பொங்கல்ல இருந்து எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ் ஓடப்போகுது! இந்த பஸ்ல போறதுக்குலாம் குடுத்து வச்சிருக்கணும்!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை (Mumbai), இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக திகழ்கிறது. இங்கு பிரிஹான்மும்பை எலெக்ட்ரிசிட்டி சப்ளை மற்றும் டிரான்ஸ்போர்ட் (Brihanmumbai Electricity Supply and Transport) நிறுவனம் பஸ் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் சுருக்கமாக பெஸ்ட் (BEST) என அழைக்கப்படுகிறது.

மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகளுக்கு பெஸ்ட் நிறுவனம் பஸ் சேவையை வழங்கி கொண்டுள்ளது. பெஸ்ட் நிறுவனத்திடம் 3,500க்கும் மேற்பட்ட பஸ்கள் இருக்கின்றன. இதில், 400 எலெக்ட்ரிக் பஸ்களும் அடங்கும். இதுதவிர ஏசி வசதி இல்லாத டபுள் டக்கர் (Double Decker) பஸ்களையும் பெஸ்ட் நிறுவனம் இயக்கி கொண்டுள்ளது. இவை டீசல் (Diesel) மூலம் இயங்க கூடிய டபுள் டக்கர் பஸ்கள் ஆகும்.

பொங்கல்ல இருந்து எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ் ஓடப்போகுது! இந்த பஸ்ல போறதுக்குலாம் குடுத்து வச்சிருக்கணும்!

மொத்தம் 45 நான் ஏசி டீசல் டபுள் டக்கர் டீசல் பஸ்களை பெஸ்ட் நிறுவனம் இயக்கி கொண்டுள்ளது. ஆனால் படிப்படியாக இந்த டீசல் டபுள் டக்கர் பஸ்களுக்கு விடை கொடுப்பதற்கு பெஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக மின்சாரத்தில் இயங்க கூடிய புதிய டபுள் டக்கர் பஸ்களை (Electric Double Decker Bus) அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பெஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெஸ்ட் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ் சேவை வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ளதாக தற்போது உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டபுள் டக்கர் எலெக்ட்ரிக் பஸ்களுக்கு அனுமதி பெறும் பணிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து விடும். இதன் பின்னர் வரும் ஜனவரி 14ம் தேதி (January 14) பெஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்கப்படவுள்ளது.

பெஸ்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா இந்த தகவலை தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 14ம் தேதி குறைந்தபட்சம் 10 டபுள் டக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். முதற் கட்டமாக 50 எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பொங்கல் (Pongal) பண்டிகை கொண்டாடப்படும் சமயத்தில், மும்பையில் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஹர சங்கராந்தி (Makara Sankranti) என்ற பெயரில் இந்த பண்டிகை கொண்டாடப்படும். எனவே மும்பை நகரில் வசிக்கும் தமிழர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் இந்த பொங்கல் பண்டிகை இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்னதாக புதிய பிரீமியம் சிங்கிள் டக்கர் எலெக்ட்ரிக் பஸ்களை நடப்பு டிசம்பர் மாதத்திலேயே அறிமுகம் செய்வதற்கு பெஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்களில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் தங்களுக்கான இருக்கையை செயலி, அதாவது ஆப் (App) மூலமாக முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதுதவிர புதிதாக டாக்ஸி சேவையை தொடங்குவதற்கும் பெஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

500 எலெக்ட்ரிக் வாகனங்களுடன் (Electric Vehicles) டாக்ஸி சேவையை தொடங்குவதற்கு பெஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய டாக்ஸி சேவை வரும் ஜூன் மாதம் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டெண்டர்கள் ஏற்கனவே விடப்பட்டு விட்டன. சலோ ஆப் (Chalo App) மூலமாக இந்த டாக்ஸிகளை பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். தற்போதைய நிலையில் பஸ் டிக்கெட்களை ஆன்லைனில் வாங்குவதற்கும், பஸ்கள் எங்கே வருகின்றன? என்பதை டிராக் செய்வதற்கும் இந்த ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Mumbai to get double decker electric buses
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X