Just In
- 1 hr ago
ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!
- 2 hrs ago
அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!
- 3 hrs ago
ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி... எம்ஜி செய்த எதிர்பாராத சாதனை...
- 3 hrs ago
ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... சீன நிறுவனத்தின் அடாவடி!
Don't Miss!
- Sports
அஸ்வின் ஒதுக்கப்பட்டது நியாயமா??.. இங்கிலாந்து டெஸ்டில் இறுதி நேரத்தில் நடந்த மாற்றம்.. உண்மை இதோ!!
- News
"தமிழ்நாட்டில் ஜூலை 4ஆம் தேதி முதலீட்டாளர் மாநாடு!" தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி
- Movies
'நானும் ரவுடிதான்' ஹீரோ ரோலில் நடிக்க முடிவெடுத்த இசையமைப்பாளர்.. மனதை மாற்றிய ரஜினியின் அட்வைஸ்!!
- Technology
இந்த மேட்டரை தெரிஞ்சுக்காம.. டக்குனு OnePlus Nord 2T வாங்கிடாதீங்க!
- Lifestyle
இந்த புரத உணவுகள மட்டும் நீங்க சாப்பிட்டா... உங்க உடல் எடை டக்குனு குறையுமாம் தெரியுமா?
- Finance
ரிலையன்ஸ் தலையெழுத்தை மாற்றிய மத்திய அரசின் அறிவிப்பு.. ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு..!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
எரிபொருளை மிச்சப்படுத்துவதில் 5 ஸ்டார்களை பெற்ற மிஷ்லின் டயர்கள்... எத்தனை சதவீதம் மிச்சப்படுத்தும் தெரியுமா?
மிஷ்லின் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் குறிப்பிட்ட இரு டயர்கள் எரிபொருளை மிச்சப்படுத்துவதில் 5 ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றன. அவை எவை, 5 ஸ்டார் ரேட்டிங்கை யாரிடம் இருந்து பெற்றது என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஃபிரான்ஸ் நாட்டின் கிளர்மோன்ட்-ஃபெர்ரண்ட்-ஐ தாயமாகக் கொண்டு இயங்கி வரும் டயர் உற்பத்தி நிறுவனம் மிஷ்லின். இந்நிறுவனம் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வரும் நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று. இது, இந்தியாவில் மிகப் பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இதன் சந்தையை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் நிறுவனத்தின் தயாரிப்புகுறித்த ஓர் முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, மிஷ்லின் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட இரு தயாரிப்புகள் இந்திய அரசின் ஸ்டார் மதிப்பீட்டில் மிக சிறந்த ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இந்திய அரசாங்கம் சமீபத்தில் நட்சத்திர லேபிளிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்கீழ் மிஷ்லின் நிறுவனத்தின் டயர்கள் சில ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வின்போதே பயணிகள் வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிஷ்லின் லேடிட்யூட் ஸ்போர்ட் 3 (Michelin Latitude Sport 3) மற்றும் மிஷ்லின் பைலட் ஸ்போர்ட் 4 எஸ்யூவி (Michelin Pilot Sport 4 SUV) ஆகிய டயர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை தட்டிச் சென்றிருக்கின்றன.

இதன் வாயிலாக, இந்தியாவின் ஸ்டார் லேபிளிங் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஐந்து ஸ்டார்களை குவித்த முதல் டயர் பிராண்டாக மிஷ்லின் மாறியிருக்கின்றது. இந்த சான்று நிறுவனத்திற்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சமீபத்தில், இதே மிஷ்லின் நிறுவனத்தின் எக்ஸ் மல்டி எனெர்ஜி இசட் (Michelin X Multi Energy Z) என்கிற டயர், பியூரோ ஆஃப் எனெர்ஜி எஃபிசியன்சி (Bureau of Energy Efficiency)-இன் நான்கு ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இது வர்த்தக வாகனங்களுக்கான டயர் ஆகும்.

இந்த பிரிவில் இத்தகைய ரேட்டிங்கை பிஇஇ இடம் இருந்து பெறுவதும் இதுவே முதல் முறையாகும். இந்த நிலையிலேயே எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்பாட்டு விஷயத்தில் மிஷ்லின் லேடிட்யூட் ஸ்போர்ட் 3 மற்றும் மிஷ்லின் பைலட் ஸ்போர்ட் 4 எஸ்யூவி தயாரிப்புகளும் சிறந்தவை என்ற மகுடத்தைச் சூடியிருக்கின்றன.

இந்திய அரசின் புதிய விதிகள், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து டயர்களும், அதிக பெர்ஃபார்மன்ஸை வழங்கக் கூடியவையாக இருக்க வேண்டும் மற்றும் அதிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டயர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டயர்களும் அரசின் புதிய விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த விதி கட்டாயமாக்கியுள்ளது.

இந்த மாதிரியான சூழலிலேயே மிஷ்லின் நிறுவனத்தின் டயர்கள் சூப்பரான ரேட்டிங்கை பெற்று அசத்தியிருக்கின்றது. புதிய தர மதிப்பீட்டின் வாயிலாக மிஷ்லினின் இரு டயர்களும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கக் கூடியவை என்பது தெரிய வந்திருக்கின்றது. 9.5 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை டயர்கள் வழங்கும் என மிஷ்லின் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக மிஷ்லின் டயர்கள் மாசை குறைவாக வெளியேற்றுவதிலும் பங்களிக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.

5 ஸ்டார் ரேட்டிங் பெற்றதுகுறித்து மிஷ்லின் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான மணீஷ் பாண்டே கூறியதாவது, "5-ஸ்டார் மதிப்பீடு வாடிக்கையாளர்களிடையே எங்கள் தயாரிப்பின்மீது அதிக நம்பிக்கையை பெற உதவும். இந்த ரேட்டிங் வாயிலாக கார்பன் தடம் குறைப்பில் எங்களது டயரின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், பேசிய அவர், "இந்திய வாடிக்கையாளர்களை சாலைகளில் பாதுகாப்பாகவும், வசதியாகவும், திறமையாகவும் வைத்திருக்க சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட எங்களது தயாரிப்பை அர்ப்பணிப்பதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என கூறினார்.

மிஷ்லின் 5 ஸ்டார் ரேட்டிங் விபரம் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலானோர் அதிகம் மைலேஜை விரும்புபவர்களாக உள்ளனர். இத்தகையோரை கவரக் கூடியதாகவே மிஷ்லினின் இரு தயாரிப்புகள்குறித்து வெளியாகியிருக்கும் இந்த செய்தி அமைந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!
-
இதற்காக எல்லாம் வாகன ஓட்டிகளை நிறுத்த கூடாது... கர்நாடகா டிஜிபி அதிரடி உத்தரவு... தமிழ்நாட்லயும் போட்டா பரவால!
-
இந்த வீடியோவை நிச்சயம் நீங்க பாத்திருப்பீங்க! ஸ்கூட்டர் தானாக விழுந்ததற்கு பின்னால் இருக்கும் மர்மம் இதுதான்!