விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள புதிய மாருதி சுஸுகி கார் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (2022 Maruti Suzuki Brezza) கார் நாளை (ஜூன் 30ம் தேதி) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் தொடங்கியது.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

முதல் நாளிலேயே 2022 பிரெஸ்ஸா காருக்கு மாருதி சுஸுகி நிறுவனம் 4,500 முன்பதிவுகளை பெற்று அசத்தியது. LXi, VXi, ZXi, மற்றும் ZXi+ என 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் நீளம் 3,995 மிமீ ஆக இருக்கும்.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

அதே நேரத்தில் அகலம் 1,790 மிமீ ஆகவும், உயரம் 1,685 மிமீ ஆகவும், வீல் பேஸ் நீளம் 2,500 மிமீ ஆகவும் இருக்கும். 2022 பிரெஸ்ஸா காரின் முன் பகுதியில் புதிய க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் ஒருங்கிணைந்த பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

மேலும் ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் பக்க பம்பர், புதிய பனி விளக்குகள் அறையையும் பெற்றுள்ளது. ஆனால் பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், பழைய மாடலை காட்டிலும் புதிய மாடல், மிகவும் வித்தியாசமாக தெரியவில்லை. இருப்பினும் ரீ-டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள், அகலமான கிளாடிங்குகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

பின் பகுதியை பொறுத்தவரையில், ரீ-டிசைன் செய்யப்பட்ட எல்இடி டெயில்லைட்கள், பூட் லிட் மீது கொடுக்கப்பட்டுள்ள 'Brezza' என்ற பெயர் ஆகியவை கவனம் ஈர்க்கின்றன. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் ஆகிய வசதிகள் புதிய பிரெஸ்ஸா காரில் வழங்கப்பட்டுள்ளன.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

இதுதவிர ARKAMYS மியூசிக் சிஸ்டம், கூல்டு க்ளவ் பாக்ஸ், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல்கள் உடன் புதிய தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல், ஆம்பியண்ட் லைட்டிங், பின் வரிசையில் 12V சாக்கெட் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உள்பட பல்வேறு வசதிகளையும் புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் பெற்றுள்ளது.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

பாதுகாப்பை பொறுத்தவரையில், புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில்-ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகிய வசதிகளையும் 2022 பிரெஸ்ஸா காரில் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

செயல்திறனை பொறுத்தவரையில், புதிய 1.5 லிட்டர், K15C, ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை, 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் பெற்றுள்ளது. இந்த புதிய மாடலில் டிரான்ஸ்மிஷன் பணிகளுக்கு, 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களுக்கு, புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் பற்றிய நிறைய தகவல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டாலும் கூட, வாடிக்கையாளர்கள் பலரும் எதிர்பார்க்கும் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு நாம் நாளை வரை காத்திருக்க வேண்டும். நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, புதிய பிரெஸ்ஸா காரின் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!

பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளதால், பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் விலை சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய பிரெஸ்ஸா காரின் வருகை, இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டியை இன்னும் கடுமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
English summary
New 2022 maruti suzuki brezza launch tomorrow design features specs
Story first published: Wednesday, June 29, 2022, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X