மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

மழை காலத்தில் ஒரு சிலர் தங்கள் கார் கண்ணாடியில் ஒரு திரவத்தை பூசுவார்கள். அதற்கு என்ன காரணம்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

மழை காலம் வந்து விட்டது. இந்த சமயத்தில் உங்கள் காரில் குறிப்பிட்ட ஒரு சில ஆக்ஸஸெரீஸ்கள் இருப்பது அவசியம். பொதுவாக மழை காலங்களில் காரில் பயணிப்பவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதற்கு, இந்த ஆக்ஸஸெரீஸ்கள் உங்களுக்கு உதவி செய்யும்.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

ஓஆர்விஎம் ஆன்டி-ஃபாக் ஃபிலிம் (ORVM Anti-Fog Film)

ஓஆர்விஎம்களுக்கான ஆன்டி-ஃபாக் ஃபிலிம்கள், மழையில் விஸிபிலிட்டியை (Visibility) மிகவும் நன்றாக மேம்படுத்தும். அதாவது உங்களால் தெளிவாக பார்க்க முடியும். ஏனெனில் ஓஆர்விஎம்களில் பனி படர்வதை இந்த ஃபிலிம்கள் தடுக்கின்றன. எனவே உங்களால் பின் பகுதியை தெளிவாக பார்த்து கொண்டே காரை பாதுகாப்பாக ஓட்ட முடியும்.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

மைக்ரோஃபைபர் துணி (Microfiber Cloth)

மைக்ரோஃபைபர் துணி இருந்தால் உங்கள் காரை எளிமையாக சுத்தம் செய்ய முடியும். மேலும் காரில் சுழல் போன்ற குறியீடுகள் விழுவதையும் இந்த மைக்ரோஃபைபர் துணி தடுக்கிறது. அது மட்டுமல்லாது, இந்த மைக்ரோஃபைபர் துணிகள், மற்ற வழக்கமான துணிகளை காட்டிலும், தண்ணீரை அதிகளவு உறிஞ்சும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

ஏர் ஃப்ரெஷ்னர் (Air Freshener)

பருவ மழை காலங்களில் உங்கள் காரின் கேபினில் வித்தியாசமான வாசனைகள் வரும். காரின் கேபினில் அதிக ஈரப்பதம் இருப்பதே இதற்கு காரணம் ஆகும். இந்த விரும்பத்தகாத வாசனையை குறைப்பதற்கு ஏர் ஃப்ரெஷ்னர் உங்களுக்கு உதவி செய்யும். எனவே நல்ல தரமான ஏர் ஃப்ரெஷ்னரை வாங்கி காரில் வைத்து கொள்ளுங்கள்.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

வாட்டர்ப்ரூஃப் பாடி கவர் (Waterproof Body Cover)

பருவ மழை காலங்களில் வாட்டர்ப்ரூஃப் பாடி கவரை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது மழையில் இருந்து உங்கள் காரை பாதுகாக்கும். அத்துடன் உங்கள் கார் மிகவும் சுத்தமாக இருப்பதற்கும் இது உதவி செய்யும். மேலும் உங்கள் கார் துருபிடிப்பதற்கான வாய்ப்புகளையும், வாட்டர்ப்ரூஃப் பாடி கவர் குறைக்கிறது.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

மழை நீர் விரட்டி (Rain Water Repellent)

பருவ மழை காலங்களில் இது உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்றாகும். இந்த மழை நீர் விரட்டி ஒரு திரவம் என்பது குறிப்பிடத்தக்கது. காரின் விண்டுஷீல்டில், அதாவது கண்ணாடியில், இந்த திரவத்தை நீங்கள் பூசி கொள்ளலாம். தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ள அறிவுறுத்தல்களின்படி, இந்த திரவத்தை விண்டுஷீல்டில் 'அப்ளை' செய்து கொள்ளுங்கள்.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

இதன் மூலமாக மழை பெய்யும் சமயங்களில் 'விஸிபிலிட்டி' அதிகரிக்கும். ஏனெனில் விண்டுஷீல்டில் நீங்கள் 'அப்ளை' செய்யும் திரவம் மூலம் 'ஹைட்ரோபோபிக் ஷீல்டு' (Hydrophobic shield) உருவாகும். இது விண்டுஷீல்டின் மேற்பரப்பில் மழைநீர் ஒட்டி கொள்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதாவது விண்டுஷீல்டில் மழைநீர் தங்காது. உடனடியாக வடிந்து சென்று விடும்.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

இதன் மூலமாக நீங்கள் கண்ணாடியை தெளிவாக பார்த்து கொண்டே கார் ஓட்ட முடியும். மழை காலங்களில் 'விஸிபிலிட்டி' முக்கியமான ஒன்று. ஏனெனில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால், 'விஸிபிலிட்டி' மிக குறைவாகவே இருக்கும். பார்வை தெளிவாக தெரியாத காரணத்தால், மழை காலங்களில் பல்வேறு விபத்துக்கள் நிகழ்கின்றன.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

இந்த பிரச்னையில் இருந்து, உங்களுக்கும், உங்களுடன் காரில் பயணம் செய்பவர்களுக்கும் பாதுகாப்பு இந்த மழை நீர் விரட்டி பாதுகாப்பு அளிக்கும். எனவே மழை காலங்களில் இதுவும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சம்தான். ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் கூட இந்த மழை நீர் விரட்டியை நீங்கள் எளிமையாக வாங்கி கொள்ள முடியும்.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

குடை (Umbrella)

இவற்றுடன் உங்கள் காரில் குடையையும் எப்போதும் தயாராக வைத்து கொள்ளுங்கள். மழை காலங்களில் குடை ஏன் அவசியம்? என்பதை நாங்கள் விவரிக்க வேண்டியதே இல்லை. திடீரென மழை பெய்யும்போது, காரில் இருந்து இறங்கி நீங்கள் எங்கேயாவது செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் குடை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

மழை காலத்துல கார் கண்ணாடியில் ஒரு சிலர் இந்த திரவத்தை பூசுவாங்க... ஏன் தெரியுமா? இந்த ஐடியா நச்சுனு இருக்கே!

நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள ஒரு சில ஆக்ஸஸெரீஸ்கள் உங்கள் காரை நன்றாகவும், துர்நாற்றங்கள் இல்லாமலும் வைத்து கொள்வதற்கு உதவி செய்யும். அதே நேரத்தில் மேலும் ஒரு சில ஆக்ஸஸெரீஸ்கள் உங்களையும், உங்களுடன் பயணிப்பவர்களையும் சாலை விபத்து போன்ற அபாயங்களில் இருந்து பாதுகாக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
Must have monsoon car accessories rain water repellent orvm anti fog film and more
Story first published: Thursday, July 21, 2022, 19:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X