டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

ஹூண்டாய் நிறுவனம் 4வது தலைமுறை டூஸான் (Hyundai Tucson) காரை இந்தியாவில் தற்போது பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 4ம் தேதி, புதிய தலைமுறை டூஸான் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த வாரத்தில், புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளன.

டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

சரியாக சொல்வதென்றால், வரும் ஜூலை 18ம் தேதியில் இருந்து, புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் கார்களை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புதிய தலைமுறை டூஸான் கார்களை டெலிவரி செய்யும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் வரும் மாதங்களில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான், 5 மோனோ-டோன் மற்றும் 2 ட்யூயல்-டோன் என ஒட்டுமொத்தமாக 7 வண்ண தேர்வுகளில் கிடைக்கும்.

மோனோ-டோன் வண்ண தேர்வுகள்

  • போலார் ஒயிட்
  • பாந்தம் பிளாக்
  • ஃபயரி ரெட்
  • ஸ்டேரி நைட்
  • அமேஸான் க்ரே
  • ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகள்

    • பாந்தம் பிளாக் மேற்கூரையுடன் போலார் ஒயிட்
    • பாந்தம் பிளாக் மேற்கூரையுடன் ஃபயரி ரெட்
    • டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

      புதிய ஹூண்டாய் டூஸான் காரின் முன் பகுதியில், புதிய பெரிய க்ரில் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகளையும் இது பெற்றுள்ளது. மேலும் இந்த காரில், 18 இன்ச் ட்யூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் ட்யூயல் 'T' வடிவ எல்இடி டெயில் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி லைட் பார் மூலம் அவை இணைக்கப்பட்டுள்ளன.

      டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

      பழைய மாடலை காட்டிலும், புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் காரின் உட்புறத்தில் இடவசதி அதிகமாக இருக்கும். புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் காரின் டேஷ்போர்டின் மைய பகுதியில், புதிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த காரில் இடம்பெற்றுள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

      டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

      இதன்படி ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பனரோமிக் சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபையர், முன் பகுதியில் ஹீட்டட், வென்டிலேட்டட் இருக்கைகள், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 360 டிகிரி கேமரா, மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் மற்றும் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம் என ஏராளமான வசதிகளை புதிய ஹூண்டாய் டூஸான் கார் பெற்றுள்ளது.

      டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

      அத்துடன் வாய்ஸ் கமாண்டுகள், அலெக்ஸா மற்றும் கூகுள் அஸிஸ்டெண்ட், 8 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளும் புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர அடாஸ் (ADAS) தொழில்நுட்ப வசதியையும், புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் கார் பெற்றுள்ளது என்பது கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

      டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

      இது லெவல் 2 (Level 2) அடாஸ் தொழில்நுட்பமாகும். அதே சமயம் புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 156 ஹெச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

      டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

      இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். மறுபக்கம் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 186 ஹெச்பி பவரையும், 416 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. புதிய டூஸான் காரில், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை.

      டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

      புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்படவுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், ஜீப் காம்பஸ் (Jeep Compass) மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross) ஆகிய கார்களுடன், புதிய ஹூண்டாய் டூஸான் போட்டியிடும்.

      டாடா, மஹிந்திராவிற்கு செக் வைத்த ஹூண்டாய்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே இந்த காரை வாங்கணும்னு தோணுது!

      இதுதவிர டாடா ஹாரியர் (Tata Harrier) எம்ஜி ஹெக்டர் (MG Hector) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) ஆகிய கார்களின் விலை உயர்ந்த டாப் மாடல்களுக்கும், புதிய தலைமுறை டூஸான் கார் விற்பனையில் சவால் அளிக்கும். இந்த காரின் விலை எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்வதற்காக வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
New generation hyundai tucson unveiled in india launch date bookings engine features
Story first published: Wednesday, July 13, 2022, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X