கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700- ஒரே மாதத்தில் 4 ஆயிரம் யூனிட்கள் விற்பனை

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை தற்போதும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான பிராண்ட்களின் விற்பனை குறைந்து வருவதை பார்த்து வருகிறோம்.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

இந்த வகையில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவின் கார்கள் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் சரிவை சந்தித்தது. அதுமட்டுமின்றி இதன் கார்களை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவையும் அதிகரிக்க வேண்டிய சூழல் மஹிந்திராவுக்கு ஏற்பட்டது.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

மாருதி சுஸுகி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து இந்திய சந்தையில் நான்காவது முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா கடந்த 2021 டிசம்பரில் மொத்தம் 17,476 கார்களை விற்பனை செய்துள்ளது. அதுவே 2020 டிசம்பரில் 16,050 கார்களையே இந்த இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

இந்த வகையில் பார்த்தோமேயானால், வருடம்-வருடம் ஒப்பிடுகையில் மஹிந்திரா கார்களின் விற்பனை 8.88% அதிகரித்துள்ளது. அதாவது, இந்த பிராண்டில் இருந்து 2020 டிசம்பரை காட்டிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 1,426 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல் கடந்த மாதத்திலும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா காராக பொலிரோ விளங்குகிறது. கடந்த மாதத்தில் மொத்தம் 5,314 பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

தொடர்ந்து முதலிடத்தை பிடித்திருந்தாலும் உண்மையில், பொலிரோ கார்களின் விற்பனை 113 யூனிட்கள், அதாவது 2.08% வருடம்-வருடம் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. ஏனெனில் 2020 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 5,427 பொலிரோ கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இருப்பினும் மஹிந்திராவின் மொத்த பயணிகள் கார்கள் விற்பனையில் பொலிரோ மாடல் மட்டுமே கிட்டத்தட்ட 30.41 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

அதேபோல் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தையும் மஹிந்திராவின் காம்பெக்ட் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி300 4,260 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2020 டிசம்பரில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில், எக்ஸ்யூவி300 கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதற்கு முந்தைய ஆண்டு டிசம்பரில் 3,974 எக்ஸ்யூவி300 கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

இந்த வகையில் இந்த மஹிந்திரா காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் 7.20% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து மூன்றாவது இடத்தை மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகமான எக்ஸ்யூவி700 பிடித்துள்ளது. லேட்டஸ்ட் மாடர்ன் மஹிந்திரா கார் என அழைக்கப்படும் எக்ஸ்யூவி700 கடந்த மாதத்தில் மொத்தம் 3,980 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

இந்த புதிய மஹிந்திரா எஸ்யூவி கார் கடந்த அக்டோபர் மாதத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டதால், 2020 டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கை இல்லை. மஹிந்திராவின் மொத்த பயணிகள் கார்கள் விற்பனையில் எக்ஸ்யூவி700 22.77 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இதேபோன்று 2020ஆம் ஆண்டின் இறுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட தார் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் இந்த லிஸ்ட்டில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

ஸ்கார்பியோ கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் குறைந்ததால் தார் மாடல் லிஸ்ட்டில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஆனால் உண்மையில் 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் சற்று குறைவான தார் வாகனங்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த டிசம்பரில் 2,138 தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2020 டிசம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் 6.88% அதிகமாக 2,296 தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

நீண்ட வருடங்களாக பெரியதாக எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் விற்பனையில் இருப்பதால் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை கவனிக்கத்தக்க அளவில் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் குறைந்துள்ளது என நினைக்கிறோம். கடந்த 3,417 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 1,757 யூனிட்களாக சுமார் 48.58% குறைந்துள்ளது.

கடினமான சூழலிலும், விற்பனையில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி700!! ஒரே மாதத்தில் 4 யூனிட்கள் விற்பனை!

இதனை கருத்தில் கொண்டுதான் குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் புதிய ஸ்கார்பியோ காரை விற்பனைக்கு கொண்டுவர மஹிந்திரா தயாராகி வருகிறது. ஸ்கார்பியோவிற்கு கீழ் அல்டுராஸ் என்கிற மஹிந்திராவின் ஒரே ஒரு சொகுசு கார் 18 யூனிட்களின் விற்பனையுடனும், இ-வெரிடோ எலக்ட்ரிக் கார் 7 யூனிட்களின் விற்பனை உடனும் உள்ளன. மராஸ்ஸோ 2 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Newly launched xuv700 boosted sales for mahindra
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X