இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

வாகனங்களில் பொழுதுப்போக்கு என்பது தற்காலத்தில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. அதிலிலும் குறிப்பாக, தொலைத்தூர பயணங்களின் போது கார்களில் பொழுதுப்போக்கு அம்சங்கள் இருக்க வேண்டும் என பலரும் விரும்புகின்றனர். அத்தகையவர்களுக்காக பயன்பாட்டில் இருக்கும் சவுண்ட் அமைப்புகளையும், உதிரி பாக சந்தையில் கிடைக்கும் சவுண்ட் அமைப்புகள் சிலவற்றையும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

ஹர்மன் கர்டான்

அமெரிக்காவில் 1953இல் தோற்றுவிக்கப்பட்ட உயர்-நிலை ஆடியோ பிராண்ட். ஆரம்பத்தில் லக்சரி கார்களில் மட்டுமே நிலையான தேர்வாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் டாடா மோட்டார்ஸினால் தற்சமயம் டியாகோ போன்ற விலை குறைவான கார்களில் கூட ஹர்மன் கர்டான் சவுண்ட் அமைப்பு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

போஸ்

இந்திய மின் பொறியியலாளரும், பேராசிரியருமான அமர் ஜி போஸ் அவர்களால் 1964இல் போஸ் கார்ப்பிரேஷன் நிறுவப்பட்டது. தற்சமயம் ஹூண்டாய், கியா என்ற தென்கொரிய பிராண்ட்கள் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களில் போஸ் சவுண்ட் சிஸ்டம் பிரதான தேர்வாக வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் உள்ளவர்களும் உதிரி பாக சந்தையில் போஸ் சவுண்ட் அமைப்பை பெறலாம்.

இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

ஜேபிஎல்

இந்தியாவில் பிரபலமான சவுண்ட் அமைப்பாக விளங்குகிறது. ஹர்மன் கர்டன் நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. 1946இல் ஜேம்ஸ் பி என்கிற பெயரில் அறிமுகமானது. தற்சமயம் டாடா ஹெரியர், சஃபாரி, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்ட இந்திய கார்களில் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. அத்துடன் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் சப் வூஃபர்கள் உதிரி பாக சந்தையிலும் கிடைக்கின்றன.

இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

இன்ஃபினிட்டி

ஹர்மன் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் மற்றொரு ஆடியோ பிராண்ட். 1968இல் தோற்றுவிக்கப்பட்ட இன்ஃபினிட்டி பிராண்ட்டில் இருந்து கார்களுக்கான ஆடியோ சிஸ்டம் மட்டுமின்றி, வீட்டு உபயோக ஆடியோ அமைப்புகளும் விற்பனையில் உள்ளன. மல்டி சேனல் சவுண்ட் ஹோம் தியேட்டர் அமைப்புகள், சுவர்களுக்கு உள் பொருத்தப்படும் ஸ்பீக்கர்கள் என இன்ஃபினிட்டி பிராண்டில் இருந்து ஏகப்பட்ட பயன்பாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

பாங்க் & ஒலுஃப்சன்

மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற லக்சரி கார் பிராண்ட்களின் தயாரிப்புகளில் வழங்கப்படும் சவுண்ட் சிஸ்டம் இது ஆகும். 1925இல் நிறுவப்பட்ட பாங்க் & ஒலுஃப்சன் பிராண்டில் இருந்து ஆரம்பத்தில் ரேடியோக்களே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்தியாவில் உதிரி பாக சந்தையில் இந்த பிராண்டின் ஸ்பீக்கர்கள் கிடைப்பதில்லை. ஆதலால் இதன் ஸ்பீக்கர்களை பெற வேண்டுமென்றால், லக்சரி கார்களை வாங்குவது மட்டுமே ஒரே வழியாகும்.

இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

அல்பைன்

இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான ஆடியோ பிராண்ட்களுள் ஒன்றாக அல்பைனை கூறலாம். அல்ப்ஸ் எலக்ட்ரிக் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களின் கூட்டணியில் உருவான அல்பைன் பிராண்ட் ஆரம்பத்தில் அல்ப்ஸ் மோட்டோரோலா என அழைக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் கார்களில் கேசட் போட்டு பாட்டு கேட்கும் வசதியை முதலாவதாக அறிமுகப்படுத்திய பெருமை அல்பைனையே சேரும்.

இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

ஜேஎல் ஆடியோ

உயர் தரத்திலான ஆடியோ அமைப்புகளுக்கு பெயர் பெற்றது ஜேஎல் ஆடியோ ஆகும். அமெரிக்காவில் வீட்டு உபயோக ஸ்பீக்கர்கள், மொபைல், பவர்ஸ்போர்ட்ஸ் & மெரைன் ஆடியோ உள்ளிட்டவற்றை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றிருந்த அமெரிக்க நிறுவனம் ஒன்றை ஜேஎல் ஆடியோ தனிப்பட்ட முறையில் வாங்கியது. இதனால்தான் உலகம் முழுவதிலும் ஜேஎல் ஆடியோ நிறுவனத்தின் தயாரிப்புகள் சென்றடைந்துள்ளன.

இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

சோனி

இந்தியாவில் சோனி பிராண்டின் பிரபலத்தை பற்றி நான் கூற வேண்டி இருக்காது என்றே நினைக்கிறேன். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சோனி நிறுவனத்தில் இருந்து இயர்போனில் துவங்கி பெரிய அளவிலான வீட்டு உபயோக பொருட்கள் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய நிறுவனம் கார்களுக்கும் ஆடியோ அமைப்பை வழங்குவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

பியோனீர்

ஜப்பானை சேர்ந்த மற்றொரு டிஜிட்டல் பொழுதுப்போக்கு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம். 1938இல் நோஸோமு மட்சுமோடோ என்பவரால் வெறும் ரேடியோ & ஸ்பீக்கர்கள் பழுது பார்க்கும் கடையாக துவங்கப்பட்ட பியோனீர் தற்போது உலகம் முழுவதிலும் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் ஆலமரமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் இந்த பிராண்டில் இருந்து ஸ்பீக்கர்கள் உதிரி பாக சந்தையிலும் கிடைக்கின்றன.

இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?

பானாசோனிக்

சோனியை போன்று இந்தியா முழுவதும் பலரால் அறியப்படும் ஜப்பானிய பிராண்ட். 1918இல் மட்சுஷிடா எலக்ட்ரிக் இண்டஸ்ட்ரீயல் கம்பெனி என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பானாசோனிக், மற்றொரு ஜப்பானிய நிறுவனமான விக்டர் கம்பெனி உடன் இணைந்து உருவாக்கிய வீடியோ பதிவுகள் அதன் சாதனைகளில் ஒன்றாகும். 2008இல் இருந்து பானாசோனிக் என அழைக்கப்பட்டுவரும் இந்த பிராண்டில் இருந்து கார் ஆடியோ அமைப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

Most Read Articles
English summary
Most popular audio system brands in the country you can buy right now
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X