Just In
- 30 min ago
ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
- 1 hr ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 2 hrs ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 3 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
Don't Miss!
- Finance
ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு.. இனி மக்கள் நிம்மதியாக இருக்கலாம்..!!
- Movies
ஜெயிலர் படத்தில் இவங்க தான் ஹீரோயினா? இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலையே.. முதல்முறையாக ரஜினியுடன்!
- News
தமிழக பொறியியல் கலந்தாய்வு.. கல்லூரிகளில் 7 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் இடங்கள் காலி
- Sports
சிஎஸ்கே வீரர் அதிரடி.. 9 மாதத்திற்கு பிறகு டி20 விளையாடிய வில்லியம்சன்.. வெஸ்ட் இண்டீஸ்க்கு சோகம்
- Technology
நோ, நோ, தோற்ற இடத்திலேயே ஜெயிப்போம்., இது நல்ல பாடம்: ISRO வின் அடுத்த பிளான்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
காலரை தூக்கி விடுங்க... தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த ஜப்பான் நிறுவனம்... என்னனு தெரியுமா?
ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று நிஸான் (Nissan). ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனம் இந்திய சந்தையிலும் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக நிஸான் நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இங்கு கார்களை விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, நிஸான் நிறுவனம் உற்பத்தியும் செய்து கொண்டுள்ளது.

இந்த சூழலில், இந்தியாவில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக 1 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்து, நிஸான் நிறுவனம் தற்போது புதிய மைல்கல்லை கடந்துள்ளது. 1 மில்லியன் என்பது 10 லட்சம் கார்கள் ஆகும். இது இந்தியாவில் நிஸான் நிறுவனம் உற்பத்தியை தொடங்கியதில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஆகும்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில்தான் நிஸான் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அத்துடன் ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளுக்கும் நிஸான் நிறுவனம் இங்கிருந்து கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

இது மட்டுமல்லாது லத்தின் அமெரிக்க நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள நாடுகளுக்கும் நிஸான் நிறுவனம் சென்னை தொழிற்சாலையில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்கிறது. ஒட்டுமொத்தமாக சென்னை தொழிற்சாலையில் இருந்து 108 உலக நாடுகளுக்கு நிஸான் நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து கொண்டுள்ளது.

108 உலக நாடுகளில், நிஸான் நிறுவனத்தின் ''மேட்-இன்-தமிழ்நாடு'' கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தமிழகமும், தமிழர்களும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. நிஸான் நிறுவனம் இந்திய தொழிற்சாலையில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யும் பணிகளை கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

அப்போதில் இருந்து, வெளிநாடுகளுக்கு 10 லட்சம் கார்கள் ஏற்றுமதி என்ற மைல்கல்லை, நிஸான் இந்தியா நிறுவனம் சுமார் 12 ஆண்டுகளில் கடந்துள்ளது. நிஸான் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையின் மூலமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவும் அருமையான விஷயம்தான்.

தற்போதைய நிலையில் நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் (Nissan Magnite) கார் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்திய சந்தையில் பிரபலமாக இருப்பதுடன், இந்தியாவில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மிகவும் முக்கியமான நிஸான் காராகவும் மேக்னைட் திகழ்ந்து கொண்டுள்ளது.

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். இந்திய சந்தையில், ரெனால்ட் கைகர் (Renault Kiger), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) போன்ற கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.

இதுதவிர டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்களும் நிஸான் மேக்னைட் காரின் மிக முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன. இவை அனைத்துமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்கள் ஆகும். எனவே இந்திய சந்தையில் மிகவும் பலமான போட்டியை நிஸான் மேக்னைட் கார் சந்தித்து வருகிறது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ போன்ற முக்கியமான கார்களின் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடல்களின் வருகை காரணமாக நிஸான் மேக்னைட் காருக்கு போட்டி இன்னும் அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு உள்ளது.

இதை புரிந்து கொண்டுதான், நிஸான் நிறுவனம் மேக்னைட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் காரின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், மிகவும் குறைவான விலை மிக முக்கியமான காரணம் ஆகும். இந்திய வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில், மேக்னைட் காரின் விலையை நிர்ணயம் செய்து நிஸான் அசத்தி விட்டது.
-
ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?
-
விபத்து நடந்தா காசு மட்டும் கொடுத்து ஏமாறாதீங்க... என்ன செய்யனும்னு இங்க பாருங்க...
-
வெளியானது அதிரடி உத்தரவு... இனி வண்டிகளை நிப்பாட்டி காசு வசூல் பண்ண முடியாது... போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க!