டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஆப்பு வைக்க ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் வருகிறது எம்ஜி குளோஸ்டர்.. அறிமுக தேதி வெளியீடு!

எம்ஜி குளோஸ்டர் காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஆப்பு வைக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் வருகிறது எம்ஜி குளோஸ்டர்.. அறிமுக தேதி வெளியீடு!

எம்ஜி நிறுவனம் அதன் ஃபேஸ்லிஃப்ட் (புதுப்பிக்கப்பட்ட) குளோஸ்டர் காரை இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அறிமுகம் எப்போது அரங்கேற இருக்கின்றது என்பது பற்றிய விபரமே தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்டு 31 (நாளை மறுநாள்) ஆம் தேதி அன்றே இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

புதுப்பித்தலின் அடிப்படைியில் பன்முக சிறப்பு வசதிகள் இக்காரில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புதுப்பிக்கப்பட்ட குளோஸ்டர் காரில் அடாஸ் மற்றும் 4X4 டிரைவிங் தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் தக்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே, இக்காரின் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான தொழில்நுட்பங்கள் ஆகும். அதேவேலையில், இவற்றை சில அப்டேட்டுகளுடன் நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஆப்பு வைக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் வருகிறது எம்ஜி குளோஸ்டர்.. அறிமுக தேதி வெளியீடு!

எம்ஜி நிறுவனம் இந்த காரை கடந்த காலங்களில் தீவிர சோதனையோட்டத்திற்கு உட்படுத்தி வந்தது குறிப்பிடத்தகுந்தது. அப்போது, எடுக்கப்பட்ட படங்களின் வாயிலாகவும் புதுப்பிக்கப்பட்ட குளோஸ்டர் கார் பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, பெரியளவில் மாற்றம் இன்றி அவ்வாகனத்தின் வெளிப்புறம் இருந்ததை அந்த படங்கள் உறுதிப்படுத்தின. ஆனால், முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் அது ஸ்பை செய்யப்பட்டதால் போதுமான கூடுதல் விபரங்களை எங்களால் உறுதியாக கூற முடியவில்லை.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஆப்பு வைக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் வருகிறது எம்ஜி குளோஸ்டர்.. அறிமுக தேதி வெளியீடு!

இருப்பினும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வாகனங்களால் 'பி' மற்றும் 'சி' பில்லர்கள் கருப்பு நிறத்தால் அலங்கரிப்பட்டிருப்பதும், சற்று வித்தியாசமான தோற்றம் கொண்ட அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்த அலாய் வீல்கள் கூடுதல் அதிக அடர்த்தியாகவும், தனித்துவமான டிசனைக் கொண்டதாகவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தகுந்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஆப்பு வைக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் வருகிறது எம்ஜி குளோஸ்டர்.. அறிமுக தேதி வெளியீடு!

இதேபோன்று கணிசமான மாற்றங்கள் காரின் உட்பக்கத்திலும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகையால், சற்று அதிக விலையில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் கார் ரூ. 31.45 லட்சம் தொடங்கி ரூ. 40 லட்சம் வரையிலான விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இவற்றை சற்று அதிக விலையிலேயே ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் குளோஸ்டர் எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஆப்பு வைக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் வருகிறது எம்ஜி குளோஸ்டர்.. அறிமுக தேதி வெளியீடு!

எம்ஜி குளோஸ்டர், 3 வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்குக் கிடைக்கும் முழு-அளவு எஸ்யூவி ரக காராகும். 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. தொழில்நுட்பம், சொகுசு ஆகிய இரண்டிலும் இந்த கார் மிக மிக சூப்பரான தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றன. எனவேதான் முழு அளவு எஸ்யூவி கார் பிரிவில் இந்த காருக்கு கணிசமாக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஆப்பு வைக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் வருகிறது எம்ஜி குளோஸ்டர்.. அறிமுக தேதி வெளியீடு!

தற்போதைய நிலவரப்படி இந்த காரில் இருவிதமான மோட்டார் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இரண்டுமே டீசல் மோட்டார்கள் ஆகும். 2.0 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 2.0 லிலட்டர் ட்வின் டர்போ ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே குளோஸ்டர் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில், டர்போ மோட்டார் 161 எச்பி மற்றும் 375 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஆப்பு வைக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் வருகிறது எம்ஜி குளோஸ்டர்.. அறிமுக தேதி வெளியீடு!

ட்வின் டர்போ மோட்டாரானது 215 எச்பி பவரையும், 480 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இவ்விரு மோட்டார் தேர்வுகளுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகின்றது. இத்தகைய சூப்பரான அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் கார் மாடலையே நிறுவனம் தற்போது புதுப்பித்துள்ளது. விரைவில் விற்பனைக்கு அறிமுகமும் செய்ய இருக்கின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஆப்பு வைக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் வருகிறது எம்ஜி குளோஸ்டர்.. அறிமுக தேதி வெளியீடு!

இந்த காரைத் தொடர்ந்து நிறுவனம் விரைவில் அடுத்த தலைமுறை ஹெக்டர் காரையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதுபோன்று இன்னும் சில மாடல்களையும் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரிசைப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Mg gloster suv officially teased ahead of launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X