ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி... எம்ஜி செய்த எதிர்பாராத சாதனை...

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனையில் 27 சதவீத வளர்ச்சியை பெறுள்ளது. இந்நிறுவனத்தின் கார்கள மக்கள் விரும்பி வாங்க துவங்கிவிட்டனர். இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி . . . எம் ஜி செய்த எதிர்பாராத சாதனை . . .

பிரிட்டனில் உருவாக்கப்பட்ட நிறுவனம் எம்ஜி மோட்டார். இந்நிறுவனத்தை தற்போது சீன நிறுவனமான SAIC என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தன் விற்பனையை துவங்கியது. இந்தியாலேயே இந்நிறுவனம் கார்களை தயாரித்து விற்பனை செய்ய துவங்கியது.

ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி . . . எம் ஜி செய்த எதிர்பாராத சாதனை . . .

அதன்படி அந்நிறுவனம் முதல் முதலாக எம்ஜி ஹெக்டேர் என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு இன்றளவும் மார்கெட்டில் பயங்கரமான டிமாண்ட் இருக்கிறது. இந்த காருக்கு மாதந்தோறும் 4000க்கும் மேற்பட்ட புக்கிங்கள் குவிகிறது.எம்ஜியை பொருத்தவரை புதிய நிறுவனம் என்பதால் தற்போது அதிக அளவிலான கார்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. அதே நேரத்தில் மக்கள் மனதிலும் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாகவே விதைக்க துவங்கியுள்ளது.

ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி . . . எம் ஜி செய்த எதிர்பாராத சாதனை . . .

தற்போது வரை அந்நிறுவனம் மத்தி மற்றும் உயர் ரக பட்ஜெட்டில் உள்ள கார்களையே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆரம்பத்தில் எம்ஜி ஹெக்டேர் காரை மட்டும் விற்பனை செய்து வந்த அந்நிறுவனம் தற்போது க்ளோஸ்டர், அஸ்டர், எம்ஜி ZS EV போன்ற கார்களைவிற்பனை செய்து வருகின்றனர்.

ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி . . . எம் ஜி செய்த எதிர்பாராத சாதனை . . .

இந்நிறுவனம் தற்போது தனது நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த ஒட்டு மொத்த விற்பனையை ரிப்போர்ட்டாக வழங்கியுள்ளது. அதன்படி அந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 4,508 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது 26.56 சதவீதம் அதிகம் ஆகும். கடந்தாண்டு ஜூன் மாதம்

மொத்தம் 3558 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.

ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி . . . எம் ஜி செய்த எதிர்பாராத சாதனை . . .

இந்த ஒரு வருட இடைவெளியில் விற்பனை 945 கார்கள் வரை உயர்ந்துள்ளுது. இதுவே கடந்த மே மாத விற்பனையை ஒப்பிடும் போது மொத்தம் 4,008 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது அதைவிட 495 வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் 12.35 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கொரோனாவால் கடந்தாண்டு மே மாதம் விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து தற்போது விற்பனை படிப்படியாக மீண்டு வந்துள்ளது.

ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி . . . எம் ஜி செய்த எதிர்பாராத சாதனை . . .
MG Sales June 2022 Sales Vs Diff Growth (%)
Jun-22 4,503 Jun 2021 (YoY) 945 26.56
Jun-21 3,558 May 2022 (MoM) 495 12.35
May-22 4,008 - -
ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி . . . எம் ஜி செய்த எதிர்பாராத சாதனை . . .

எம்ஜி நிறுவனத்தை பொறுத்தவரை தனது கார்களை ஒரு தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்த காராக உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த செக்மெண்டில் உள்ள மற்ற கார்களை காட்டிலும் இந்த காரில் அதிக தொழிற்நுட்ப வசதிகள் இருக்கிறது. இது தான் இந்நிறுவனத்தின் தனித்துவம். இதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. எந்த அளவிற்கு இந்த வரவேற்பு இருக்கிறது. என்றால் கடந்த மே மாதம் ஸ்கேடா குஷாக் காரின் விற்பனையை தாண்டி எம்ஜி ஹெக்டேர் கார் விற்பனையாகியுள்ளது. இந்த நிறுவனம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Mg motor sal growth 27 percent in june 2022 know full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X