இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

உங்கள் காரை பளபளப்பாக வைத்திருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

இந்தியாவில் பலர் தற்போது தங்கள் கார்களுக்கு செராமிக் கோட்டிங் (Ceramic Coating) செய்கின்றனர். இது உங்கள் காரின் வெளிப்புறத்திற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. அத்துடன் மிகவும் குறைவான பராமரிப்பிலேயே, கார் புதிது போன்று இருக்க உதவி செய்கிறது. அப்படிப்பட்ட செராமிக் கோட்டிங்கின் முக்கியமான நன்மைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

உங்கள் கார் மீது அடிக்கடி சூரிய ஒளி விழுந்து கொண்டே இருந்தால், பெயிண்ட் விரைவாக 'டல்' ஆகி விடும். அதாவது மங்கி விடும். ஆனால் சூரியனின் புற ஊதா கதிர்களிடம் (Ultraviolet Rays) இருந்து, உங்கள் காரின் பெயிண்ட்டை செராமிக் கோட்டிங் லேயர் பாதுகாக்கிறது. கார்களுக்கு தற்போது பலரும் செராமிக் கோட்டிங் செய்வதற்கு இதுவே முக்கியமான காரணம்.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

ஆனால் சூரியனின் புற ஊதா கதிர்களிடம் இருந்து மட்டுமல்லாது, இயற்கையாகவே அமில தன்மை கொண்ட அசுத்தங்களும் உங்கள் காருக்கு இருக்கும் அபாயங்களில் ஒன்றுதான். இதன் காரணமாக காரில் ரசாயன கறைகள் ஏற்படலாம். ஆனால் இந்த ரசாயன கறைகளை எதிர்க்கும் திறன் செராமிக் கோட்டிங்கிற்கு இருக்கிறது.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

உங்கள் காரின் பெயிண்ட் உடன், இயற்கையாகவே அமில தன்மை கொண்ட அசுத்தங்களுக்கு பிணைப்பு ஏற்படுவதை செராமிக் கோட்டிங் தடுக்கிறது. அதாவது ரசாயன கறை ஏற்படாமல் செராமிக் கோட்டிங் பாதுகாக்கிறது. செராமிக் கோட்டிங் மூலம் உங்களுக்கு மற்றொரு மிக முக்கியமான நன்மையும் கிடைக்கிறது.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

செராமிக் கோட்டிங்கானது, ஹைட்ரோபோபிக் (Hydrophobic) ஆகும். அதாவது தண்ணீரை விரட்டும் திறன் செராமிக் கோட்டிங்கிற்கு உள்ளது. உங்கள் கார் ஹைட்ரோபோபிக் செராமிக் கோட்டிங்கை பெற்றிருந்தால், காரின் மேற்பரப்பில் தண்ணீர் எளிதாக சரிந்து சென்று விடும். அதாவது சேறு போன்ற அசுத்தங்கள் உங்கள் காரின் மேற்பரப்பில் படிவது கடினம்.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

செராமிக் கோட்டிங் ஹைட்ரோபோபிக் என்பதால், உங்கள் காரின் மேற்பரப்பில் சேறு விழுந்தாலும், எளிதாக வடிந்து சென்று விடும். அதேபோல் நீங்கள் அடுத்த முறை காரை சுத்தம் செய்யும்போது, அசுத்தங்களை அகற்றுவதும் கூட மிகவும் எளிமையாக இருக்கும். குறைவான முயற்சியிலேயே அசுத்தங்களை மிகவும் எளிதாக அகற்றி விடலாம்.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

அதேபோன்று உங்கள் காரின் பெயிண்ட் மிகவும் நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், நீங்கள் உங்கள் காருக்கு செராமிக் கோட்டிங்கை செய்வது அவசியம். பொதுவாக புத்தம் புதிய கார்கள் மிகவும் பளபளப்பாக இருக்கும். எனினும் பல்வேறு காரணங்களால் நாளடைவில் அந்த பளபளப்பு மங்கி விடும்.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

ஆனால் காரை வாங்கும்போது எப்படி இருந்ததோ, அதே பளபளப்புடன் எப்போதும் இருக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் உள்ளது. இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் காருக்கு செராமிக் கோட்டிங் செய்து கொள்ளுங்கள். ஒரு நல்ல தரமான செராமிக் கோட்டிங், உங்கள் காரின் பளபளப்பை மேம்படுத்துகிறது.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

உங்கள் காரின் பிரதிபலிப்பு பண்புகளை செராமிக் கோட்டிங் மேம்படுத்துகிறது. இதன் காரணமாக உங்கள் கார் 'ஷைன்' ஆக இருக்கும். அத்துடன் உங்கள் காருக்கு நீங்கள் செராமிக் கோட்டிங் செய்கிறீர்கள் என்றால், உங்கள் காரின் மதிப்பை கூட்டுகிறீர்கள் என்று அர்த்தம். இதன் மூலம் காரை நீங்கள் விற்பனை செய்வதாக இருந்தால், உங்களிடம் இருந்து வாங்குபவரிடம் நல்ல தொகையை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

ஒட்டுமொத்தத்தில் காருக்கான பராமரிப்பு தேவைகளை செராமிக் கோட்டிங் குறைக்கிறது. காரை நீங்கள் நன்றாக பராமரிப்பதை செராமிக் கோட்டிங் எளிமையாக்குகிறது என்றும் கூட சொல்லலாம். ஆனால் அதற்காக பராமரிப்பே தேவையில்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். செராமிக் கோட்டிங் செய்திருந்தாலும் கூட, ரெகுலராக காரை கழுவ வேண்டும் என்றே அறிவுறுத்தப்படுகிறது.

இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!

எனவே செராமிக் கோட்டிங் செய்யப்பட்டிருந்தாலும் கூட, குறிப்பிட்ட இடைவெளிகளில் வழக்கம் போல காரை கழுவி விடுங்கள். ஆனால் செராமிக் கோட்டிங் செய்திருந்தால், சேறு போன்ற அழுக்குகள் பெரிதாக தங்காது என்பதால், பெரிதாக அலட்டி கொள்ளாமல் சிறிய முயற்சியிலேயே உங்கள் காரை நீங்கள் மிகவும் எளிமையாக கழுவி விட முடியும்.

Most Read Articles
English summary
Most important benefits of car ceramic coating
Story first published: Wednesday, July 6, 2022, 14:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X