக்கு குட்டியா செம்ம அழகா இருக்கு!

அதேவேலையில், இப்போதைக்கு இந்த கார் இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த காரை எதிர்காலத்தில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தாலும் ஆச்சரியமடைவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில், தற்போது இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கு பல மடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே ஏர் இவி மினி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Mg debuts mini electric car with convertible feature
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X