மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு மட்டும் எங்கிருந்துதான் விற்பனை குவியுதோ!! 2022 ஏப்ரல் மாத நிலவரம்

எஸ்யூவி ரக கார்கள் பொதுவாகவே அவற்றின் கம்பீரமான உடலமைப்பிற்கே பிரபலமானவை. ஆதலால் எந்த அளவிற்கு கார் பெரியதாக உள்ளதோ அந்த அளவிற்கு அவற்றின் கம்பீரமான தோற்றம் கூடிக்கொண்டே போகும். இதனாலேயே நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இத்தகைய எஸ்யூவி கார்களின் விற்பனை கடந்த ஏப்ரலில் எந்த அளவில் இருந்தது என்பதை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு மட்டும் எங்கிருந்துதான் விற்பனை குவியுதோ!! 2022 ஏப்ரல் மாத நிலவரம்

தற்போதைக்கு இந்தியாவில் மிகுந்த தேவைக்கு மத்தியில் விற்பனையாகி கொண்டிருக்கும் நடுத்தர-அளவு எஸ்யூவி கார் என்றால், அது மஹிந்திரா எக்ஸ்யூவி700 தான். கடந்த மாதத்தில் மொத்தம் 4,494 எக்ஸ்யூவி700 கார்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மஹிந்திராவின் மாடர்ன் எஸ்யூவி காராக எக்ஸ்யூவி700 கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு மட்டும் எங்கிருந்துதான் விற்பனை குவியுதோ!! 2022 ஏப்ரல் மாத நிலவரம்

மாடர்ன் எஸ்யூவி கார் என ஏன் இதை கூறுகிறோம் என்றால், நிலை-2 அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்கள் போன்ற தொழிற்நுட்பங்கள் எக்ஸ்யூவி700-இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எக்ஸ்யூவி700 உள்பட இந்திய சந்தையில் தற்சமயம் மொத்தம் 8 நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் வெவ்வேறான பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாத விற்பனை லிஸ்ட்டில் எக்ஸ்யூவி700-க்கு அடுத்து 2வது இடத்தில் டாடா ஹெரியர் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு மட்டும் எங்கிருந்துதான் விற்பனை குவியுதோ!! 2022 ஏப்ரல் மாத நிலவரம்

டாடா ஹெரியரின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கை 2,785 ஆகும். கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1,712 ஹெரியர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஹெரியரின் விற்பனை கடந்த ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் 62.68% அதிகரித்துள்ளது. ஹெரியருக்கு அடுத்து இந்த வரிசையில் 3வது இடத்தை ஹூண்டாய் அல்கஸார் 2,422 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு மட்டும் எங்கிருந்துதான் விற்பனை குவியுதோ!! 2022 ஏப்ரல் மாத நிலவரம்

பிரபலமான க்ரெட்டா 5-இருக்கை எஸ்யூவி மாடலின் 6/7-இருக்கை வெர்சனான அல்கஸார் கடந்த ஆண்டில், ஏப்ரல் மாதத்திற்கு பிறகே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஆதலால் இந்த மாடலில் வருடம்-வருடம் ஒப்பீடு இல்லை. ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய சஃபாரி இந்த வரிசையில் 4வது இடத்தை தனதாக்கியுள்ளது. சஃபாரியின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2,071 யூனிட்களாகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு மட்டும் எங்கிருந்துதான் விற்பனை குவியுதோ!! 2022 ஏப்ரல் மாத நிலவரம்

ஆனால் 2021 ஏப்ரலில் இதனை காட்டிலும் 36.79% குறைவாக 1,514 சஃபாரி எஸ்யூவி கார்களையே டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஹெரியரின் 6/7-இருக்கை வெர்சனான சஃபாரி கடந்த 2021இல் பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றை தொடர்ந்து 5வது இடத்தில் எம்ஜி மோட்டாரின் முதல் இந்திய காரான ஹெக்டர் எஸ்யூவி உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹெக்டர் கார்களின் எண்ணிக்கை 1,448 ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு மட்டும் எங்கிருந்துதான் விற்பனை குவியுதோ!! 2022 ஏப்ரல் மாத நிலவரம்

உண்மையில், இந்தியாவில் எம்ஜி கார்களின் விற்பனை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம் ஹெக்டர் ஆகும். ஏனெனில் 2021 ஏப்ரலில் 2,147 யூனிட் ஹெக்டர் கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் ஹெக்டர் கார்களின் விற்பனை 32.56% சரிந்துள்ளது. இதற்குகீழ் இந்த லிஸ்ட்டில் உள்ளவை அனைத்தும் ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாகவே கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு மட்டும் எங்கிருந்துதான் விற்பனை குவியுதோ!! 2022 ஏப்ரல் மாத நிலவரம்

அதிகப்பட்சமாக, 6வது இடத்தில் உள்ள ஜீப் காம்பஸ் 886 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பிரபலமான அமெரிக்க எஸ்யூவி காரின் விற்பனை 2021 ஏப்ரலிலும் (846 யூனிட்கள்) கிட்டத்தட்ட இந்த அளவிலேயே இருந்தது. இதனை தொடர்ந்து, 7வது இடத்தில் ஃபோக்ஸ்வேகனின் சமீபத்திய அறிமுகமான டிகுவான் 131 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. டிகுவான் கடந்த ஆண்டு இறுதியில்தான் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு மட்டும் எங்கிருந்துதான் விற்பனை குவியுதோ!! 2022 ஏப்ரல் மாத நிலவரம்

இவற்றிற்கு அடுத்து, கடைசி மற்றும் 8வது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸின் பிரீமியம் தர எஸ்யூவி காரான டக்ஸன் 47 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதுவே 2021 ஏப்ரலில் விற்பனை செய்யப்பட்ட டக்ஸன் கார்களின் எண்ணிக்கை 105 ஆகும். இதன்படி பார்க்கும்போது, இந்தியாவில் டக்ஸன் கார்களின் விற்பனை 55.24% குறைந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு மட்டும் எங்கிருந்துதான் விற்பனை குவியுதோ!! 2022 ஏப்ரல் மாத நிலவரம்

மொத்தமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,284 நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை ஆனது 2021 ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் சுமார் 125.87% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 6,324 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களே விற்கப்பட்டு இருந்தன. ஆனால் மறுப்பக்கம், 16,692 யூனிட்கள் விற்கப்பட்ட 2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.43% குறைவாகும்.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Mid size suv sales apr 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X