பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் டீசல் வேரியண்ட் ரூ. 34,90,000 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற வேலையில், இதைவிட குறைவான விலையில் அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில் வந்திருக்கு!

எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) அதன் அட்வான்ஸ்ட் குளோஸ்டர் (Advanced Gloster) கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில், விநாயகர் சதுர்த்தியான இன்றைய தினத்தில் அட்வான்ஸ்ட் குளோஸ்டர் காரை எம்ஜி நிறுவனம் நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதுவே, இந்தியாவில் தன்னாட்சி தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்கு வந்த எஸ்யூவி ரக காராகும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில் வந்திருக்கு!

இந்த காரில் தற்போதும் லெவல் 1 தன்னாட்சி தொழில்நுட்ப வசதியே வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், இன்னும் பற்பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட வாகனமாகவே 2022 அட்வான்ஸ்ட் குளோஸ்டர் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்டைல், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கும் சற்றும் குறைச்சல் இல்லாத வாகனமாகவும் அது உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில் வந்திருக்கு!

இந்த வாகனத்திற்கு அறிமுக விலையாக ரூ. 31.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த காரை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதுதவிர, ஆறு மற்றும் ஏழு என்கிற இருக்கை தேர்விலும், 4X2 மற்றும் 4X4 ஆகிய தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில் வந்திருக்கு!

ட்ரிம்களின் விபரம்:

சூப்பர் (Super), ஷார்ப் (Sharp), சேவி (Savvy) ஆகிய மூன்று ட்ரிம்களிலேயே எம்ஜி குளோஸ்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதில், 6 சீட்டர் ஆப்ஷனானது வெறும் சேவி ட்ரிம்மில் மட்டுமே கிடைக்கும். அதேவேலையில், 7 இருக்கைகள் கொண்ட தேர்வை சூப்பர், ஷார்ப் மற்றும் சேவி ஆகிய மூன்று ட்ரிம்களிலும் வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். அதிக சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே எம்ஜி நிறுவனம் 6 சீட்டர் தேர்வை சேவி ட்ரிம்மில் மட்டும் வழங்குகின்றது. இதேபோல் 4X4 டிரைவிங் அம்சத்தையும் சேவி ட்ரிம்மில் மட்டுமே எம்ஜி வழங்கியிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில் வந்திருக்கு!

விலை விபரம்:

  • 4X2 டீசல் மோட்டார், 7 இருக்கைகள் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும் சூப்பர் ட்ரிம்மிற்கு ரூ. 31,99,800 -ம்,
  • 4X2 டீசல் மோட்டார், 7 இருக்கைகள் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும் ஷார்ப் ட்ரிம்மிற்கு ரூ. 36,87,800 -ம்,
  • 4X2 டீசல் மோட்டார், 7 இருக்கைகள் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும் சேவி ட்ரிம்மிற்கு ரூ. 38,44,800 -ம்
  • 4X2 டீசல் மோட்டார், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகளில் கிடைக்கும் குளோஸ்டர் சேவி ட்ரிம்மிற்கு ரூ. 38,44,800 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இதேபோல், 4X4 டீசல் மோட்டார், 6-7 இருக்கைகள் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும் சேவி ட்ரிம்மிற்கும் ரூ. 40,77,800 என்கிற ஒரே விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில் வந்திருக்கு!

    எஞ்ஜின் விபரம்:

    2.0 லிட்டர், ட்வின் டர்போ டீசல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 158.5 கிலோவாட் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் உடனேயே 4வீல் டிரைவ் மற்றும் 2வீல் டிரைவ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்ஸ் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில் வந்திருக்கு!

    புதிய அட்வான்ஸ்ட் குளோஸ்டர் காரில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள்:

    எம்ஜி குளோஸ்டர் காரில் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், கூடுதலாக டூர் ஓபனிங் வார்னிங், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் மற்றும் லேன் சேஞ்ஜ் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, 30 அட்வான்ஸ்ட் பாதுகாப்பு அம்சங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்மூத்தான டிரைவிங் அனுபவத்திற்காக குளோஸ்டரில் வழங்கப்பட்டுள்ளன.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில் வந்திருக்கு!

    மேலும், பெஸ்ட்-இன்-செக்மெண்ட் எனும் கூறுமளவிற்கு 31.2 செமீ அளவுள்ள தொடுதிரை மற்றும் உயர் குவாலிட்டியான ஆடியோ சிஸ்டம் 12 ஸ்பீக்கர்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பில் கார் ப்ளே வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கூடுதல் செயலிகளாக ஷார்ட் பீடியா நியூஸ் ஆப் மற்றும் கானா சாங் செயலியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை குரல் வாயிலாக தேடும் ஆப்ஷனும் வழங்கப்பட்டிருக்கின்றது.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில் வந்திருக்கு!

    இவற்றுடன் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளாக 75க்கும் மேற்பட்ட கார் இணைப்பு அம்சமும் எம்ஜி குளோஸ்டர் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், ஆல் டெர்ரயின் சிஸ்டம் 7 விதமான மோட்களுடன், ட்யூவல் பனோரமிக் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய பவர் டிரைவர் இருக்கை, டிரைவர் இருக்கையில் மசாஜ் அம்சம் மற்றும் வென்டிலேஷன் வசதி உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் குளோஸ்டரில் வழங்கப்பட்டுள்ளன.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ்ட் குளோஸ்டர் கார் அறிமுகம்... டொயோட்டா ஃபார்ச்சூனரவிட குறைவான விலையில் வந்திருக்கு!

    அலங்கார அம்சங்கள்:

    இந்த கார் சாலையில் பயணிக்கும்போது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு விஷயங்களை எம்ஜி நிறுவனம் சேர்த்துள்ளது. அந்தவகையில், நிறுவனம் சேர்த்திருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக அலாய் வீல்கள் உள்ளன. நிறுவனம், அதன் 4வீல் டிரைவ் வேரியண்டுகளில் விண்ட்மில் டர்பைன் தீமிலான வீல்களைப் பயன்படுத்தியிருக்கின்றது. இது புதிய குளோஸ்டர் காருக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இத்துடன், கூடுதலாக மெட்டல் பிளாக், மெட்டல் ஆஷ் மற்றும் வார்ம் ஒயிட் ஆகிய நிற தேர்வுகளும் குளோஸ்டரில் வழங்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Mg motor launched the advanced gloster in india at starting rs 31 99 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X