இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

2022 ஹூண்டாய் வென்யூ (2022 Hyundai Venue) காருக்கு இப்பவே 15 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் பெரும் எதிர்பார்க்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட வென்யூ (2022 Venue) காரை இந்தியா சந்தையில் இன்று (ஜூன் 16) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சாப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் மிக சூப்பரான வரவேற்பைப் பெற்று வரும் மாடல்களில் வென்யூவும் ஒன்று. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

இந்த காருக்கான புக்கிங்கை ஏற்கும் பணியை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இன்று வென்யூ அறிமுகமானதைத் தொடர்ந்து, அக்காருக்கு என்ன மாதிரியான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கின்றது என்பது பற்றிய தகவலை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

அது வெளியிட்டிருக்கும் தகவலின்படி, புதிய ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்போதே 15 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதேநேரத்தில், முந்தைய வெர்ஷன் வென்யூவிற்கு 25 ஆயிரம் புக்கிங்குகள் கிடைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

இதன் வாயிலாக புதிய வென்யூ மற்றும் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வென்யூ ஆகிய இரண்டிற்கும் இந்தியாவில் மிக சூப்பரான வரவேற்பு நிலவுவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, புதிய வெர்ஷன் வருகையை ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்திய பின்னரும் பழைய வெர்ஷனுக்கு பெருமளவில் புக்கிங் குவிந்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே ஆச்சரியமானதாக அமைந்துள்ளது.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

புதிய 2022 வென்யூவிற்கு அறிமுக விலையாக ரூ. 7.53 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் உயர்நிலை வேரியண்ட் ரூ. 12.57 லட்சம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். டீசல் மற்றும் பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் வென்யூ விற்பனைக்குக் கிடைக்கும்.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் ஆகிய மூன்று விதமான மோட்டார் தேர்வுகளிலேயே 2022 வென்யூ விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், ஐஎம்டி மற்றும் டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றது.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

புதிய வென்யூ காரில் பல்வேறு சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற நவீன கால அம்சங்களும் அதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சத்தின் வாயிலாக பல்வேறு சிறப்பு செயல்களை குரல் கட்டளையின் வாயிலாக நம்மால் செய்து கொள்ள முடியும்.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

காரின் ஏசியை ஆன் செய்தல், கார் இருக்கும் இடத்தைக் கண்டறிதல், எரிபொருள் அளவை தெரிந்துக் கொள்ளுதல், காரின் கதவுகளை லாக் செய்தல் போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ள முடியும். இத்தகைய சூப்பரான வசதிகளுடனேயே 2022 வென்யூ தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகள் மற்றும் ஏழு விதமான நிற தேர்வுகளில் புதிய வென்யூ விற்பனைக்குக் கிடைக்கும் என ஹூண்டாய் அறிவித்துள்ளது.

வேரியண்டுகள்

இ (E), எஸ் (S), எஸ் பிளஸ்/ எஸ் (ஓ) (S+/S[O]), எஸ்எக்ஸ் (SX) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) (SX[O]) ஆகியவையே அவை ஆகும்.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

நிற தேர்வுகள்:

டைஃபூன் சில்வர், டைடன் கிரே, டெனிம் ப்ளூ, பேந்தம் பிளாக், போலார் ஒயிட் மற்றும் ஃபையரி ரெட் ஆகிய ஒற்றை நிற தேர்வுகளுடன் சேர்த்து ஃபையரி ரெட் - பேந்தம் பிளாக் ரூஃப் ஆகிய இருநிறங்கள் கலந்த ட்யூவல் டோன் தேர்வு ஆகியவற்றில் 2022 வென்யூ விற்பனைக்குக் கிடைக்கும். இக்-காரின் உட்பகுதியும் இரு நிறங்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

பழைய மற்றும் புதிய வென்யூ கார் மாடலின் விலை பட்டியலைக் கீழே காணலாம்,

வென்யூ பெட்ரோல் புதிய விலை Jun-22

பழைய விலைMay-22

வித்தியாசம்
E 1.2 MT ₹7,53,100 ₹7,11,200 ₹41,900
S 1.2 MT ₹8,70,400 ₹7,91,100 ₹79,300
S+ 1.2 MT ₹9,50,200 ₹8,78,800 ₹71,400
SX 1.2 MT ₹10,69,500 NA -
S (O) 1.0 iMT ₹9,99,900 ₹9,24,800 ₹75,100
S (O) 1.0 DCT ₹10,96,700 ₹10,15,300 ₹81,400
SX 1.0 MT NA ₹10,21,100 -
SX 1.0 iMT NA ₹10,21,100 -
SX (O) 1.0 iMT ₹11,92,000 ₹11,49,900 ₹42,100
SX+ 1.0 DCT ₹12,57,000 ₹11,82,300 ₹74,700
வென்யூ டீசல்

புதிய விலைJun-22

பழைய விலை May-22 வித்தியாசம்
S (O) 1.5 MT ₹9,99,900 ₹9,68,200 ₹31,700
SX 1.5 MT ₹11,42,500 ₹9,99,999 ₹1,42,501
SX (O) Exe 1.5 MT NA ₹11,20,200 -
SX (O) 1.5 MT ₹12,32,000 ₹11,83,700 ₹48,300
இப்பவே 15 ஆயிரம் புக்கிங்குகளை குவித்த வென்யூ... நிஜமாகவே டாடா நெக்ஸானை இது ஓரங்கட்டிடும் போலிருக்கே!

வென்யூ கார் இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இந்த போட்டியை பல மடங்கு அதிகரிக்கும் பொருட்டே 2022 வெர்ஷனை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது, ஹூண்டாய்.

Most Read Articles
English summary
Newly launched 2022 hyundai venue received 15000 bookings in india
Story first published: Thursday, June 16, 2022, 19:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X